சிட்டுக்குருவியின்
வானம் (1.1)
எவளோ ஒருத்தி !!
எங்கே
பார்த்தாலும்,எந்தப் பக்கம் பார்த்தாலும் எவளோ ஒருத்தி எப்போதும்
சிரித்துக்கொண்டிருக்கிறாள்.அரைகுறை ஆடையுடனோ,ஆள் மயக்கும்
புன்னகையுடனோ,பகிரங்கமான அங்க அரங்கேற்றத்துடனோ கண்டவனின் கண்களை மட்டுமின்றி
கண்டவனையே கொள்ளை கொள்வது மாதிரி...
சுவர் வரைபடமாக, வாரப்பத்திரிகை அட்டைப்படமாக,
சினிமா போஸ்டராக விளம்பர பேனராக,கவர்ச்சி நடிகையாக,ஹீரோயினாக,மாடலிங்க் மங்கையாக ,இன்னும் உள்ள ஏதோ
ஒன்றாக எவளோ ஒருத்தி எப்போதுமே என் பார்வையில் மட்டுமின்றி எல்லோரது பார்வையிலும்
பட்டுக்கொண்டே இருக்கிறாள் முந்தின பத்தியில் பார்த்த மாதிரியாக..
ஆண்களுக்கான செருப்பு விளம்பரம்,ஆண்களுக்கான
உள்ளாடை விளம்பரம் ,என்று பெண்கள் தேவையே இல்லாத விளம்பரத்துக்கு கூட விளம்பரத்துக்காக அரைகுறை ஆடை அணிந்த அம்மணி
ஒருத்தி தேவைப்படுகிறாள்.
உங்கள் வீட்டில் பழைய வார ,மாத இதழ்கள் இருக்க
கூடுமானால் அதை பரப்பிப் போட்டு ஒரு பார்வை இடுங்கள், முக்கால் வாசியில் அந்த
"எவளோ ஒருத்தி" இருந்தே தீருவாள்.
அட்டைப்பட அழகிகள் |
அதெல்லாம்
சரி...
"எவளோ
ஒருத்தி எப்படி இருந்தாள் உனக்கென்ன வந்தது?" என்று நீங்கள் என்னைக் கேட்க முயலலாம் ., இதே
கேள்வியை நானும் கூட என்னிடம் கேட்கத்தான் செய்கிறேன்!, என்ன செய்ய?? , நம்மவர்கள்
மோசம் போய் கிடக்க அந்த "எவளோ
ஒருத்தி" மறைமுகமாக நேரடி காரணமாக இருக்கிறாள் எனும் போது கேள்வி கரைந்து
காலியாகி விடுகிறது!!
எவளோ ஒருத்திக்காக நான் ஏன் புலம்ப வேண்டும் !!!...
சமீப காலமாக செய்தி தாள்களில் வெளியாகும் செய்திகளில்
சிலவற்றை என்னால் வாசிக்க முடிவதே
கிடையாது,தலைப்பே தடுமாற செய்து விடுகிறது,.
கற்பழிப்பு,பாலியல் வன்முறை, தற்கொலை..
சில சமயம் தவறிப்போய் செய்திக்குள் நுழைந்தால் கோபப்படவும், வருத்தம்
கொள்ளவும்,அடுத்தவரிடம் அந்த செய்தியைக்காட்டி ஆதங்கப் படவும் மட்டுமே என்னால்
முடிகிறது என்று என் மீதே கோபம் கோபமாக வருகிறது.,
யாரோ ஒருவரின் வாழ்வில் ஆணிவேரையே பிடுங்கும் படியாக இருக்கும் அந்த அதிர்ச்சி செய்திகளை என்னைப்போலவே நம்மில் பெறும்பாலானோர்,காபி,டீ,அரட்டை என அசல்டாக கடந்துவிடத்தான் செய்கிறோம் தினம் தினம்...
முகமறியாத எவளோ
ஒருத்தியின் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைக்கு பின்னால் அரைகுறையோடு
கவர்ச்சியாக அங்கம் காட்டும் முகம் தெரிந்த அந்த எவளோ ஒருத்தியின் சிரிப்பு
இருக்கத்தான் செய்கிறது, நானோ,நீங்களோ இல்லையென்று அடித்துக் கூறினாலும் கூட..
பாரத மாதா அழுது கொண்டிருக்கிறாள்... |
(இன்னும் பார்க்கலாம் விரிவாக...)
சிட்டுக்குருவி சிறகடிக்கும்
படங்கள் உதவி:
1.http://www.canada.com/story.html
2.indiatimes.com
3.http://dinasarinews.blogspot.in/2013/07/12.html
Tweet |
ஒழுக்கச் சீர்கேடு.
ReplyDeleteவணிகமயமாகி விட்ட உலகம்.
:(
Deleteஒழுக்க சீர்கேடுதான் அனைத்திற்கும் காரணம்... அந்த எவளோ ஒருத்தியை போட்டால் தானே நல்ல விளம்பரம் கிடைக்கிறது. இன்று கூட பாருங்கள் உங்கள் பதிவைப் படிப்பவர்களை விட அந்த பீர் பட அழகியை பார்க்க வருபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்...
