அப்துல் கலாம் இறக்கவில்லை !!
எழுந்திரிச்சு
வாருமய்யா !
--------------------------------------------------
கண்டதையும்
எண்ணி மனம்
கவலை கொண்ட
வேலையிலே
கனவின்
விதையெடுத்து
கண்களில்
விதைத்தவனே
கண்ணுறக்கம்
கொண்டாயோ !
நம்பிக்கை
ஒளியிழந்து
சோர்ந்திருந்த
பொழுதுகளில்
வார்த்தைகளாய்
வந்தெனக்கு
நல் வாக்கு
கொடுத்தவனே
கண்ணுறக்கம்
கொண்டாயோ !
நீ பிறந்த
மண்ணினிலே
பிறந்தவன்
நானென்று
பெருமை பாடி
நான் திரிய
புகழ சேர்த்து
வச்சவனே
கண்ணுறக்கம்
கொண்டாயோ !
வாழ்ந்து கெட்ட
தேசமிது
மறுபடியும்
வாழுமென்று
வாக்கு ஒன்னு
கொடுத்தாயே !
நீ கண்ட
பெருங்கனவ
நெசமாக்கிப்
பார்க்குமுன்னே
என்னையா அவசரம்
உனக்கிப்ப
கண்ணுறங்க !
பாரத தேசமிதை
பார்புகழும்
நாள் காண
நீ இங்கு
வேணுமய்யா !
உன் கனவு நெசமாகும்
எழுந்திரிச்சு
வாருமய்யா !
நீ விதைச்ச
விதையெல்லாம்
நாளைக்கு
மரமாகும்
முளைச்ச
மரமெல்லாம்
உனைப் பார்க்க
உயிரேங்கும்
எழுந்திரிச்சு
வாருமய்யா !
விழிப்பில்லா
தூக்கம் கொண்டு
நீ தூங்கி
விட்டதாக
எல்லோரும்
சொல்லுறாங்க
அவங்க வாக்கைப்
பொய்யாக்க
எழுந்திருச்சு
வாருமய்யா !
யார் யாரோ
வந்தாங்க
யார் யாரோ
போனாங்க
நடமாடும்
உயிராக
நான் பார்த்த
ஒரு தலைவன்
நீ மட்டும்
தானய்யா !
கோடித்துளி
கண்ணீர் கொட்டி
தேசமே
அழுகுதய்யா !
எழுந்திரிச்சு
வாருமய்யா !
மாணவர்கள்
மத்தியிலே
பேசிக்கொண்டே மறஞ்சுப்போக
பேச்சோடு பேச்சாக
மூச்சோடு மூச்சாக
காத்தோடு கரைஞ்சுப் போக
கனவெதுவும்
கண்டீரோ !
உன்னதமானவர்களின்
உன்னத கனவுகள்
உண்மையாகுமென்று
உரைத்துப்போனவரே
!
உம் கனவு
பலிக்குமென்று
எனக்கு
நம்பிக்கை இருக்குதய்யா !
எழுந்திரிச்சு
வாருமய்யா !
![]() |
(தலைவனே உம்மை தலைவணங்குகிறேன். நீ இறக்க மாட்டாய் என எப்போதும் நம்புகிறேன்) |
Labels: அப்துல் கலாம், இரங்கற்பா, கவிதை