Sunday, August 31, 2014

புத்தகக் குறிப்புகள் (4)

புத்தகக் குறிப்புகள் (4)

கேள்விக்குறி
"
உலகில் இதுவரை கோடான கோடிக் கேள்விகளும் பதில்களும் தோன்றி மறைந்திருக்கின்றன. மனித சந்தேகங்கள்,வலிகள் துக்கங்கள்,பிரமிப்பு,மறதி,முட்டாள்தனம்,புரியாமை இவைதான் எல்லாக் கேள்விகளுக்கும் விதைகளாக இருக்கின்றன.
"
        -எஸ்.ராமகிருஷ்ணன் (கேள்விக்குறி புத்தக முன்னுரையிலுருந்து )

எஸ்.ரா வின் கேள்விக்குறி சில குறிப்புகள்  

குறிப்பு 1 :

 ன்றைய தினம் என் உடலுக்கு காய்ச்சல் கண்டிருந்தது, காலையில் அலுவலகம் செல்ல வேண்டும்... போன் செய்து விடுப்பு (லீவ்)  சொல்லிவிட்டு, அறையிருந்த நன்பர்களிடம் "உடம்பு சரியில்லை நான் ஆபீஸ் வரவில்லை" என சொல்லிவிட்டு போர்வைக்குள் மூழ்கி மறுபடியும் தூங்கிப்போனேன்....

எழுந்த போது மதியமாகிவிட்டிருந்தது,

தொட்டுப்பார்த்து காய்ச்சல் என கண்டு சொல்லக்கூட யாருமில்லை,  கசங்கி கிடக்கும் போர்வை, மடிக்காத பாய், கலைத்துப்போட்ட துணிகள்,புத்தகங்கள், சில பேக் (Bag) கள் ,குப்பைகள், வாட்டர்பாட்டல்,  அறை ,தனிமை , நான்...

குழப்பத்தைப் போக்குகிறேன் பேர்வழி என மனம் செய்கிற மாயவேலை:  சிந்தனை . வார்த்தைகள்,சொற்கள்,அனுபவம்,அலோசனை என கைக்கு கிடைத்த நூல்களையெல்லாம் வைத்துக்கொண்டு குழப்பம் போக்கும் பதில்களை பிடிப்பதற்காக மனம் வலை பின்னத்துவங்குகிறதுசில நேரங்களில் பின்னத்துவங்கிய வலை வலையாகவே கிடைப்பதுண்டு , ஆனால் பல நேரங்களில் நூற்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி க்கொண்டு சிக்கலாகிப் போனதொறு உருவமற்ற வஸ்துவே கைகளில் சிக்குகிறது.

அன்றைக்கு என் கைகளில் வலைக்கு பதிலாக உருவமற்ற வஸ்துதான் கிடைத்திருந்தது...

அந்த உருவமற்றை வஸ்துவை கீழ் இறக்கி வைத்துவிட்டு.,

என் அருகிருந்த புத்தகப்பைக்குள் கைவிட்டு அலசி தேடி மறுபடியும் அந்த புத்தகத்தை கையில் எடுக்கிறேன்...

கேள்விக்குறி - எஸ்.ரா வின் புத்தகம்....

கையெடுத்து புரட்டுகிறேன்.... புத்தகத்தை புரட்டிய படி நகர்ந்து கொண்டிருந்த கை , அந்த கட்டுரையை பார்த்த கனத்தில் புரட்டுவதை நிறுத்திவிட்டு புத்தகத்தை தடவிக் கொடுக்க ஆரம்பித்து விட்டது...

கட்டுரைத்தலைப்பு:

"எனக்குனு யாரு இருக்கிறா ?"

ஏற்கனவே அந்த கட்டுரையை முன்பொரு நாளில் வாசித்திருக்கிறேன் ...
  
இந்த முறை  அதன் வார்த்தைகளை கடக்கையில் புதுவித உணர்வொன்றில் புகத்துவங்கியது மனம்.

அம்மா,அப்பா,தங்கை,உறவுகள், நண்பர்கள் என எல்லாரும் இருக்கிறார்கள் ,ஆனால் இப்போது ... இந்த நேரம் ... என்னருகே !!

எல்லோருக்கும் இப்படியானதொரு சந்தர்ப்பம் எப்போதாவது வாய்த்திருக்கலாம் அல்லது வாய்க்கக்கூடலாம்.அன்றைய தினத்தில் அப்போதைக்கு எனக்கு ,

நோய்பட்டுக்கிடக்கும் போது கிடைக்கும் ஆறுதல்களுக்கும்,அரவணைப்புகளுக்கும் ஆசைப்பட்டே சிலர் நோய் வேண்டி, நோய் கொள்கிறார்கள் என சைக்காலஜி புத்தகம் ஒன்றில் படித்த நியாபகம் இருக்கிறது...

" ... ஆஸ்பத்திரியில் கிடந்த போது உறவினர்கள், நன்பர்கள் என சொந்த பந்தங்கள் எல்லாரும் வந்து ஆளாளுக்கு  நலம் விசாரித்து ஆர்லிக்ஸ் பாட்டில்களும்,ஆப்பிள், ஆரஞ்சுகளும் கொண்டு வந்தார்கள் ..... "

என சிரித்த படி பேசும் ஆசாமிகளை நீங்கள் சந்தித்திருக்கலாம்...

நமக்கென அன்பும் அக்கறையும் காட்டுபவர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள நோய்க் காலங்கள் தான் நமக்கு அநேகமாய் உதவுகின்றன

நோய் காலங்களில் தவிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும்,அரவணைப்பும்,ஆறுதலும், மருத்துவமும் கிடைத்துவிடுகின்றனவா??? ...

 • சாலையோரங்களில் புலம்பித்திரியும்  மனநோயாளி குப்பைகளை கிளரி உணவு கொள்கிறானே அவனுக்கு நோய் கண்டால் யார் கவனிப்பார்கள் ?…
 • நம் இந்திய தேசத்தில் 12 சதவீத மக்கள் அன்றாட உணவின்றி அவதிப்படுவதாய் ஒரு புள்ளி விவரம் சொல்கிறார்களே ! அவர்களுக்கெல்லாம் ??...
 • சிக்னல்களில் சில்லரைகளுக்காக அலையும் சிறு குழந்தைகளை காய்ச்சல் கண்டால் கவனித்துக் கொள்ள யாராவது இருப்பார்களா ?
 *************

குறிப்பு:2

 வாழ்வின் பிடிபடாத அத்தனை விசயங்களையும் பிடித்துவிடுகிறேன் பேர்வழி என்று கொக்கி  மாதிரி நின்று கொண்டு இருக்கின்றன கேள்விக்குறிகள்,  இவற்றின் பிடிகளில் சில சமயங்களில் பதில்கள் என்கிற பெயர்களில் வார்த்தைக் கோர்வைகள் சில சிக்குவதுண்டு.பல சமயங்களில் கொக்கிகளுக்கு ஏய்ப்புக் காட்டிவிட்டு கேள்விகள் கேள்விகளாகவே நின்று விடுவதும் உண்டு.

குழந்தை பேசத்துவங்கியபின் செய்கிற முதல் வேலை "கேள்வி கேட்டல்". கேள்வி கேட்டலின் மூலமே அறிவு,மனம்,மொழி போன்றவைகள் வளர்ச்சி பெறுகின்றன.

 எங்கு சென்றாலும், யாருடன் பேசத் துவங்கினாலும் கேள்விகளில் இருந்தே நம் உரையாடல்கள் ஆரம்பமாகின்றன. நம் வாழ்க்கை பெறும்பாலும் பதில்களை விட கேள்விகளாலேயே நிறைந்திருக்கிறது....

எண்ணிக்கைகளுக்குள் பிடிபடாத அளவிளான கேள்விகளால் !!

நாம் கொஞ்சம் தீவிரமாக யோசித்துப் பார்ப்போமேயானால் , நம்மால் ஒரு முடிவான முடிவுக்கு வர முடியும் , வாழ்வியல் மற்றும் வாழ்க்கை சம்பந்தமான எந்தவொரு கேள்விகளுக்குமே தீர்க்கமான பதில்கள் என்பது ஒரு போதும் கிடையாது என்று. நம்புவதற்கு இது சிரமம் என்றாலும் உண்மை இதுவாகத்தான் இருக்கிறது.

பிறப்பு,வாழ்க்கை,சிக்கல்,பிரச்சனை, காதல்,உறவு,மனம், இறப்பு, கடவுள்......இன்னும் இப்படி நிறைய நிறைய நிறைய

குழப்பம் தவிர்ப்பதற்காய் சில பல நம்பிக்கைகளையும் தீர்மானங்களையும் ,வார்த்தைக் கோர்வைகளையும் பதில்களாக நம்பி கேள்விக்குறிகளின் மேலிருக்கும் கொக்கியை முற்றுப்புள்ளி முடிவாய் காணப் பழகிக் கொள்கிறது மனம். 

ஒன்றை இன்னொன்றால், இன்னொன்றை வேறொன்றால் வேறொன்றை மற்றொன்றால் என வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றி பதில் எட்டி விட்டதாய் பாசாங்கு காட்டிக் கொள்கிறோம்...

இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் , இப்படியொரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சின்ன ஜீவராசிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் குட்டி வாழ்க்கையில் இதெல்லாம் தேவையற்றது, வாழும் மட்டும் முழுசாய் வாழ்ந்து விட்டு   செத்துப் போக வேண்டியது தான்…
 -என எல்லைகள் இட்டுக்கொண்டு வாழப் பழகி விட்டோம்.

ஒருவேளை இப்படியே இருந்துவிடுவது தான் சரியோ எனத் தோன்றுகிறது!

                                ***********
குறிப்பு 3:

அதே அட்டை, அதே பக்கங்கள் , அதே எழுத்துக்கள் என்றாலும் சில புத்தகங்களால் அந்த மாயா ஜாலத்தை செய்ய முடிகிறது. வெவ்வேறு முறை வெவ்வேறு மாதிரியாக வடிவெடுக்கும் மாயாஜாலம்

இந்த புத்தகத்தில் இருக்கும் கேள்விகளும் கட்டுரைகளும் , உங்கள் அனுபவத்திற்கேற்ப உங்களோடு வேறு வேறு த்வனியில் பேசும் வல்லமை கொண்டவைகள்..

இந்த புத்தகத்தில் இருக்கும் கேள்விகள் அத்தனையும் மிகச் சாதாரணமானவைகள் , அன்றாடங்களில் நம்மை கடந்து போகும் , அல்லது நாம் கடந்து போகும் கேள்விகள் தான்..

 • ஏமாத்தறது தப்புனு ஏன் யாருக்குமே தோணமாட்டேங்குது ?,
 • உதவின்னு கேட்டா யாரு செய்யறா?
 • நான் அழகா இருக்கேனா?

இப்படியாக இந்த புத்தகத்தில் தலைப்புகளுடன் பதினாறு கேள்விக் கட்டுரைகள் இருக்கின்றன, மனக் குளத்தில் கேள்விக் கற்களை எறிந்து அது ஏற்படுத்திய சலனங்களை எழுத்துக்களாக்கி பதிந்திருக்கிறார் எஸ்.ரா. 

இந்த புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள்  கேள்விக்குறிகளின் கொக்கிகளை அறிவாற்றலால்  அசைத்து, பதில்களை பற்றி இழுத்து வந்து உங்கள் முன் போடப் போவதில்லை.  உங்களுக்குள் இருக்கும் கேள்விகளுக்கு பதில் காணும் வழிமுறையை கற்றுக்கொடுக்கப்போவதில்லை.

ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் எப்போதுமே சிலபல கேள்விகள் மையம் கொண்டிருக்கின்றன .... பதில்கள் கிடைக்கும் என காத்திருந்து காலத்தை வீண் செய்வதைவிட கேள்விகளை புரிந்துகொண்டு அவற்றை கடந்து செல்தல் சாலச் சிறந்தது.

இந்த கட்டுரைகள் உங்களுக்கு கேள்விக்குறிகளுடன் நீங்கள் கொள்ள வேண்டிய "ஒரு அணுகுமுறை வித்தையை" கற்றுக் கொடுக்கக் கூடலாம்.


“கேள்விகளுக்கான பதில்களை தேடி அலைவதைக் காட்டிலும் , கேள்விகளைச் சுற்றிச் சுற்றி வலம் வருதல் தான் அவற்றை கடந்து போக உதவி செய்யும்”

பின் குறிப்பு :

எழுத்தாளர் எஸ்.ராவின் வலைப்பூ
எனக்குனு யாரு இருக்கா? (PDF இலவச டவுன்லோடு)  (110 kb) டவுன்லோடு செய்ய இயலவில்லையெனில் தங்கள் ஜிமெயில் முகவரியைக் குறிப்பிடவும் 

Post Comment

6 comments:

 1. //பதில்கள் கிடைக்கும் என காத்திருந்து காலத்தை வீண் செய்வதைவிட கேள்விகளை புரிந்துகொண்டு அவற்றை கடந்து செல்தல் சாலச் சிறந்தது.//
  உண்மைதான் நண்பரே
  நன்றி

  ReplyDelete
 2. //ஒன்றை இன்னொன்றால், இன்னொன்றை வேறொன்றால் வேறொன்றை மற்றொன்றால் என வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றி பதில் எட்டி விட்டதாய் பாசாங்கு காட்டிக் கொள்கிறோம்...//

  செம விஜயன்.. அற்புதமான எழுத்தாக்கம்..

  ReplyDelete
 3. வணக்கம் நண்பா...

  சிறப்பான எழுத்தாக்கம்...

  தொனியில் எனத்தானே வர வேண்டும்... த்வனியில்....?

  ReplyDelete
  Replies
  1. // த்வனியில்// அது ஏதோ இலக்கியமாம்மா, அப்படித்தான் வரனும்மாம் :-)

   Delete
 4. :) த்வனி வடமொழி
  தொனி தமிழ்

  ReplyDelete
 5. எலக்கியமென அவதானித்ததற்கு. நன்றி சீனு அண்ணா ;)

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....