Thursday, September 05, 2013

ஆசிரியர் தின சிறப்பு பதிவுஇரண்டு வருடம் ஆகிவிட்டது இன்றிலுருந்து மிகச்சரியாக.,

  கல்லூரி வாழ்க்கைக்குள் நான் முதலாக கால் வைத்தது, இன்று போலொரு ஆசிரியர் தினம் ஒன்றில் தான், பள்ளி வாழ்க்கைக்கு bye bye சொல்லிவிட்டு கல்லூரிக்குள் நுழைந்த போது டீன் ஏஜ் பருவத்தின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்தேன் நான், எல்லை என்றாலே எப்போதுமே ஆபத்திற்கு உட்பட்டது தானே, காதல்,ஆசை,காமம்,குழப்பம்,இச்சை என குழந்தை பருவத்தில் அனுபவிக்காத எத்தனையோ விசயங்கள் விடலை வயதில் விருட்சம் போல வளர்ந்து ஒவ்வொரு பதின்ம வயது பையன்களையும் பெண்களையும் பயமுறுத்த துவங்கிவிடுகிறது.

நானும் பயந்து தான் போயிருந்தேன்,பதின்ம வயதின் எல்லைக்கோட்டை நோக்கி நகர நகர இந்த பயமும் அதிகமாகிக்கொண்டே செல்லும், என்பதை அனுபவபூர்வமாக.. மனப்பூர்வமாக.. Authentic காக என்னால் சொல்ல முடியும்.

பள்ளிப்படிப்பு,எனக்கு வாய்த்தது,இராமேஸ்வரம் என்று அனைவராலும் அழைக்கப்படும் அந்த குட்டித்தீவில்தான் , (எங்கள் ஊர்,ஊர்மக்கள் பற்றியெல்லாம் இன்னொரு நாளில் விரிவாக பேசலாம்). குழந்தைப்பருவம் என்பது ரொம்பவே special அல்லவா,கவலைகள் ,குழப்பங்கள்,சிக்கல்கள்,பொறுப்புகள்,வெறுப்புகள் இப்படி நிறைய "கள்" களுக்கு குழந்தைகள் ராஜாங்கத்தில் ஊசி நாட்டும் அளவிற்கு கூட இடமில்லை !குழந்தைப்பருவம் என்பது எந்த வயது வரை என்று சரியாக எனக்கு சொல்லத்தெரியவில்லை,ஏனென்றால் அது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது என்பது என் கருத்து.குழந்தையாக பிறக்கும் நம்மிடமிருந்து  குழந்தைத் தனங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்க துவங்கிவிடுகிறது இந்த உலகம்,சிலர் சீக்கிரமே குழந்தைதனங்களை தொலைத்து விடுகிறோம்,சிலர் கொஞ்சம் தாமதமாக,அதிர்ஷ்டவசமாக அதை தொலைக்காத அபூர்வமான வெகு சிலரும் இருக்கக்கூடலாம்.

சரி, கட்டுரையின் ஆரம்பத்தில் கல்லூரி என்று ஆரம்பித்திருந்தேன் அல்லவா,அதை தொடரலாம்...

கல்லூரிக்குள் நுழைந்த முதன் நாள் ,ஒரு விழா போலவே இருந்தது, புதிதாக கல்லூரி வந்திருந்த அத்தனை பேரும் ஆடிடோரியத்தில் (Auditorium ) குழுமி இருந்தோம் கல்லூரி பற்றிய அறிமுக உரையுடன் ஆரம்பித்த அந்த மேடை நிகழ்வு இன்னும் என் நினைவில் இருக்கிறது.
கல்லூரி வாழ்க்கைக்கு புதியவர்களுக்கான அட்வைஸ்கள் ,ராகிங்க்,தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகள்,என பல விசயங்களை பேசி முடித்துவிட்டு எங்களையெல்லாம் வகுப்புவாரியாக வரிசைப்படுத்தி வகுப்பறைகளுக்குள் அனுப்பிவைத்தனர்.

முதல் வருடம் கனவுகளுடன் ஆரம்பித்தது கல்லூரி வாழ்க்கை, "ஹையா நானும் காலேஜ் படிக்கிறேன்" இந்தியாவில் மேல்நிலை கல்வி முடித்து மேற்படிப்புக்குள் நுழையும் அந்த முப்பத்திச் சொச்சம் சதவீத மாணவர்களுள் நானும் ஒருவனாக கல்லூரிக்குள் நுழைந்திருந்தேன் !!

