Monday, October 14, 2013

பேஸ்புக்...நண்பர்கள்... எச்சரிக்கை...

(பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 6)
பேஸ்புக்...நண்பர்கள்... எச்சரிக்கை...

                                                



நான் கல்லூரியில் காலம் கழித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த சம்பவம் இது:
 து ஒரு கல்லூரி வேலை நாள் ( Working day) எங்கள் பக்கத்து வகுப்பு மாணவர்கள் சில பேர் அன்று மதியம் கல்லுரியை கட் அடித்துவிட்டு திரைப்படத்திற்கு சென்றுள்ளனர், தியேட்டரில் அவர்கள் டிக்கெட் எடுத்தது முதல் வெளியே வரும் வரையில்  புகைப்படங்களாக சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்.
மறுநாள்..கட் அடித்த இன்ப நிகழ்வின் சந்தோசத்தை தன் சக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆசையில் நண்பனொருவன்..
அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் பகிர்வு (share) செய்துள்ளான்,அவனது அதிர்ஷ்டமோ,அவனோடு கட்டடித்த இன்னபிற நன்பர்களின் அதிர்ஷ்டமோ என்னவோ தெரியவில்லை நண்பர்கள் பட்டியலில் அவர்கள் H.O.D மற்றும் சில லெக்சரர்களும் அவனுக்கு இருந்துள்ளனர்.

இந்த பேஸ்புக் இருக்கிறதே இது நன்பர்கள் என்பதற்கான அர்த்தத்தையே இப்போது மாற்றி வைத்திருக்கிறது பாருங்கள் ,நன்பர்கள் பட்டியலில் வகுப்பு வாத்தியார்கள்,சக பணியாளர்,அலுவலக முதலாளி,அண்ணன்,அக்கா,தம்பிஇன்னும் எல்லா வகையினரும்.. (சில நபர்களுக்கு இவர்கள் நண்பர்களாகவும் இருக்க முடியும் என்பது சிறு ஆறுதல்). 
 அட இது என்ன பிரமாதம் நம்மில் அநேகருக்கு பேஸ்புக் நன்பர்கள் பட்டியலில் நண்பர்கள் மட்டும் இருப்பதில்லை,யாரென்றே தெரியாத யாராரோவெல்லாம் கூட இருக்கிறார்கள்.

சரி நாம் கதைக்கு வருவோம், நம்ம நண்பன் பகிர்ந்த அந்த "கட் படலத்து" போட்டோக்களை அவர்கள் H.O.D பார்த்து விட்டார்,அவர் இந்த மேட்டரை பிரின்ஸ்பால் வரை கொண்டு போய்விட்டார் ,பெற்றோரிடம் சொல்லுதல்,வகுப்பைவிட்டு தள்ளிவைத்தல் (suspend) என்றெல்லாம் சென்ற பேச்சு Fine னோடு முடிந்தது.

இப்படியாகத்தான் நாம் சில நேரங்களில் பகிரக்கூடாத நபர்களிடம் பகிரக்கூடாத விசயத்தை பகிர்ந்துவிட்டு பல்பு வாங்குவதும்,பகீர் ஆவதுமாக இருக்கிறோம்.

நாம் சேர் செய்யும் தகவல்கள் யார்யாருக்கு தெரிய வேண்டும், யார்யாருக்கு தெரியக்கூடாது என்று நாம் தேர்ந்தெடுக்கும் உரிமையை பேஸ்புக் நமக்கு வழங்குகிறது, இது பற்றி இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் கூறியிருந்தேன்.
இதேவகையில் நம் நன்பர்களை வகைப்படி அதாவது தெரிந்தவர்,தெரியாதவர்,நன்பர்,ஊர்க்கார்ர்,உறவுக்காரர் என நன்பர்களை வகைப்படுத்தி பட்டியலிட்டு பிரித்து வைக்கும் உரிமையையும் வழங்குகிறது.

அதெப்படி என்பதை பார்க்கலாம்...

படி 1: உங்கள் பேஸ்புக் அக்கவுன்டிற்குள் லாக்-இன் ஆகி ,டைம்லைனுக்கு செல்லவும்


படி 2:: பின்பு Friends என்பதை கிளிக் செய்து நண்பர்கள் பட்டியலுக்குள் சென்று கொள்ளுங்கள்



படி 3:  உங்கள் நண்பர்கள் பட்டியல் இப்போது உங்களுக்குக் காட்டப்படும்.

படி 4 : இங்கு நீங்கள் உங்கள் நண்பர்கள் பெயருக்கு அருகே இருக்கும் friends என்ற வார்த்தையை க்ளிக்கினால் கீழுள்ள மாதிரி ஒரு மெனு பட்டியல் வரும்.
                      

