சிட்டுக்குருவியின் வானம் 1.2
சிட்டுக்குருவியின் வானம் 1.2
கவர்ச்சியும்... காரணமும்...
கவர்ச்சியும்... காரணமும்...
எவளோ ஒருத்திகாட்டுகிற கவர்ச்சிக்கும் எவளோ ஒருத்தியின் அழுகைக்கும் "மறைமுகமான ஒரு நேரடி தொடர்பு " இருக்கிறது என்று கடந்த பதிவில் புலம்பியிருந்தேன்..
இந்த விசயத்தை
பெரும்பாலானோர் ஆம் என்று ஆமோதித்தாலும், அதெப்படி !! என்று கேட்கத்தான்
செய்கிறார்கள் சிலர்.
அதெப்படி !!
விளம்பரப்படங்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால்
ஒரு விசயத்தை உங்களால் கவனிக்க முடியும்.
ஆண்களுக்கான சேவிங்க் கிரீம், ஆண்களுக்கான
Body ஸ்ப்ரே, ஆண்களுக்கான உள்ளாடை,இப்படி ஆண்களுக்கான விளம்பரங்களை ஆண்களிடம் விளம்பரப்படுத்த கவர்ச்சி
என்கிற ஒரு காரணம் தேவைப்படுகிறது,
அதேசமயம் !! ,பெண்களுக்கான
பொருட்களின் விளம்பரங்களில் ஆண் என்பவன் இருந்தாலும் கூட அரைகுறை ஆடையில் கவர்ச்சி
காட்டும் அவசியம் அவனுக்கு இருப்பதில்லை
வார இதழ் ,மாத இதழ், சிறப்பிதழ் போன்றவைகளின் அட்டைப்படங்களை ஆண்களைவிட,பெண்களே
அதிகம் அபகரிக்கின்றார்கள்.,கவர்ச்சி நடிகைகளுக்கு இருக்கும்
செல்வாக்கு கவர்ச்சி நடிகர்களுக்கு இல்லை.
பெண்ணை ஒரு கவன ஈர்ப்பு காரணியாக பயன்படுத்தும்
வித்தையையே விளம்பர நிறுவனங்களும்,சினிமாக்களும் செய்து
கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. "பெண்" கவன ஈர்ப்பு காரணியாக
மாற்றப்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும் ?, கவர்ச்சிக்கும்,ஆணின் உணர்விற்கும் என்ன சம்பந்தம்?.இந்தியா இந்த
விசயத்தில் மோசம் போக என்ன காரணம்.
இந்த விசயங்களின் பின்னால் மறைந்திருக்கும்
அறிவியல் ,உளவியல் மற்றும் சமூகவியல் காரணிகளை சுருக்கமாக பார்த்து விடலாம்
ஆதியாகமம்:
ஆதாம் என்கிற ஆண் தான் முதலில் தோன்றியவன் என்று
பெரும்பான்மையான மதங்கள் முன்மொழிகின்றன.ஆனால் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்,உலகில்
முதலில் தோன்றியது ஆண் கிடையாதாம் பெண் தானாம்.,
குரங்கிலிருந்து மனிதனாக பரிணமிக்க துவங்கிய
வரலாற்றில் (க்ரோமேக்னன்,நியான்டர்தால்,ஹோமோ ரொடீசியன்ஸ், ஹோமோ எரக்டஸ்,...) என்று வாயில் நுழையாத பெயர்
கொண்ட அந்த பட்டியலில் தற்காலத்திய மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸின் வித்தாக முதன்
முதலில் அவதரித்தவள் பெண் என்பதற்கான தொல்லியல் சான்றுகள்,டி.என்.ஏ
ஆய்வுகள் போன்றவற்றை கொண்டு " பரிணாம வளர்ச்சியில் ஆணின் முன்னோடி பெண் தான்
" என்ற தன் ஆராய்ச்சி முடிவை
எடுத்துவைத்து ஆதாரத்துடன் அடித்துக்கூறுகிறது அறிவியல்.
