Wednesday, September 11, 2013

சிட்டுக்குருவியின் வானம் (0)


து நாள் வரை உங்களுக்கு தொழில்நுட்பக்கட்டுரைகள்,மற்றும் சிற்சில கவிதை,கட்டுரைகள் என்று அறிமுகமான நான் ,சிட்டுக்குருவியின் வானம் என்ற இந்த தலைப்பின் கீழ் இதுவரை பேசாது விட்ட சில விசயங்களை  பேசலாம் என்றிருக்கிறேன்...

ந்த சின்னச் சிட்டுக்குருவிக்கு இறக்கைகள் சிறியது தான் என்றாலும் அதற்கு,வானத்தில் பறக்கத்தெரியும் .வானத்தின் நிழல் பல நேரங்களில் அதன் பயணங்களில் , அந்த குருவியின் மீது விழத்தான் செய்கிறது,புல் மீதிருக்கும் பனித்துளிக்குள் காடு ,மலை,வானம்,வீடு என சகலமும் உள்ளடங்கி பிரதிபலிப்பது மாதிரி இந்த சிட்டுக்குருவியின் சிறிய கண்களுக்குள் இந்த வானம் முழுக்க அடங்கியிருக்கிறது என்பதை அது நம்புகிறது..அது உண்மையா பொய்யா என்கிற வியாக்கியாயங்களுக்குள் நுழைய வேண்டிய அவசியங்கள் தேவையில்லை,ஏனென்றால் அது இந்த சிட்டுக்குருவியின் தனிப்பட்ட எண்ணம்.

"பரந்துவிரிந்த இந்த பிரபஞ்சத்தில் எல்லோரையும் போல... எல்லாவற்றையும் போல.. நானும் ஒரு சிறுதுகள்"

ந்த வார்த்தை கோர்வைதான் நான்  என்னைப்பற்றி (about me) என்கிற இடத்தில் இந்த வலைப்பூவை ஆரம்பித்த அன்றைய தினத்தில் முதன்முதலாக டைப்பிய வரிகள்

ந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நொடித்துளியும் ஆச்சரியங்களாலும்,பிரமாண்டங்களாலும்,பிரமிப்புகளாலும் மட்டுமே நிறைந்திருக்கிறது,ஒவ்வொரு விசயத்தை பார்க்கும் போதும் நிறைய நிறைய கேள்விகள்,விடைகள் கிடைத்தாலும் கூட மனம் அமைதி கொள்வதில்லை,விடைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் வினா விதை விதைக்கப்பட்டே கிடைக்கிறது போலும்,விடைகள் மீண்டும் நம்மை கேள்விகளை நோக்கி நகற்றுகின்றன...


இந்த சிட்டுக்குருவி தன் சிறிய சிறகுகளை அசைத்து பறந்து விரிந்த வானத்தின் கீழே பறந்து கொண்டிருக்கிறது.வானம் மிகப்பெரியது என்பது அந்த சிட்டுக்குருவிக்கு தெரியும் ஏனோ அது தனது சின்னஞ்சிறிய சிறகுகள் கொண்டு வானத்தை அளந்துவிட முடியும் என்று முயற்சிக்கிறது...
அடுத்த பதிவு முதல்...
நிறைய பேசலாம்..பேசாதுவிட்ட பல விசயங்களை....
                                             -சிட்டுக்குருவி சிறகடிக்கும்
லேபில்கள்:சிட்டுக்குருவியின் வானம்,விஜயன் துரைராஜ்,விஜயன்,விஜயன்துரை,vijayan,durai,vijayan durairaj,vijayandurairaj,chittukkuruviyin vaanam,கடற்கரை

Labels: , , , ,

11 Comments:

At Thu Sept 12, 04:16:00 am , Blogger Seeni said...

mmmm....

 
At Thu Sept 12, 06:26:00 am , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உருவம் சிறியதாக இருந்தாலும் சிட்டுக்குருவியைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு பிரமிப்பு ஏற்படும். இப்போதெல்லாம் புறநகர்ப் பகுதிகளில் கூட சிட்டுக் குருவியை பார்ப்பது அரிதாக இருக்கிறது.
இந்த சிட்டுக்குருவி வானில் தன் குட்டி சிறகடித்துப் பறக்கட்டும்.
சேகரித்ததை வந்து எங்களுக்கும் கொண்டோந்து தரட்டும்
வாழ்த்துக்கள்

 
At Thu Sept 12, 07:35:00 am , Blogger aavee said...

இனிமையான குருவியின்
இசையை கேட்க மறந்து
இன்று ரிங்டோன்களின்
இரைச்சல்களால் சூழப்பட்டோமே!!

-ஆவிப்பா

 
At Thu Sept 12, 08:14:00 am , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

இனி தொடர்ந்து பறக்கட்டும்...

 
At Thu Sept 12, 08:58:00 am , Anonymous vivekisravel said...

I wish you

 
At Thu Sept 12, 09:02:00 am , Blogger வெற்றிவேல் said...

சிட்டுக்குருவி உயர பறக்கட்டும்.. தொடர்ந்து எழுதுங்கள்... தொடர்கிறேன்...

 
At Thu Sept 12, 02:50:00 pm , Blogger Ranjani Narayanan said...

சிறகடிக்கும் சிட்டுக்குருவியின் வானத்தைப் பார்க்க நானும் காத்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்!

 
At Thu Sept 12, 07:45:00 pm , Blogger arasan said...

எழுதுங்க தோழர் காத்திருக்கிறோம் ....

 
At Fri Sept 13, 11:11:00 am , Blogger சீனு said...

தம்பி உனக்குள்ள இம்புட்டு ஞானமா.. எழுந்துங்கள் பேசுவோம் :-)

 
At Wed Sept 18, 09:09:00 pm , Blogger Priya said...

நிச்சயம் பேசுவோம்.. எழுதுங்கள்...

 
At Wed Mar 29, 08:45:00 pm , Anonymous Anonymous said...

good bro

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home