கல்லூரி கட்டணம் முதல் மாத சம்பளம் வரை...
ஒரு காலத்தில் என்ஜினியரிங் படிப்பு என்பது மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. அதற்கு கல்லூரிகளின் எண்ணிக்கை, கட்டணம், பொருளாதாரம், நுழைவுத் தேர்வு என பல்வேறு காரணங்கள் இருந்தன.
ஆனால்.,
இன்றைய நிலைமையில், தடுக்கி விழுந்தால் என்ஜினியரிங் படிப்பு என்றாகிவிட்டது. 552 என்ஜினியரிங் கல்லூரிகளை (தமிழ்நாட்டில்) வைத்துக்கொண்டு வருடந்தோறும் இலட்சோப இலட்சம் பொறியாளர்களை உருவாக்குகிறோம் . விளைவு, பொறியியல் என்கிற விசயம் அதன் மகத்துவத்தை இழந்து வருகிறது.
தடுக்கி விழுந்தால் என்ஜினியரிங் கல்லூரி |
கிராமப்புற மாணவர்களும் கூட பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான் நுழைவுத் தேர்வு நீக்கம், கட்ஃஆஃப் மதிப்பெண் குறைப்பு இவையெல்லாம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள் ! இதன் இன்னொரு பரிமாணம் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.
என்ஜினியரிங் என்றால் என்ன? , அதன் பயன் என்ன? என்று கூட தெரியாத அளவுக்கு பல ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
எஞ்சினியரின் விடைத்தாள் :) ! |
ஒருபுறம் கல்லூரிகளில் வளாகத் தேர்வு மூலமாக அனைத்து துறை மாணவர்களையும் (கணிணி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேசண் … மேலும் பல துறைகள்) தேர்வு செய்து அவர்களுக்கும் படிப்புக்கும் தொடர்பில்லாத வேலைகளில் அமர்த்துகிறார்கள்.
இது மான்கள், புலிகள், குதிரைகள், பசுக்கள் போன்ற எல்லா விலங்குகளையும் தேர்வு செய்து உங்களுடைய வேலை நரியை போன்று நடிப்பது என்பது போல் உள்ளது. (இது நிறுவனங்களின் தவறு கிடையாது. அவர்களின் தேவை அவ்வளவுதான்.)
மறுபுறம் 5000, 6000 ரூபாய் சம்பளத்துக்கு கால் சென்டர், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேலும் பல படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் காலத்தை ஓட்டுகிறார்கள்.
5 இலட்சம் ரூபாய் செலவு (கடன் வாங்கி) செய்து 4 வருடங்கள் என்ஜினியரிங் படித்தவனும், 50,000 ரூபாய் செலவு செய்து 3 வருட டிகிரி படித்தவனும் ஒரே வேலை செய்கிறான்.
இன்னொரு புறம், கிடைக்கும் வேலையை படிப்பிற்கு தகுதி இல்லாத வேலை என்று சொல்லிக் கொண்டும், குறைந்த சம்பளத்திலாவது எதாவது வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் எத்தனையோ வேலை இல்லா பட்டதாறிகள் நாட்டில் இருக்கிறார்கள்.
இந்த நிலைமைக்கு கல்லூரிகளையோ, அரசாங்கத்தையோ குறை கூறுவதை விட மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தான் குறை கூற வேண்டும்.
மற்ற எல்லா படிப்புகளைப் போல என்ஜினியரிங்கும் ஒரு படிப்புதான். பிறகு ஏன் இதற்கு மட்டும் இவ்வளவு பெரிய மோகம்? சிந்தியுங்கள்….
இந்தியாவில் சில நிறுவனங்களே மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்து, உரிய பயிற்சிகளை கொடுத்து அந்தந்த வேலைக்கு தகுந்தவாறு மாற்றுகிறார்கள்.
பெரும்பாலான நிறுவனங்கள் அந்தந்த வேலைக்கு தேவையான அனைத்து திறமைகளும் (skills) உள்ள பட்டதாரிகளை தான் எதிர்பார்க்குகிறார்கள். ஆட்களை எடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சிகளை கொடுப்பதற்கு அந்த நிறுவனங்களுக்கு நேரமும் பணமும் தடையாக உள்ளன. இந்த நிறுவனங்களின் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்தந்த வேலைக்கு தகுதியான திறமைகள் உள்ள ஆட்கள் கிடைப்பதில்லை.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, நம்முடைய கல்லூரி பாடத்திட்டம் மட்டும் நம்முடைய வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மேலும் வேலைக்கு தேவையான பல திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது.
பெரும்பாலான மாணவர்கள் ஐ.டி (IT) வேலை என்றால் ப்ரொக்ராம்மிங் (Programming), டிசைன் (Design) சார்ந்த வேலை மட்டும் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவை தவிர ஐ.டி இன்டஸ்ட்ரியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. [SEO, Social Media Marketing, Testing, Business analyst, multimedia, L&D, Sales, marketing, Admin, HR, finance.. etc].
இதே போன்றே எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என இதர துறைகளிலும் அறியப்படாத அதே சமயம் ஆட்கள் தேவைப்படும் அநேக கிளைத்துறைகள் இருக்கின்றன.
ஆகவே மாணவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளையும், அதற்கான திறமைகளையும் ஆராய்ந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் சுய திறமைகளை கண்டறிந்து அதை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்.
ஒரு சின்ன புள்ளிவிவரம்: (துறைவாரியாக சம்பள சதவீதம்) !
கட்டுரையாக்கம்: வினோத்குமார்.R
http://vinothkumar.in/
Tweet | ||||
இன்னும் இதைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் அறியாமலே பலரின் படிப்புகள் தொடர்வது தான் வேதனை...
ReplyDeleteதலைப்பு நல்லாவே வைச்சீங்க...!
ReplyDelete