இன்றளவிலும் கூட உடல் முதிர்ச்சி,மனப்பக்குவம்
போன்ற விசயங்களில் ஆண் இனத்தைவிட பெண்ணினமே முதலில் பரிணமிக்கிறது என்பது கண்கூடான
உண்மை.(இந்த விசயத்தை பிறிதொரு பதிவில் விளக்கமாக அலசலாம்)
ஆதிகாலத்தில் அதாவது,மனித
இனம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்திருந்த காலக் கட்டத்தில் தனக்கான ஆணை தேர்வு
செய்யும் உரிமையை பெண்ணே பெற்றிருந்தாள் வலிய இனம் தன் மூலம் பெருக வழி வகுக்கும்
விதமாக.நல்ல பலசாலியான,தனக்கு வேட்டையாடி உணவு கொண்டுவந்து
தர வக்குள்ளவனாகப் பார்த்துப் பார்த்து அவள் இணை சேர்ந்தாள்.
ஆண் இனமும் பெண் தனக்கானவனாக தன்னை
தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகவே தன்னை பலசாலியாக நிரூபிக்க பல்வேறு
நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பிக்கின்றது
காட்டுமிராண்டி
காலத்திலேயே ஆண்கள் ,
பெண்ணை பார்க்கிற போதெல்லாம் தன்னை வீரனாக காட்டிக்கொள்ளவும்,தான் பெண்ணை வைத்து காப்பாற்ற வக்குள்ளவன் என்று நிரூபிக்கவும், என்னவெல்லாம் வழிமுறைகள் உண்டோ அவை எல்லாவற்றையும்
செய்யத்துணிகின்றார்கள்.
நமது இந்தியக் கலாச்சாரத்தில் கூட ராமாயணம்,மகாபாரதம்
போன்ற ராஜா காலத்து கதைகளில் பெண்ணானவள் வீரம்,அழகு எனப்
பகுத்தாய்ந்து தனக்கானவனை தேர்வு செய்ததை பற்றிய கதைகள் காணப்படுகின்றன.காளையை அடக்குபவனுக்கே பெண்
என்கிற பழந்தமிழ் பண்பாடு கூட நம்மிடையே இருந்திருக்கிறது. உலகின் இன்னபிற பாரம்பரிய கலாச்சாரங்கள் அத்தனையிலும் வீரம் காட்டி பெண் பிடிக்கும் கதைகள் இருக்கின்றன.
ஆணாக பிறந்தவன் பெண்ணுக்கான பாதுகாப்பாக தன்னை
நிரூபித்து பெண்ணை மணந்து கொள்ளும் காலம் அப்போது இருந்திருக்கிறது என்பதை
இந்த தகவல்களின் அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது
காட்டுவாசி -
நாட்டுவாசி:
பரிணாம வளர்ச்சியில் காட்டுவாசி நாட்டுவாசியாக
மாறிய பிற்பாடு," ஆண் என்பவன் பெண்ணுக்கான பாதுகாப்பு" என்கிற கருத்து ஆண்
மனதில் ஆழமாக பதிய ஆரம்பித்து விடுகிறது, நாகரிகம்,சமூகம்,அரசாங்கம் என்று முன்னேறிய பிறகு பெண்ணை
பாதுகாப்பது ஆணின் கடமை என்பதாக பல்வேறு "பெண் காப்பு" சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
நம் இந்திய கலாச்சாரத்தில் பெண் பற்றிய அடிமை
எண்ணங்களெல்லாம் இடையில் வந்தவைகள் ,காலச்சக்கரத்தை ரொம்ப பின் நோக்கி நகற்றுகிறபோது
நம் இந்திய பண்பாட்டில் பெண்ணை அடிமை செய்யும் போக்கு இருந்திருக்கவில்லை,என்று
தெளிவாக தெரிகிறது.