படிப்பு என்பதற்கு மேலாக பல விசயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறது கல்லூரிவாழ்க்கை,இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடலாம் என்று நினைக்கிறேன்

1.புதிய இடமும்,அது சார்ந்த பழக்கமும்
2.வயது

பதின்ம வயதின் எல்லையில் நின்றிருக்கும் சமயத்தில் தான்  பலர் கல்லூரிக்குள் நுழைகிறோம் !
பதின்ம வயதின் படியில் கால் வைத்து வருடங்கள் சில கழிந்திருந்தாலும் கூட ஆரம்ப நிலையை விட இந்த எல்லை நிலை கொஞ்சம் slippery ஆனது என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நல்லவேலையாக இந்த வழுக்குத்தரைப் பருவம் எனக்கு வழுக்கவில்லை,:)

ஆண் பெண் என இருபாலரில் பலர் இந்த slippery வயதில் தான் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்,அதுவும் Co-Ed கல்லூரிகளில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

அதே போல சில பழக்கங்கள் நம்மை அடிமையாக்க முயல்வதும் இந்த பதின் பருவத்தில் தான்,அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகும் அற்புத பருவம் பலருக்கு அற்பமாக முடிவது இப்படித்தான்.,

கல்லூரி முதல் வருடம் பரிட்சை முடிந்து பரிட்சை பலன்களை அண்ணா யூனிவர்சிட்டி வெளியிட்டிருந்தது. கிணறு தாண்டும் பூனை போல முதல் வருடத்தை தாவிவிட்டேன், "ஆத்தா நான் பாஸாயிட்டேன்..." முதல் வருட தாவல் சில பல குருட்டு நம்பிக்கைகளைக் கொடுத்திருந்தது,பர்ட்சைக்கு முதல் நாள் படித்தாலே போதும் (சிலருக்கு இது உண்மையாக இருக்கக்கூடும்,இந்த விதிக்கு அடியேன் விதிவிலக்கு போலும்..),எதையெழுதி வைத்தாலும் வாத்தி மார்கள் மார்க் போட்டுவிடுவார்கள்,இன்னும் நிறைய... பாஸாகி விடலாம் என்ற தெனாவட்டு கொஞ்சம் நிறையவே வந்திருந்த்து...
இரண்டாம் வருடம்...
கல்லூரி வாழ்வில் அநேக பேருக்கு ஆப்பு வைத்து கொண்டிருந்த அல்லது வைத்துக்கொண்டிருக்கும் அந்த அரியர்ஸ் என் வாழ்க்கையிலும் வந்தது.செமஸ்டர் ரிசல்ட் பார்த்து செம கடுப்பான சமயம் அது.முட்டிக்கொண்டிருந்தது கண்ணீர்,எனக்கு கம்பேனி கொடுக்க சக நன்பர்கள் சகவாசத்தில் இருந்தாலும் ,ஆசுவாசப்பட என் மனம் தயாராய் இல்லை.அட வுடு மச்சி காலேஜ் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று அரியர் அனுபவசாலிகள் அட்வைஸ் செய்தார்கள் !!... ம்ம் ஹூம் ....அன்றைய தினம் ரிசல்டுக்கு முன் ரிசல்டுக்கும் பின் என இரண்டாக பிரிக்கப்பட்டது.
யாருடனும் சரியாக பேசவில்லை,உண்மையை சொல்ல வேண்டுமானல் பேச முடியவில்லை,பேச பிடிக்கவில்லை..

பாஸாகி விட்டு குதிக்கும் நபர்களை குரு குரு வென பார்த்திருந்தேன்,அவர்களின் சந்தோசம் ஏனோ எனக்கு மட்டும் (எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை) கோபத்தை கொடுத்தது.

அரியருக்கு புதியவர்களை தேடிப் பிடித்தது என் பாழாய்ப்போன மனம், அதில் என் நன்பர்கள் இரண்டு பேர் கிடைத்தார்கள்,அதிர்ஷ்டவசமாக நாங்கள் மூவரும் ஒரே ரூம் ??? (அதனால தான் அரியர் வந்திருக்குமோ?) எங்கள் ரூம் மேட்களில் பாலா ஒருவன் மட்டும் ஆல் க்ளியர் !!

குரு,பாலாஜி,நான் மூவரும் குழுவாக இணைந்து அரியர்ஸ் தந்த ஆப்பினை வீட்டில் எப்படி சொல்வது,இந்த மனக்குழப்பத்தை தீர்க்க வழி என்ன என்று யோசிக்கத் துவங்கினோம் (அடக் கடவுளே!! )

ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தோம் "நம்மால் முடிவு எடுக்க முடியவில்லை,என்கிற முடிவுக்கு" முடிவில் ஒரு ஆசிரியரிடம் சென்று இது பற்றியெல்லாம் சொல்லி அட்வைஸ் வாங்க முடிவு கட்டினோம் !