இந்த மெனு பட்டியலில் "close friends" (நெருங்கிய நண்பர்கள்) "Acquaintances "  (தெரிந்தவர்கள்), நீங்கள் வேலை பார்க்கும் அலுவலக பெயர்,நீங்கள் படித்ததாக பேஸ்புக்கில் பதிவு செய்த பள்ளி,கல்லூரி பெயர் போன்றவை Default ஆக இருக்கும். குறிப்பிட்ட வகையில் க்ளிக் செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட நண்பரை குறிப்பிட்ட பட்டியலில் சேர்க்க முடியும்.
(**குறிப்பிட்ட நபரை நண்பர் பட்டியலிலிருந்து தூக்க Unfriend செலக்ட் செய்யவும்,பேஸ்புக்கில் புகார் செய்ய Report/block செலக்ட் செய்யவும்)


அந்த நண்பர் எந்த வகையிலும் சிக்கவில்லை என்றால் " add to another list" என்ற ஆப்சனை செலக்ட் செய்து, பின் வரும் New list பெட்டியியில் நீங்களாக பெயர் கொடுத்து புதிய நண்பர்கள் பட்டியலில் அவரை சேர்க்கலாம்.

நீங்கள் உருவாக்கிய நண்பர்கள் பட்டியல்கள் groups,pages,fav போன்ற வகையறாக்களுடன் பேஸ்புக்கின் இடது ஓரத்தில் இருக்கும்  ,
                      
அதை க்ளிக்கினால் குறிப்பிட்ட அந்த பட்டியலில் உள்ள நபர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட தகவல்கள்,படங்கள் போன்றவைகள் மட்டும் காட்டப்படும்.

ஒரு உதாரணம்



இங்கு வலதுபுறம்(Right) உள்ள பெட்டியில் நன்பர்கள் பெயரை டைப் செய்து பட்டியலில் பங்காளராக்கலாம்.
                
 மேற்கண்ட வழிமுறைகளின் படி பட்டியலை உருவாக்கியவுடன் . அந்த பட்டியலில் இணைக்கப்படவேண்டிய இன்னபிற நண்பர்கள் பெயரை இங்கு டைப்பி "பட்டியலில்" சேர்க்க முடியும்.இப்படியாக பட்டியலை நிறைப்பது எளிய முறை.

நீங்கள் பகிரும் தகவல்களும் "Custom list " (பட்டியல் நபர்களுக்கு) மட்டுமே பகிரப்படும்.

இத்தொடரின் அனைத்து பாகங்களும்:

1. பாகம்-1 பாதுகாப்பு அடிப்படைகள்
2.பாகம்-2  Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை
3.பாகம்-3  எச்சரிக்கை: பேஸ்புக்கில் உங்கள் படங்கள் திருடப்படுகின்றன
4.பாகம்-4  நன்பர்கள் ஜாக்கிரதை
5.பாகம்-5 பேஸ்புக்கால் தற்கொலை செய்து கொண்ட பெண் !!!

அடுத்தப்பதிவை விவாத மேடை வடிவில் வாசகர்களின் கருத்துக்களோடு எழுதலாம் என விழைகிறேன்,பேஸ்புக் பற்றிய தங்களின் கருத்துக்களை தவறாது கூறுங்கள் அன்பர்களே !!
 vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ சொல்லலாம்.அடுத்தப்பதிவில் அவை பிரசுரிக்கப்படும்.

Labels: ,

5 Comments:

At Mon Oct 14, 01:37:00 pm , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

இது போல் இதுவரை செய்ததில்லை... இருந்தாலும் எப்போதாவது தேவைப்படும் என்பதால் பகிர்வை bookmark செய்து கொண்டேன்... நன்றி...

 
At Tue Oct 15, 07:44:00 am , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இப்படித்தான் சிலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் சில நண்பர்களை பட்டியலில் இருந்த நீக்குவதற்கான வழி முறைகளை சொல்லு விஜயன். UNFRIEND செய்தால் போதுமானதா?

 
At Tue Oct 15, 08:06:00 am , Blogger வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கள்..... பயன்படும்.

 
At Wed Oct 16, 02:08:00 pm , Blogger Ranjani Narayanan said...

நீங்கள் எழுதுவதை தொடர்ந்து படிக்கும்போது பேஸ்புக் வேண்டுமா என்று தோன்றுகிறது. எனக்கு ஒருவர் 'உங்கள் நண்பர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்......இவரை நீக்கி விடுங்கள் என்று மெசேஜ் அனுப்பியிருந்தார். அவர்க்கு எப்படி என் நண்பர்கள் பட்டியல் கிடைத்தது? ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டுமே பேஸ்புக்கில் செலவிடுகிறேன் என்றாலும் சில சமயம் கொஞ்சம் பயமாக இருக்கும்.

 
At Fri Oct 18, 10:44:00 pm , Anonymous Anonymous said...

arintha thagavalaga irunthalum palarukkum payanpadum

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home