உலகின் அநேகமான மதங்கள் கடவுளை ஆண் பாலாக மட்டும் வைத்து அழகுபார்த்த அந்த காலத்திலேயே பெண்ணை
தெய்வமாக வழிபடும் சாக்தம் என்ற சக்தி வழிபாடு இங்கு இருந்திருக்கிறது.நதி,கடல்,பூமி போன்றவைகளுக்கு பெண் பெயரிட்டு தாயாக காணும் பண்பாடு
இருந்திருக்கிறது,பெண்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை,ஆணுக்கு போட்டியாக வாதம் , தர்க்கம் போன்ற போட்டிகளில் பங்கேற்று அவனை தோற்கடிக்கும் அளவுக்கு
அறிவாற்றல் இருந்திருக்கிறது...
"
தையல் சொல் கேளீர் " என்று ஒரு பெண்ணே சொல்லும் அளவுக்கு
அவர்களுக்கு சுதந்திரம் இருந்திருக்கிறது.
நீதி மறுக்கப்பட்ட தன்
கனவனுக்காக தானே சென்று வாதாடி சண்டைபோட்டு ஒரு நகரத்தையே தீமூட்டும் அளவுக்கு
வீரமும்,திராணியும்,வாய்ப்பும் இருந்திருக்கிறது..
காலம் நகர நகர
...
இந்திய நாகரிகத்தில் , பெண் என்பவள் ஆணின் நிழலிலேயே வாழ வேண்டிய உயிரினம்.அவளுக்கென்று சுதந்திர எண்ணங்கள் இருக்கக்கூடாது.இருந்தால் தவறு ,பிறந்த பின் தந்தையின் பராமரிப்பில் தந்தையின் கருத்துகளுக்கு கட்டுப்பட்டு இருப்பவளாக வளர்ந்து, வளர்ந்த பிறகு கனவனின் பராமரிப்பில் பணிவிடை செய்து,கனவனே கண்கண்ட தெய்வம் என்று அவன் சொல்வதன்படியே வாழ்ந்து தன் காலத்தை கழிக்க வேண்டியவளாக இருக்க வேண்டும்.(கனவன் இறந்தவுடன் அவனை எரிக்க மூட்டப்பட்ட தீயிலேயே அவளும் விழ வேண்டும் என்ற வழக்கம் கூட இருந்திருக்கிறது).
இவைகளெல்லாம் பின்
எப்படி நம்மவர்களிடையே வந்திருக்கும் !
சிட்டுக்குருவி சிறகடிக்கும்...
Labels: சி.கு.வா, பாலியல் வன்முறை
18 Comments:
மிகச் சிறந்த பதிவு... பெண் அடிமை ஆநதக் குறித்து சரியான முறையில் ஆய்வு செய்திருக்கிறது கட்டுரை... அனைத்து செயல்களுக்கும் பின்னனியில் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது.. ஆனால் அக்காலத்தில் சில காரணங்களுடன் தொடங்கப்பட்ட செயல்களை இக்காலத்தில் காரணமோ அவசியமோ எதுவுமே இன்றி திணிப்பதுதான் காலத்தின் சாபக்கேடு....
# ஆதாம் என்கிற ஆண் தான் முதலில் தோன்றியவன் என்று பெரும்பான்மையான மதங்கள் முன்மொழிகின்றன#
இந்த கருத்தை ஒரு மதம் தான் சொல்கிறது ,வீணான மதப் பிரச்சினை உண்டாகும் ...பதிவில் கவனம் !
நல்ல ஆராய்ச்சி பதிவு ..
தொடர்கிறேன் ,தொடருங்கள் விஜயன் துரை அவர்களே !
அரைகுறை தகவல்கள் / தவறுகள் அங்கங்கு உள்ளது.... இருந்தாலும் தொடரவும்...
அன்புள்ள பகவான் ஜி ! யூதமதம்,இஸ்லாமிய மதம்,கிறிஸ்தவம் மற்றும் அந்த மதங்களை சார்ந்த எழுந்த கிளை மதங்கள் இவை அத்தனையும் ஆதாமே முதல் மனிதன் என்று நம்புகின்றன.குரான்,பைபிள்,தோரா போன்ற புனித நூல்களில் ஆதாம் இருக்கிறான். இந்த மதங்களின் தொகுப்பை ஆப்ராகமிக் ரிலிஜன்ஸ் என்று அழைக்கிறார்கள்.பெரும்பானையான மதங்கள் என்ற கூற்றை ஏற்க !!