அந்த அரியரின் ஆரம்ப தினத்தின் பொன்மாலை பொழுதில் ...கல்லூரி முடிந்து எல்லோரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள்,ஏனோ நாங்கள் வீடு திரும்பாமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம் !

எங்கள் இயற்பியல் பேராசிரியரின் அறை திறந்திருந்தது! திறமையாக பாடம் சொல்லித்தரும் மிக்க்குறைவான ஆசிரியர்களில் அவரும் ஒருவர், கல்லூரி முதல் வருடத்தில் பரிட்சயம் ஆனவர் அவர்,முதல் வருடத்தின் இரண்டு செமஸ்டர்களும் அவரே எங்களுக்கு பிஸிக்ஸ் வாத்தியார்!!.

வகுப்புக்கு நோட்ஸ் கொண்டுவராமல் மனப்பாடமாக பாடம் சொல்லித்தருவார்,பாடம் முடித்ததும் கேள்வி கேட்க நேரம் தருவார்,நேரம் போதவில்லை என்றால் ஓய்வு நேரத்தில் வர சொல்வார், வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களையும் நம்பர்களாக அல்லாமல் நன்பர்களாக பார்க்கும் நல்ல ஆசிரியர் அவர் !! வகுப்பில் இருக்கும் அத்தனை பேரையும் பெயர் சொல்லி அழைக்க கூடியவர் (நான் அவரின் ஞாபக சக்தியை வியப்பதுண்டு).

மனம் முன் ஓடிய பிலாஸ் பேக்கினை மையமாக்க் கொண்டு ,இவரிடம் போய் அட்வைஸ் கேட்கலாம் என்று ஒருவாறு முடிவு செய்தோம்! அறைக் கதவின் அருகே போய் மூன்று பேரும் நின்றிருந்தோம், எதுவும் பேசவில்லை,எதுவும் கேட்கவில்லை...

நேரத்துளிகள் காலமெனும் கடலுக்குள் காலமாகிக்கொண்டிருந்தன... அவரே எங்களைப் பார்த்தார் !! என்ன விசயம் என்பதை அவர் பாணியில் ஆச்சரியமாக,புன்னகையுடன் கேட்டார்..

நானே முதலில் வாய் திறந்தேன், அரியர் பற்றி சொல்லிக்கொண்டு அழுதே விட்டேன்,முட்டிக்கொண்டிருந்த கண்ணீர் கொட்டியே விட்டது !...

தன் பணியை அன்று ஒரு நாள் எங்களுக்காக ஒதுக்கி வைத்துவிட்டு எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எங்கள் ஒவ்வொருவருக்குமாக  கவுன்ஸ்லிங்க் கொடுத்தார், பேசினோம்... 

என்ன பேசினோம் என்பதை அடுத்தப்பாகத்தில் பகிர்ந்து கொள்கிறேன் (வாசகர்கள் விரும்பின் மட்டும்) ,அது ரொம்பவே சென்சிடிவான விசயம் என்பதால்...

காலமெனும் வெள்ளத்தில் நான் திசை மாற்றப்படவில்லை.இந்த ஆசிரியர் தினத்தில் எங்க ராஜா சாருக்காக நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்..

Hats Off sir, 

ஆசிரியர் தினம் பற்றிய எனது பழைய கட்டுரை,மறக்காம இதையும் படிங்க...!! :)

எனக்கு ஆசிரியர்களை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது


                                                                                 

 

Post Comment

28 comments:

 1. நல்ல பிளாஷ்பேக்!! மலரும் நினைவுகளை கண்முன் நிறுத்தியது..

  நேரம் கிடைப்பின் படியுங்கள்- என் ஆசிரியர்களுக்காக நான் எழுதிய ஓர் கவிதை..
  http://www.kovaiaavee.com/2012/09/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆ.வி ! இதோ படிச்சுடறேன்

   Delete
 2. Nice post.
  Visite my site
  http://vivekisravel.wordpress.com

  ReplyDelete
 3. அன்பின் விஜயன் துரை - ஆசிரியர் தினப் பதிவு நன்று - ஆசிரியர்களை நினைவில் நிறுத்தி அசை போட்டு ஆனந்தித்து பதிவு எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சீனா ஐயா! :)

   Delete
 4. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. த.ம +1 க்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி DD

   Delete
 5. நல்ல ஆசிரியரை மலரும் நினைவுகளாய்
  அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்..

  இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!

  ReplyDelete
 6. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அவரவரின் ஆசிரியர்கள்....

  ReplyDelete
 7. தம்பி, உனக்கு மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசு.... கலக்கலான பதிவு...

