Friday, April 06, 2012

ஜிமெயில் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

ஜிமெயில் ரகசியங்கள்-8
ங்கள் ஜிமெயில் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

   ஹேக்கிங்க் என்கிற வார்த்தை இணைய உலகில் மிக பிரபலம்.ஒருவரின் உரிமை இல்லாமல் அவரது "ஆன்லைன் அக்கவுன்ட்" டை பயன்படுத்தி பல திருட்டுத்தனங்களை செய்வது  ஹேக்கிங்க் எனப்படும்.
 உங்களது ஜிமெயில் அக்கவுன்டை பயன்படுத்தி ஹேக்கர் என்ன செய்து விடப்போகிறார் என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.உங்கள் ஜிமெயில் அக்கவுன்டை ஹேக் செய்யும் ஹேக்கர் ஒரு தீவிரவாதியாகக் கூட இருக்கலாம்,நம் அரசியல் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் மெயில்களை அனுப்புகிறார் என்று வைத்து கொள்வோம்.....
 பயப்பட வேண்டாம்,இது போல நடக்க வாய்ப்
புகள் குறைவு தான், நாம் பல வகைகளில் ஜிமெயில் தபால் சேவையை சார்ந்து உள்ளோம் ,அது நம் எதிரியால் கையகப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டால் நம் பாடு ரொம்ப கஷ்டம்...

சரி சுத்தி வளைக்காம மேட்டருக்கு வா...

ம் ஜிமெயில் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா?, இல்லையா? என தெரிந்துகொள்ள நம் ஜிமெயிலே வழி செய்துள்ளது.

படி1 : ஜிமெயில் அக்கவுன்ட் க்குள் நுழைந்த உடன் அதன் கீழ் பகுதியில் இருக்கும்,Details என்கிற லிங்க் -ஐ கவனிக்கவும்.உங்களது ஜிமெயில் அக்கவுன்ட் கடைசியாக எந்த IP முகவரியிலிருந்து open செய்யப்படுள்ளது என்று அதன் அருகே குறிப்பிட பட்டிருக்கும்.

படி2 : Details லிங்க் -ஐ க்ளிக் செய்யவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி Recent actiity open ஆகும்.


அதில் உங்கள்

  • ஜிமெயில் அக்கவுன் எங்கிருந்தெல்லாம் பார்க்கப் பட்ட்து
  • மொபைல் மூலம் பார்க்கப்பட்டதா அல்லது கணினி மூலம் பார்க்கப்பட்டதா
  • ஒபன் செய்த நேரம் போன்ற விவரங்கள் கிடைக்கும்.

இவைகளை கவனமாக கவனிக்கவும்.

இது உங்கள் சந்தேகத்திற்கு இடமாக இருப்பின் உங்கள் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நீங்கள் யூகிக்கலாம்.

சில சமயங்களில் உங்கள் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஜிமெயில் எச்சரிக்கை தரும்.

குறிப்பு: Location ஐ தெளிவாக தெரிந்து கொள்ள whois.domaintools.com போன்ற ஆன்லைன் IP finder களை பயன்படுத்தலாம்.           .

படி 3: உங்கள் ஜிமெயில் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம் இருப்பின் உடனே உங்கள் பாஸ்வேர்டை மாற்றி விடவும்,(வேற வழி இல்லைங்க).உங்கள் பாஸ்வேர்டை யாரும் யூகித்தறிய முடியாதவாறு தரவும்.

Labels: , ,

Monday, April 02, 2012

பதிவர்களுக்கு ஒரு பாராட்டு விழா

திவுலகில் நான் நடைபயில ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் பதிவுலகம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை,பதிவை எழுதி வைத்துவிட்டு "யாருமேயில்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துற" என்பது மாதிரி கடை விரித்து வைத்துவிட்டு ஈ ஓட்டிக்கொண்டிருந்தேன்.பதிவுலகின் ரகசியங்களை தெரிந்துகொள்ள எனக்கு சில காலம் எடுத்து கொண்டது.
திவுலகின் நுணுக்கங்களையும்,பதிவுகள் சம்பந்தப்பட்ட விசயங்களையும் கற்றுக்கொடுத்த  சக பதிவர்களுக்கும்,
நான் எழுதும் பதிவுகளுக்கு பின்னூட்டம் தந்து எனக்கு "முன்" ஊட்டமளித்த நன்பர்களுக்கும்,வாசகர்களுக்கும்,என்னை தொடரும் உறவுகளுக்கும் (Followers) என் மனமார்ந்த நன்றிகள்.

தண்ணீர்பந்தலை சேர்ந்த நன்பர் வெ.சுப்பிரமணி அவர்கள் தன் மனம் கவர்ந்த பதிவர்களில் 5 பேர்களில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்து எனக்கு "versatile blogger award" என்ற மகுடத்தை சூட்டி கௌரவித்திருந்தார்.