//வீணான மதப் பிரச்சினை உண்டாகும் ..//
அதென்ன வீணான மதப்பிரச்சினை,மதப்பிரச்சினை என்றாலே வீண் தானே !!
அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ஜி :)
வணக்கம் விஜயன் !
உமது சிந்தனை இதை பதிவு செய்து ஆகவேண்டும் என்று தீர்மானித்த உனக்கு என் பாராட்டுக்கள்!
நிறைய செய்திகள் அடங்கிய பதிவை மிக துல்லியமாக, சரியான விளக்கங்களோடு பதிவிட்டால் மட்டுமே படிப்பவரை சேரும்! பிழைகளும், சில தகவல்கள் கூட முற்று பெறாமல் இருக்கிறது அதை இயன்றவரை தவிர்க்கவும்!
சொல்ல வரும் விசயத்தை நம் மொழியில் மிக தெளிவாக, எளிமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்! மற்ற படி சில இடங்களில் பிரமித்து போனேன்! நான் சொன்னதையும் கவனத்தில் கொள்ளவும் ... நேரம் இருப்பின் தொடர்பு கொள்ளவும் போனில் பேசுவோம் ...
அரைகுறை தகவல்கள் !! ஆபத்தானது, எந்தெந்த இடம் என்று சுட்டியிருந்தால்,அடுத்த பதிவில் பொருள் விளக்க ஏதுவாகா இருந்திருக்கும்!! மிக்க நன்றி அண்ணா
//நிறைய செய்திகள் அடங்கிய பதிவை மிக துல்லியமாக, சரியான விளக்கங்களோடு பதிவிட்டால் மட்டுமே படிப்பவரை சேரும்! பிழைகளும், சில தகவல்கள் கூட முற்று பெறாமல் இருக்கிறது அதை இயன்றவரை தவிர்க்கவும்! //
கண்டிப்பாக அண்ணா,
//சில தகவல்கள் கூட முற்று பெறாமல் இருக்கிறது// பின் அலைபேசியில் அழைக்கிறேன் விளக்கவும் !!
முற்று பெறாது இருப்பதை முற்றிலும் ஏற்கிறேன்,அதன் முடிவு அனைவரும் அறிந்திருக்க க் கூடும் என்று கட்டுரையின் நீளத்தை வழ வழ வென்று இழுப்பானேன் என்று தவிர்த்துவிட்டேன்.
நீங்க விவரமான ஆள் என்று நினைத்தேன் ,இவ்வளவு விவரமான ஆளா இருப்பீங்க தெரியாமப் போச்சு ..மன்னியுங்கள் விஜயன் ஜி !
//இந்தியா இந்த விசயத்தில் மோசம் போக என்ன காரணம்.//
இந்தியா மட்டுமில்லங்க.. உலக நாடுகள் பரவலாக இந்த விஷயத்தில் மோசம் தான்.
நம்ம நாடு எல்லாரையும் இந்த விசயத்துல ஓவர் டேக் செய்துவிடும் அளவில் இருக்கிறது, பெண்ணாக பிறக்க பாதுகாப்பில்லாத பயங்கரமான நாடுகள் என்ற தலைப்பில் தாம்சன் ரெய்டர்ஸ் என்ற கருத்து கணிப்பு கம்பெனி நடத்திய கருத்தாய்வில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருந்தது ! உலகின் 213 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் முதல் ஐந்து நாடுகளில் நம் இந்தியாவும் வந்திருந்தது.
5. சோமாலியா
4.இந்தியா
3.பாகிஸ்தான்
2.காங்கோ(Democratic Republic Of Congo)
1.ஆப்கானிஸ்தான்
முதலில் தன் துணையைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்ட பெண் காலப் போக்கில் எப்படி ஆண் இனத்தால் அடிமை ஆக்கப்பட்டாள்? இந்த இடத்தில் சரியான விளக்கம் இல்லை விஜயன், கொஞ்சம் விவரமாக எழுதுங்கள்.