  ReplyDelete
  Replies
  1. உருவு கண்டு எள்ளாமை வேண்டும் னு வள்ளுவர் தாத்தா சொல்லியிருக்கார் அண்ணா !! ,தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி வாத்யாரே !!

   Delete
 8. நல்ல பதிவு.. படிக்கும் அனைவருக்கும் மலரும் நினைவுகளைக் கொண்டு வரும் பதிவு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. :) நல்ல பதிவு, எனக்கெல்லாம் இப்படி ஆசிரியர்களிடம் சென்று, ஆலோசனை கேட்கத் தோன்றினாலும் கேட்டதில்லை, வீட்டில் அம்மா அப்பாவிடமே எல்லாம் கேட்டுக் கொள்வது! ஆசிரியர் என்ன சொன்னார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

  கொடுத்து வைத்தவர்கள் நீங்கள், நல்ல ஆசிரியர்களைப் பெற்றதால்!

  ReplyDelete
  Replies
  1. //நல்ல பதிவு, எனக்கெல்லாம் இப்படி ஆசிரியர்களிடம் சென்று, ஆலோசனை கேட்கத் தோன்றினாலும் கேட்டதில்லை,//
   situation மற்றும் நம் கேள்விக்கு பதில் சொல்லும் நம் மீது அக்கறையுள்ள ஆசிரியர் மற்றும் வீட்டாரிடம் பறிமாறிக்கொள்ள முடியாத விசயம் இந்த condition கள் satisfy ஆனால் மட்டுமே இது சாத்தியமாகும் :)
   //ஆசிரியர் என்ன சொன்னார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன். //
   ம்ம்
   //கொடுத்து வைத்தவர்கள் நீங்கள், நல்ல ஆசிரியர்களைப் பெற்றதால்!//
   அவர் ஒருத்தர் மட்டும் தான் :(

   Delete
 10. Brother thanks.my website ungalukku pudichurukka
  .
  My mail id vivekisravel6@gmail.com

  ReplyDelete
 11. வணக்கம் நண்பா,

  இன்றுதான் இணையம் வர முடிந்தது. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்... மலரும் நினைவுகளாக வெளியிட்டது நன்றாக உள்ளது... வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. ஒரு நல்ல ஆசிரியரை நினைவு கூர்ந்து ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டீர்கள். அந்த ஆசிரியர் என்ன சொன்னார் என்று அறிய நானும் ஆவலுடன்.

  ReplyDelete
  Replies
  1. //ஒரு நல்ல ஆசிரியரை நினைவு கூர்ந்து ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டீர்கள்.//
   :)
   //அந்த ஆசிரியர் என்ன சொன்னார் என்று அறிய நானும் ஆவலுடன்.//
   கண்டிபாக சொல்கிறேன்...

   Delete
 13. தனக்கு வழி காட்டிய ஆசிரியரை அவ்வப்போது நினைப்பது நல்ல மாணவனுக்கு அழகு.மாணவன் மனதில் இடம் பிடிக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியர். தெளிவாக சொல்லி விட்டாய் விஜயன். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
  சிட்டுக்குருவியின் வானத்தில் உலா வர நாங்களும் தயார்.
  ஆசிரியர் தின சிறப்புக் கவிதை

  ReplyDelete
  Replies
  1. //தனக்கு வழி காட்டிய ஆசிரியரை அவ்வப்போது நினைப்பது நல்ல மாணவனுக்கு அழகு.மாணவன் மனதில் இடம் பிடிக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியர்.//
   ஆமாம் சார் !
   //சிட்டுக்குருவியின் வானத்தில் உலா வர நாங்களும் தயார். //
   வாருங்கள் சார்,சேர்ந்து பறக்கலாம் :)

   Delete
 14. இன்றுதான் முகநூலில் மூலம் தங்களது பதிவை பார்த்தேன் படித்தேன்
  ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அண்ணா கொஞ்சம் தாமதம்!
  உங்கள் கல்லூரி பயணம் அருமை இன்றும் அப்படித்தான் செல்கின்றது எங்கள் பயணமும்!
  நல்ல ஆசிரியர்களை மாணவர்கள் என்றும் மறப்பதில்லை உங்கள் பதிவு உதாரணம்!


  ReplyDelete
 15. அருமையான எழுத்து விஜயன்.. எழுத்துலகில் பல சிகரங்கள் உனக்காய் காத்துள்ளது... நிறையப் படி நிறைய எழுது... வாழ்க்கை எனும் பாதையில் வாழ்க்கையையும் எழுத்தையும் தொலைக்காமல் பார்த்துக் கொள்

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....