தேசியக்கொடி சர்ச்சைகள்...
கடந்த வாரம் வாட்ஸ்அப் - ல் (Whatsapp) நன்பர்கள் சிலபேரிடம் இருந்து முகப்புப் படமாக (புரொபைல் பிக்சராக) தேசியக் கொடியை வைக்கச்சொல்லி பார்வர்ட் மெசெஜ்கள் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தன...
சில பல நண்பர்களின் முகப்புப் படங்கள் தேசியக் கொடிகளாக மாறியும் இருந்தன ...
ஓரிரு நாட்கள் முன்பு ...
" இந்திய தேசத்தின் கொடியை புரொபைல் பிக்சராக அல்லது டிஸ்ப்ளே பிக்சராக வைப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மற்றும் தேசியக் கொடியை அவமானப் படுத்துவதாகும்"
என்பதாக ஒரு செய்தி பரப்பப் பட்டு , சமூக வலைத்தளங்களில் மற்றும் வாட்ஸப் போன்ற மெசெஞ்சர் அப்ளிகேசன்களில் முகப்புப் படமாக வைக்கப்பட்டிருக்கும் தேசியக் கொடியின் படத்தை மாற்ற சொல்லி நன்பர்களிடையே தகவல் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது...
பிரச்சினைகள்,கலவரங்கள்,சர்ச்சைகள் என திடீரென எதையாவது கிளப்பி விட்டுவிட்டு ஓரிரு நாட்கள் அதை பரபரபாக்கி வேடிக்கைப் பார்த்தும் ,வெட்டிப் பேச்சுகள் பேசியும் பொழுதுபோக்குவது நம் இந்திய தேசியத்தின் தேசியக் கலாச்சாரமாகவே உருவெடுத்துவிட்டது.
அந்த வகையறாவில் தான் இந்த "சமூக வலைத்தள - தேசியக்கொடி " விசயத்தையும் சேர்க்க வேண்டும்.
நம் தேசத்தவர்கள் எதில் ஒற்றுமையாக இருக்கிறோமோ இல்லையோ, இந்த மாதிரி புரளிகளை கிழப்புவதில் ஒற்றுமையாக இருக்கிறோம்.
உண்மையிலேயே புரொபைல் படமாக தேசியக்கொடியை வைப்பது என்பது சட்டப்படி குற்றமா ?
இது சட்டப்படி தவறு தான் எனச்சொல்லி வாதிடுபவர்கள்
இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் இருக்கும்...
"தேசியக் கொடிக்கு சுமத்தப்படும் அவமானங்கள் தடுப்புச்சட்டம் 1971 -ன் படி தேசியக் கொடியை தனிநபர் அல்லது குழு சார்ந்த அடையாளமாக பயன்படுத்துவது அதை அவமானம் செய்வதாகும்"
என்கிற வாதத்தை எடுத்து வைக்கிறார்கள். இது அரைக்கிணறு தாண்டுகிற அரைகுரைகளின் வாதம்
இந்தக் கூற்று சரி தான் என்றாலும் , இதற்கு பின் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தங்கள் , தேசியக் கொடியை தேசப்பற்றின் அடையாளமாகப் பயன்படுத்தவதை ஆதரித்து பேசுகின்றன.
நவீன் ஜின்டால் என்ற தொழிலதிபரின் முயற்சியின் பலனாக 2002 -ல் "Flag code of india " என்கிற சட்டத்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பழைய தேசியக் கொடி சட்டங்களுக்கு மாற்று என்பதாக அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.(இதன் PDF வடிவ கோப்பின் லிங்க் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது).
![]() |
போராடி வென்ற ஜின்டால் |
2002 Flag code of India சட்டத்திருத்தத்தில் எவை எல்லாம் தேசியக் கொடியின் மீதான அவமானங்கள் என ஒரு பெரிய பட்டியலே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் சிந்திக்கும் போது
- கொடியில் எந்தவித கிருக்கல்களோ, உருச்சிதைவுகளோ இல்லாத பட்சத்தில்
- சரியான நிற அமைப்பில், தோற்ற அமைப்பில், சரியான முறையில்
- வர்த்தக காரணம் ஏதும் இல்லாத பட்சத்தில்
- அவமரியாதையான முறையில் இல்லாத பட்சத்தில்
தேசத்தின் மீதான மரியாதை,கௌரவம்,பற்று நிமித்தமாக தனி நபர் ஒருவர் காட்சிப் பொருளாக தேசியக் கொடியைப் பயன்படுத்துவது தவறு இல்லை.