இந்த விருது பின்வரும் நிபந்தனைகளை உள்ளடக்கியது:

  • இந்த விருது சுழல் விருது,அதாவது இதை பெற்றவர் தன் கவர்ந்த 5 பதிவர்களுக்கு இதை வழங்க வேண்டும்,
  • அது மட்டுமின்றி தனக்கு பிடித்த ஏழு விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த விருதை நான் என் மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் எனக்குப் பிடித்த 7 விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

1.என்னை புதுப்பிக்க புத்தகங்களை படிப்பது .
2.என்ன தகவல் கேட்டாலும் சளைக்காமல் தரும் இணைய உலகில் உலா வருவது.
3.கடலோரம் அலை தீண்டி நடப்பது.
4.என்னை இழந்து கவிதை செய்வது.
5.மனதை திருடும் கவிதைகளை வாசித்து சுவாசிப்பது.
6.வாக்கியமும்,வாத்தியமும் சரியான விகிதத்தில் கலந்து செய்த பாடல்களை  ரசிப்பது.
7.ரசிகனாக இருப்பது

இப்பொழுது விருது வழங்க
 வேண்டிய தருணம்...



                    இது தாங்க அந்த விருது

விருதின் பெயர்: Versatile Blogger Award

இந்த விருதுக்கு தமிழில் என்னபெயர்??
"Versatile Blogger" என்ற ஆங்கில வார்த்தையை "சகலக்கலா பதிவர்" என்று சொல்லலாம்.

விருது பெறுபவர்கள் பட்டியல்.

   ஹுஸைனம்மா அவர்கள் என்னை மிகவும் கவர்ந்த பதிவர்களில் ஒருவர், அவரது சிந்தனைகள்,கோணங்கள்,பார்வைகள் வித்தியாசனமானவை,பரந்து விரிந்தவை .பொதுவாக அவர் தனது அனுபவங்களையும்,தான் பெற்ற படிப்பினைகளையும்,தன் கருத்துக்களையும் தன் வலைப்பூவில் பகிர்ந்துள்ளார். பதினேழாம்வாய்ப்பாடு என்னும் தலைப்பில் தோனி திரைப்படத்திற்கு அவர் எழுதியிருக்கும் விமர்சனம் மிக வித்தியாசமானதாக இருந்தது ,மேலும் "தமிழ் எனும் மெஷின்லாங்குவேஜ்" என்கிற தலைப்பில் அவர் பகிர்ந்துள்ள கட்டுரை என்னை வெகுவாக கவர்ந்த மற்றும் சிந்திக்க வைத்த கட்டுரைகளில் ஒன்று. ஹுஸைனம்மாவுக்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

 ம் தமிழ் பதிவுலகின் இளம் பதிவர்களில் ஒருவர் தொழில் நுட்பம்,சினிமா,பிளாக்கர் டிப்ஸ் என பல விசயங்களை தன் வலைப்பூவில் பதிந்துள்ளார்.இவர் வழங்கும் "டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்" கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.சதிஷ் -க்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

     விஞர் கௌரமி அவர்கள் தன் கவிதைகளை சிதறல்களாக தன் வலைப்பூவில் பதிந்து வருகிறார்,அவரது கவிதைகள் சமூக விழிப்புணர்வு,காதல்,இயற்கை...என சகலமும் பேசும். மாற்றம் (லிங்க்) என்கிற தலைப்பில் அவர் படைத்த கவி, என்னை பாடய் படுத்திய கவிதைகளில் ஒன்று. எல்லைகள் இல்லாத கற்பனை வெளியில் கவிதைகளை பெற்று வந்து வாசகர்களுக்கு விருந்தளிக்கும் அவரது முயற்சிக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

    இவரது பதிவுகள் நம்மை நிச்சயம் சிந்திக்க வைக்கும்,தன் கருத்துக்களை,சிந்தனைகளை கவி வடிவில் படைத்து,படிப்பவர்களை செதுக்கும் முயற்சியில் உள்ள மாலதி அக்காவுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.

  நான் ஒரு மின் மற்றும் மின்னணு பொறியியல் மாணவன்,"மின்னியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தமிழ் வலைப்பூக்கள் இல்லையே !!" என்ற என் தேடலின் பயனாக கிடைத்த வலைப்பூ இது..எந்த வொரு விஷயமானாலும் நாம் தாய் மொழி வாயிலாக சிந்திக்கும் போது நமக்கு சிறந்த தீர்வுகள் கிடைக்கும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.தமிழ் வழி மின் கல்வியை சொல்லி தரும் அண்ணனுக்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,விருதும்.


நன்பர்களை விருதுகளை ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும்  இதை தங்கள் மனம் கவர்ந்த ஐந்து பதிவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Labels: