Friday, June 12, 2015

வழிப்போக்கனின் வார்த்தைகள் - 0

"வாழ்க்கையின் கேள்விகள் கடினமாக இருக்கலாம், ஆனால் விடைகள் எளிமையாகத் தான் இருக்கின்றன !"
                                                                                                             - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


வாழ்க்கையின் பயன் என்ன? , எதற்காக இந்த வாழ்க்கை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது?, ஏன் இந்த வாழ்க்கையின் பாதை இத்தனை கரடு முரடாக இருக்கிறது?, எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்கள்?, என்ன வாழ்க்க டா இது ?  .... (கேள்விகள் நீண்டு கொண்டே போகின்றன...).

எண்ணங்களும், வார்த்தைகளும் துவங்கின காலம் துவங்கி யுகம் யுகமாக இந்த கேள்விகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன என நம்புகிறேன்.

இவைகளுக்கு , நிச்சயமாக என்னிடத்தில் பதிலில்லை, உங்களிடமும் இருக்காது என்றே நம்புகிறேன்.

"என்னப்பா ஆச்சு உனக்கு என்னென்னவோ பினாத்திட்டு இருக்க !" என்கிறீர்களா .  :) . என்னை மாதிரியான பினாத்தல் கேஸ்களை நீங்கள் நிறைய கடந்து வந்திருப்பீர்கள் (இருப்பின் என்னையும் பொருத்தருள்க) அல்லது நீங்களே என்னை மாதிரியொரு பினாத்தல் கேஸாகக் கூட இருக்கலாம்.(Glad to meet you !).

வாழ்க்கையைப் பார்த்து எவ (னா/ளா) வது இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கிறான்/ள் என்றால் கீழ்காணும் பட்டியலில் உள்ள ஏதேனும் ஒன்றாக அல்லது பலவாக அவர்கள் இருக்கலாம்.

1. கவலையுள்ளவர்கள்
2.குழப்பவாதிகள்
3.விரக்தியடைந்தவர்கள்
4.பொருள் இல்லாதவர்கள்
5.ஞானிகள் (?!!)

உலகின் 99 சதவீதம் பேர் இந்த ஐந்துக்குள் அடங்கி விடுகிறார்கள் என்பதை புள்ளிவிவரக் குறிப்புகளை சேகரிக்கும் அவசியம் இன்றி நான் உறுதியாகச் சொல்வேன்.

அதன் போக்கில் அது அது இயங்கிக் கொண்டிருக்கும் வரையில், பிரச்சனை, கவலை, குழப்பம் ஏதும் இல்லாதிருக்கும் வரையில் வாழ்க்கையை நோக்கி எவரொருவரும் "ச்ச!! என்ன வாழ்க்க டா இது" என கேட்பதே இல்லை.

ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்  உலகவரிடம் நீங்கள் கண்டு வியக்கும் விசயம் எது என ஒருசமயம் கேட்கப்பட்டதாம்., அதற்கவர்

"உலக மக்கள் யாரும் ஒருபோதும் சந்தோசம் வரும் சமயத்தில், ஏன் எனக்கு மட்டும் என கேட்பதே இல்லை ! ஆனால் கஷ்டம் வருகிற சமயத்தில் மட்டும் ஏன் எனக்கு மட்டும் இப்படி என கேட்கிறார்கள், கடவுளை திட்டுகிறார்கள் இது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது" என்றாராம்.

நம்மில் அநேகர் இப்படித்தான் இருக்கிறோம். (என்ன செய்ய ! நானும் அந்த அநேகரில் ஒருவன் தான்).

வாழ்க்கை என்பதற்கு ஆளாளுக்கு ஒரு Definition சொல்கிறார்கள், வாழ்க்கை என்பது போர்க்களம், வாழ்க்கை என்பது பரிட்சை, வாழ்வே மாயம்...

நிறைய நிறைய நிறைய விளக்கங்கள்.

எதாவது ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும் :)

வாழ்க்கை என்பதை நான் ஒரு பயணமாக உருவகித்து நம்புகிறேன், ஒரு புள்ளியில் துவங்கி இன்னொரு புள்ளியில் முடியும் , துவக்கத்தையும், முடிவையும் தீர்மானித்துக் கொண்டு துவங்க முடியாத , அடுத்த நிறுத்ததையோ , திருப்பத்தையோப் பற்றிய எந்தவித முன்னறிவும் இல்லாத ஒரு விசித்திர பயணமாக..

வாழ்க்கை என்பது ஒரு பயணம் !
                               

பயணம் செய்யும் வழியில் எதையெதையோ காண்கிறோம், யார் யாரையோ எல்லாம் சந்திக்கிறோம், பல நேரங்களில் எங்கே போகிறோமென்றே தெரியாமல் எங்கெங்கோவெல்லாம் கூட போகிறோம்.