ReplyDeleteஒழுக்க சீர்கேடுதான் அனைத்திற்கும் காரணம்... அந்த எவளோ ஒருத்தியை போட்டால் தானே நல்ல விளம்பரம் கிடைக்கிறது. இன்று கூட பாருங்கள் உங்கள் பதிவைப் படிப்பவர்களை விட அந்த பீர் பட அழகியை பார்க்க வருபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்...
ReplyDeleteஉண்மை தான் , வெற்றி , இந்த விசயத்தை பற்றி அடுத்த பதிவில் விரிவாக பேசலாம்
Deleteஒழுக்கச் சீர்கேடு.
ReplyDelete//முகமறியாத எவளோ ஒருத்தியின் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைக்கு பின்னால் அரைகுறையோடு கவர்ச்சியாக அங்கம் காட்டும் முகம் தெரிந்த அந்த எவளோ ஒருத்தியின் சிரிப்பு இருக்கத்தான் செய்கிறது, நானோ,நீங்களோ இல்லையென்று அடித்துக் கூறினாலும் கூட..//
ReplyDeleteஇதையேதான் நானும் சொல்கிறேன். இவர்களை முதலில் தூக்கில் போட வேண்டும்
kalavathy karthikeyan
அப்படி சட்டுபுட்டுனு சாகடிக்கும் முடிவுக்கு வரமுடியாது !!,:) அடுத்த பதிவில் இது பற்றி பேசலாம்...கருத்துக்கு நன்றி கார்த்திகேயன்.
Deleteஇன்றைக்கு அதிகமாகிக் கொண்டிருப்பது மேலும் கொடூரம் ...
ReplyDeletehang these dirty lady actors.They are the main cause for all these crimes.
ReplyDelete:(
ReplyDeleteவருத்தம் தான் மிஞ்சுகிறது விஜயன். இப்படி நடிக்கும் பெண்களை மட்டுமே குறை சொல்லிவிடமுடியாது. ஆண்களுக்கு இது தான் பிடிக்குமென விளம்பரம் எடுக்கும் நிறுவனங்களின் மனப்பாங்கும் மாற வேண்டும். மொத்தமாய் எல்லாமும் மாறினால் தான் நல்லது.
#அபார்ஷன் ரகசியம் புருஷனுக்குத் தெரிந்தால் ...'ப்பூ ..உனக்கு அபார்ஷன்தானே ஆயிருக்கு ?எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்கு 'ன்னு சின்ன வீட்டு ரகசியமும் வெளிவரலாம்!ஏன்னா ,நம்ம பெருமைமிகு புண்ணிய பாரத நாட்டில் இப்படிப்பட்ட கலாச்சாரப் புரட்சி நடந்துகிட்டு இருக்கு !#
ReplyDeleteஇது நான் சிறிது நேரத்திற்கு முன் எழுதியது ..உங்கள் பதிவுக்கும் பொருந்துகிறதே !
http://jokkaali.blogspot.com/2013/09/blog-post_9024.html
அன்பின் விஜயன் - நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது - விளம்பரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteசரிய சொன்னீங்க
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதனி ஒரு நபரால் பேசவும் புலம்பவும் மட்டுமே முடியும் முயற்சி செய்வோம் விளம்பர படங்களை அறவே ஒழிப்பதற்கு. தங்களின் பதிவு மற்றவர்களையும் முயற்சி செய்ய அழைக்க வாழ்த்துக்கள் :goodpost:
ReplyDeleteமிகுந்த சமூக அக்கறையுடன் பதிவு செய்திருக்கிறீர்கள், விஜயன். உங்கள் வருத்தம் நம்மில் பலருக்கும் உண்டு. என்ன செய்யலாம் என்றும் எழுதுங்கள்.
ReplyDeleteஉண்மையான விடயம்.. விளம்பர படங்களைப் பார்க்கும் போது எனக்கும் தோன்றுவது இது ஆண்கள் உபயோகிக்கும் பொருட்களின் விளம்பரத்திற்க்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பது உண்டு..இங்கே அனைதிர்க்கும் ஒரு கவர்ச்சி தேவைப்படுகிறது.. பெண்களின் அங்கங்களை காட்டாமல் எதையும் வணிகப் படுத்த இஙகு யாரும் முயற்சிப்பதில்லை.. அது ஆண்களுக்கான் ஷேவிங்க் க்ரீம் ஆக இருந்தாலும் கூட... இதில் இரண்டு பாலரும் மிகவும் மோசமாக கொச்சை படுத்தப் படுவதை அறிந்தும் கண்டும் காணாமல் செல்வதால்தான் இதை போன்ற செயல்கள் அதிகரிக்கின்றன... நீங்கள் உரைத்ததைப் போல பல சமூக குற்றங்களுக்கும் காரணமாக அமைகின்றன.. பூனைக்கு யார் மணி கட்டுவது கதைதான்
ReplyDelete