அப்துல் கலாம் இறக்கவில்லை !!
எழுந்திரிச்சு
வாருமய்யா !
--------------------------------------------------
கண்டதையும்
எண்ணி மனம்
கவலை கொண்ட
வேலையிலே
கனவின்
விதையெடுத்து
கண்களில்
விதைத்தவனே
கண்ணுறக்கம்
கொண்டாயோ !
நம்பிக்கை
ஒளியிழந்து
சோர்ந்திருந்த
பொழுதுகளில்
வார்த்தைகளாய்
வந்தெனக்கு
நல் வாக்கு
கொடுத்தவனே
கண்ணுறக்கம்
கொண்டாயோ !
நீ பிறந்த
மண்ணினிலே
பிறந்தவன்
நானென்று
பெருமை பாடி
நான் திரிய
புகழ சேர்த்து
வச்சவனே
கண்ணுறக்கம்
கொண்டாயோ !
வாழ்ந்து கெட்ட
தேசமிது
மறுபடியும்
வாழுமென்று
வாக்கு ஒன்னு
கொடுத்தாயே !
நீ கண்ட
பெருங்கனவ
நெசமாக்கிப்
பார்க்குமுன்னே
என்னையா அவசரம்
உனக்கிப்ப
கண்ணுறங்க !
பாரத தேசமிதை
பார்புகழும்
நாள் காண
நீ இங்கு
வேணுமய்யா !
உன் கனவு நெசமாகும்
எழுந்திரிச்சு
வாருமய்யா !
நீ விதைச்ச
விதையெல்லாம்
நாளைக்கு
மரமாகும்
முளைச்ச
மரமெல்லாம்
உனைப் பார்க்க
உயிரேங்கும்
எழுந்திரிச்சு
வாருமய்யா !
விழிப்பில்லா
தூக்கம் கொண்டு
நீ தூங்கி
விட்டதாக
எல்லோரும்
சொல்லுறாங்க
அவங்க வாக்கைப்
பொய்யாக்க
எழுந்திருச்சு
வாருமய்யா !
யார் யாரோ
வந்தாங்க
யார் யாரோ
போனாங்க
நடமாடும்
உயிராக
நான் பார்த்த
ஒரு தலைவன்
நீ மட்டும்
தானய்யா !
கோடித்துளி
கண்ணீர் கொட்டி
தேசமே
அழுகுதய்யா !
எழுந்திரிச்சு
வாருமய்யா !
மாணவர்கள்
மத்தியிலே
பேசிக்கொண்டே மறஞ்சுப்போக
பேச்சோடு பேச்சாக
மூச்சோடு மூச்சாக
காத்தோடு கரைஞ்சுப் போக
கனவெதுவும்
கண்டீரோ !
உன்னதமானவர்களின்
உன்னத கனவுகள்
உண்மையாகுமென்று
உரைத்துப்போனவரே
!
உம் கனவு
பலிக்குமென்று
எனக்கு
நம்பிக்கை இருக்குதய்யா !
எழுந்திரிச்சு
வாருமய்யா !
![]() |
(தலைவனே உம்மை தலைவணங்குகிறேன். நீ இறக்க மாட்டாய் என எப்போதும் நம்புகிறேன்) |
Labels: அப்துல் கலாம், இரங்கற்பா, கவிதை
5 Comments:
அவர் நம்மை விட்டு பிரிக்க முடியாதவர்... மறைந்தது உடலலவில் மட்டுமே
அவர் நம்மை விட்டு பிரிக்க முடியாதவர்... மறைந்தது உடலலவில் மட்டுமே
அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...
இரங்கற்பா கண்ணீரை வரவழைத்து விட்டது .குடியரசுத் தலைவர் என்ற பதவிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.. நாடே கண்ணீரில் மூழ்கியுள்ளது
கலாம் அவர்களின் மரணச் செய்தி கேட்டவுடன், எனக்கும் 2020 ஆம் ஆண்டு வரை இருந்திருக்கலாமே என்று தான் தோன்றியது. என்ன செய்ய? நாம் கொடுத்துவைக்கவில்லை! அருமையான இரங்கற்பா எழுதியிருக்கிறீர்கள், விஜயன்!
கலாமின் கனவுகள் உங்களைப் போன்ற இளைஞர்களால் நனவாகட்டும்!
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home