உங்கள் பயணத்தின் ஒரு சிறு பகுதியில் என்னுடைய இந்த வார்த்தைகளை கடப்பதற்காக நேரம் செலவழிக்கும் ஒவ்வொருவருக்குமாக இந்த கட்டுரைத் தொடரின் ஒவ்வொரு வார்த்தையையும் சமர்ப்பித்து, இந்த தொடரை ஆரம்பிக்கிறேன்.

இக்கட்டுரைத்தொடரை தொடர்ந்து எழுத ... வாழ்க்கையின் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டு பலரின் வாழ்விற்கு Inspiration ஆக இருக்கும்  ஆதர்ஷ பயணிகளின் ஆசிகளையும். தனது சக பயணிகளின் அன்பையும் இந்த வழிப்போக்கன் வேண்டிக் கொள்கிறான்.
                                   
                                                                                                      -  வார்த்தைகளோடு வருகிறேன்... 

Labels: ,

14 Comments:

At Sat Jun 13, 06:01:00 am , Blogger கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மனதை நெருடி விட்டது மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 
At Sat Jun 13, 06:14:00 am , Blogger Yaathoramani.blogspot.com said...

அற்புதமாகத் துவங்கி இருக்கிறீர்கள்
தொடர்கிறோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

 
At Sat Jun 13, 06:15:00 am , Blogger Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

 
At Sat Jun 13, 06:32:00 am , Blogger வெற்றிவேல் said...

ரொம்ப நாள் கழிச்சி ஒரு முடிவோடான தான் வந்துருக்க போல!

 
At Sat Jun 13, 06:55:00 am , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எழுத்தில் நல்ல முதிர்ச்சி காண முடிகிறது. வாழ்த்துகள் விஜயன, வாழ்க்கை பயணத்தில் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வரமுடியாது என்பது நியதி. பயணத்தில் உடன் தொடர்வோம்.

 
At Sat Jun 13, 08:14:00 am , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு ஆரம்பம்... தொடருங்கள்... உணர்ந்ததை ஆணித்தரமாக சொல்லுங்கள்... வாழ்த்துகள்...

 
At Sat Jun 13, 09:01:00 am , Blogger ஜோதிஜி said...

பலரும் வலைபதிவில் எழுதுகின்றார்கள். எழுதிக் கொண்டேயிருக்கின்றார்கள். வாழ்க்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் கடினமாக எழுதி அவரவர் மனதை புண்படுத்த விரும்பவில்லை என்று வேறு சொல்லி படிக்க எளிய என்று இலக்கணம் சொல்லி ஏதோவொன்றை எழுதும் இப்போதைய சூழ்நிலையில் உங்கள் வலைபதிவை தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையில் சிறப்பாக எழுதுகின்றீர்கள். என்னுடைய வாழ்த்துகள். இந்தக் கட்டுரையில் பல பார்வையில் உள்ளதால் தேவைப்படுபவர்கள் அவரவருக்கு தேவையானதை எடுத்துக் கொள்ள முடியும். தொடர்ந்து எழுதுங்க.

 
At Sat Jun 13, 10:39:00 am , Blogger KILLERGEE Devakottai said...

மனதை தொட்டது விடயங்கள் அருமை நண்பரே... தொடர்கிறேன்.

 
At Sat Jun 13, 08:31:00 pm , Blogger Vijayan Durai said...

நன்றி ரூபன்

 
At Sat Jun 13, 08:32:00 pm , Blogger Vijayan Durai said...

வாழ்த்துக்களுக்கும், தமிழ் மண ஓட்டுக்கும் மிக்க நன்றி ரமணி அண்ணா

 
At Sat Jun 13, 08:35:00 pm , Blogger Vijayan Durai said...

:) வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார், தங்களுடன் பயணிப்பதில் , தங்களை என் சக பயணியாக கொண்டிருப்பதில் எனக்கு மிக்க சந்தோசம் சார்.

 
At Sat Jun 13, 08:37:00 pm , Blogger Vijayan Durai said...

அனுபவச் சுடரே , தன்னம்பிக்கை தனபாலன் அண்ணா தங்களின் அன்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி

 
At Sat Jun 13, 08:38:00 pm , Blogger Vijayan Durai said...

மிக்க நன்றி ஜோதிஜி :) தங்களின் அன்பும் ஆதரவும் கிடைத்தமையில் மிக்க சந்தோசமடைகிறேன்.

 
At Sun Jun 14, 04:24:00 pm , Blogger Vijayan Durai said...

thanks ji

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home