அதுமட்டுமின்றி தேசியக் கொடிக்கு சுமத்தப்படும் அவமானங்கள் தடுப்புச்சட்டம் - 1971 -ல் 2005 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட , சட்டத் திருத்தம் இந்தியக் குடிமக்கள் தங்கள் உடைகள்,தொப்பிகள் போன்றவற்றில் அவமரியாதையற்ற முறையில் தேசியைக் கொடியை வைத்துக் கொள்ளலாம் எனவும் அனுமதியளிக்கிறது.
தேசியக்கொடி பற்றிய அடிப்படை அறிவு :
நம் பள்ளிக்கூட பாடப்புத்தகங்களில் சட்டம் சார்ந்த அடிப்படை விசயங்கள் கட்டாயம் சொல்லித்தரப் பட வேண்டும். காலாவதியான சட்டங்களைப் பற்றியெல்லாம் இருக்கும் பாடங்களை மாற்றிவிட்டு புதிய சட்டத்திருத்தங்கள் பற்றிய பாடங்கள் இடம் பெற வேண்டும். (இதற்கு ஆண்டுக் கணக்கில் அதே புத்தகத்தை வைத்து பாடம் நடத்தும் சம்பிரதாயம் ஒழிய வேண்டும்).
கைத்தறி துணியினால் (காதி கதர் / பருத்தி / பட்டு / கம்பளித் துணி) உருவாக்கப்பட்ட தேசியக்கொடியை மட்டுமே பறக்கும் கொடியாக , கொடியேற்றம் செய்கிற கொடியாக பயன்படுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் 3 ஆண்டு வரை சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
-என்று ஒரு சட்டம் இருப்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்.
அவ்வப்போது யாராவது ஒரு பிரபலம் தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்யும் செய்திகள் அல்லது தேசியக் கொடியின் முறையற்ற பயன்பாடு பற்றிய செய்திகள் மீடியாக்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
![]() |
போஸ்டரில் கொடி |
- தேசியக்கொடியை நடிகை ஒருவர் சேலையாகக் கட்டிக் கொண்டு வந்தது
- பிறந்த நாள் விழாவின் போது கிரிக்கெட் வீர்ர் ஒருவர் தேசியக் கொடியை கேக்காக்கி வெட்டியது
- பிரபல பாடகி ஒருவர் தேசியக் கொடி நிறத்தில் பொட்டு வைத்துக் கொண்டு வந்தது
- விளையாட்டு வீராங்கனை ஒருவர் தேசியக்கொடிக்கு நேராக கால் நீட்டியது
- திரைப்பட போஸ்டரில் தேசியக்கொடியை தவறாக பயன்படுத்தியிருந்தது
இப்படி நிறைய செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன
இரண்டொரு நாள் செய்திகளில் பரபரப்பாக பேசப்படுவதோடு இவற்றை கடந்துவிடுகிறோம், மறுபடியும் இதுபோன்ற செய்திகள் மீடியாக்களில் வரும் போது மீண்டும் பர பர ஆகிறோம்...
தேசியக்கொடி விசயத்தில் இவை இவையெல்லாம் தவறு , இவை இவையெல்லாம் சரி என்கிற அடிப்படை புரிதல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தெரிந்திருக்க வேண்டும். தெரியப்படுத்தப் பட வேண்டும். இது அரசின் கடமையா ? இல்லை குடிமகனின் கடமையா ? என்கிற விவாதங்களையெல்லாம் விடுத்து தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
சுதந்திர தின வாழ்த்துக்கள்
Flag Code of India,2002 தரவிரக்கம் (PDF வடிவம்)
Reference (indian constitutition) :
- the provisions of the Emblems and Names (Prevention of Improper Use) Act, 1950 (No. 12 of 1950)
- the Prevention of Insults to National Honour Act, 1971 (No. 69 of 1971).
- Flag Code of India,2002
நன்றி :
Labels: independence day, suthanthira thinam
5 Comments:
# தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். #
உங்கள் பதிவின் மூலமாய் பல விசயங்களை தெரிந்து கொண்டேன் !
த ம 1
பயனுள்ள பதிவு நண்பா!
நல்ல தகவல்
நீண்ட நாட்கள் ஆயிற்று. விஜயன் எப்படி இருக்கிறாய்?
தேசியக் கொடி பயன்படுத்துவது பற்றிய தகவல்கள் உண்மையில் அனவைரும் அறிய வேண்டுவன ஆகும்.
போஸ்டரில் ஒரு பெண்மணி கொடியை ஆடையாக போர்த்தி இருப்பது தேசியக் கொடிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. இவற்றை தவிர்த்தல் நல்லது.
கிழப்புவதில்--- கிளப்புவதில்...
பயனுள்ள பதிவு நண்பா... தொடர்ந்து எழுது...!
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home