Sunday, March 02, 2014

ஸச்சி பாப்பா (குட்டிக்கதை)


 
ம்பி பாப்பா பிறந்ததிலிருந்து தினந்தோறும் தன் அம்மாவையையும் ,அப்பாவையும் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருந்தாள் நான்கு வயது ஸச்சி .

"ப்ளீஸ் ம்மா, ப்ளீஸ் ப்பா என்னை தம்பி பாப்பாக் கூட தனியா விடுங்களேன்... !"

மற்றக் குழந்தைகள் செய்வது மாதிரியே ,தனக்கு அடுத்ததாக பிறந்திருக்கும் தம்பி பாப்பா மீது பொறாமை கொண்டு ,அவன் தோள்களை பிடித்து உலுக்கவோ,அவனை அடிக்கவோ,உதைக்கவோ அவள் செய்யக்கூடலாம் என்ற அச்சம் அவளது பெற்றோர்களின் வாயிலிருந்து "...அதெல்லாம் முடியாது ! " என்கிற வார்த்தையாக வெளிப்பட்டது. ஆனால் அவளிடம் பொறாமைக்கான அறிகுறிகள் துளி அளவு கூட இருந்திருக்கவில்லை.,

பாப்பாவோடு தனியாக இருக்க வேண்டுமென்ற அவளது வேண்டுகோள் மெய்ப்பட வேண்டுமென்ற அவசரம் அவளுக்குள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பாப்பாவை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆரம்பித்தாள்

நகர ஆரம்பித்தன நாட்கள்...

அவளது பெற்றோர்கள் இப்போது அவளை தம்பி பாப்பாவோடு தனியாக இருக்க அனுமதித்திருந்தார்கள்

தனிமை - தம்பி பாப்பா -ஸச்சி

அளவிலா சந்தோசம் அவளுக்குள்,தன் தம்பி பாப்பாவின் அறைக்குள் சென்று மெல்லக் கதவைச் சாத்திக்கொண்டாள்.., "உள்ள போயி இவ என்ன பண்ணப்போறா ??..." என்று ஆர்வமாய் இருந்த அவள் பெற்றோருக்கு அவள் செய்கையை கவனிக்கவும் ,அவள் சொல்வதைக் கேட்கவும் கதவில் இருந்த சிறு இடைவெளி ஒன்று கைகொடுத்த்து. கதவின் இடுக்கு வழியாகக் கண்களை செழுத்தி எட்டிப் பார்க்கிறார்கள் ஸச்சியின் அம்மாவும் அப்பாவும்.

தன் தம்பிப் பாப்பாவை நோக்கி மெல்ல நடக்கிறாள்.... ,தன் முகத்தை தன் தம்பியின் முகத்திற்கு மிக அருகில் மெதுவாக கொண்டு சென்று சின்னக்குரலெடுத்து மழலை பேச ஆரம்பிக்கிறாள் "பாப்பா !! பாப்பா !! நான் ஒன்னு கேப்பேன்... சொல்லுவியா.. இந்த கடவுளு இருக்காருல... கடவுளு... அவரு எப்படி பாப்பா இருப்பாரு?? எனக்கு கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டே இருக்கு.... சொல்லுவியா ?? "


Adopted from The Story : “Sachi” by Dan Millman
From The Book : Chicken Soup for Souls
மொழியாக்கம் :விஜயன்




Labels: , , , ,

7 Comments:

At Sun Mar 02, 07:22:00 pm , Blogger Priya said...

இந்த கடவுளு இருக்காருல... கடவுளு... அவரு எப்படி பாப்பா இருப்பாரு?? எனக்கு கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டே இருக்கு.... சொல்லுவியா ?? "/// இருக்கிறாரா என்பதே என் நீண்ட நாள் சந்தேகம்... ஹ்ம்ம்ம்

 
At Sun Mar 02, 07:50:00 pm , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ஆர்வத்துடன்...!

 
At Sun Mar 02, 10:52:00 pm , Blogger சீனு said...

இப்போ மொழியாக்கத்தில் இருந்து மொழிபெயர்த்தல் நோக்கியா :-)

 
At Sun Mar 02, 10:59:00 pm , Blogger Unknown said...

அம்மா வயிறுக்குள் நீ எங்கே இருந்து வந்தேன்னு கேட்கும் என நினைத்தேன் !
த ம 4

 
At Mon Mar 03, 08:41:00 am , Blogger கார்த்திக் சரவணன் said...

எதையோ எதிர்பார்த்து ஏமாந்தது போல் இருக்கிறது....

 
At Mon Mar 03, 12:02:00 pm , Blogger Ranjani Narayanan said...

ஸ்கூல் பையனின் கருத்துடன் ஒத்துப்போகிறேன். ஆனாலும் சற்று யோசித்துப்பார்க்கையில் பிறக்கும்போது - குழந்தையும் தெய்வமும் ஒன்று - நம்மிடம் இருக்கும் வெகுளித்தனம் மறைந்து, தகிடுதத்தம் செய்ய ஆரம்பிக்கிறோம், அதை உணர்ந்து இந்தக் குழந்தை கேட்கிறதோ, என்று தோன்றுகிறது.
ஒவ்வொரையும் ஒவ்வொரு மாதிரி சிந்திக்க வைப்பதால், இந்த கதை வெற்றி பெறுகிறது.

 
At Wed Mar 05, 09:02:00 pm , Blogger வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.....

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home