மற்றபடி, நல்ல ஆய்வு, நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.
நன்றி அம்மா!! தங்களின் கருத்துக்கும்,ஆதரவுக்கும்,ம்ம்ம் கண்டிப்பாக சொல்கிறேன்.
///பெண்ணை ஒரு கவன ஈர்ப்பு காரணியாக பயன்படுத்தும் வித்தையையே விளம்பர நிறுவனங்களும்,சினிமாக்களும் செய்து கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. "பெண்" கவன ஈர்ப்பு காரணியாக மாற்றப்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும் ?, கவர்ச்சிக்கும்,ஆணின் உணர்விற்கும் என்ன சம்பந்தம்?.இந்தியா இந்த விசயத்தில் மோசம் போக என்ன காரணம்.
இந்த விசயங்களின் பின்னால் மறைந்திருக்கும் அறிவியல் ,உளவியல் மற்றும் சமூகவியல் காரணிகளை சுருக்கமாக//// அறிந்துகொண்டேன்...
கட்டுரை மிக மிக அருமை... பெண்களை கவர்ச்சிக் காரணிப் பொருளாக காட்டக்கூடிய காரணங்களை அறிந்துகொள்ள முடிந்தது.
எனது தளத்தில் பயன்மிக்க பதிவொன்று: கணினியை சுத்தம் செய்ய புதிய "CCleaner" மென்பொருள்
நல்ல ஒரு கருத்தாய்வு..அடுத்தப் பகுதியை எதிர்நோக்கி...
//கனவனின் பராமரிப்பில் பணிவிடை செய்து,கனவனே கண்கண்ட தெய்வம் என்று அவன் சொல்வதன்படியே வாழ்ந்து தன் காலத்தை கழிக்க வேண்டியவளாக இருக்க வேண்டும்.//
"கள்" ஆனாலும் கணவன் அவன் "Full" ஆனாலும் புருஷன் என்பதை தகர்க்கும் காலம் வர வேண்டும்
பரத்தை வீட்டிற்கு நடக்க இயலாத கணவனை கூடையில் வைத்து தூக்கிப்போவதை பத்தினித்தனம் என கற்பிப்பதை ஏற்க்க முடியவில்லை
மிகவும் அருமையான கருத்துக்கள் அடுத்த பதிவு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
இரண்டு பாகங்களையும் படித்தேன். நல்ல ஆய்வு. எழுத்து நடை நன்று.
தொடரட்டும்
நல்ல ஆய்வு !
கால ஓட்டத்தில் " கற்பு " என்னும் கதவுடன் பெண்ணை போகப்பொருளாக மட்டுமே பார்க்க துணிந்ததன் காரணமே பெண்ணடிமை வழக்கத்துக்கு காரணம் ! அப்படி போகப்பொருளாக நினைத்தன் விளைவே, நான் அனுபவித்ததை வேறு எவனும் தொடாத வகையில் " சிதை ஏற " வேண்டுமென்ற வழக்கம் !
" பெண்ணை ஒரு கவன ஈர்ப்பு காரணியாக பயன்படுத்தும் வித்தையையே விளம்பர நிறுவனங்களும்,சினிமாக்களும் செய்து கொண்டிருக்கின்றன... "
இதற்கு பின்னால் மற்றொரு உளவியல் காரணமும் உண்டு ! உடலழகில் மயங்கி " கற்பனைக்கும் " சென்றுவிடுவது ஆண்களிடமே அதிகமாக காணப்படும் குணம் !
( தங்களுக்கு நேரமிருப்பின் எனது பாலியல் புரிதலற்று புழுத்துப்பொகும் சமூகம் மற்றும் கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, ஆகிய பதிவுகளை படித்து உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
http://saamaaniyan.blogspot.fr/2014/02/blog-post.html
http://saamaaniyan.blogspot.fr/2013/12/blog-post.html
இந்த பதிவுகளில் பெண்ணின் அழகியலை மட்டுமே முன்னிறுத்தும் நம் சமூக காரணங்களை அறிய முயற்சித்திருக்கிறேன். நன்றி )
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home