Tuesday, January 19, 2016

பயணங்கள் முடிவதில்லை ...

"பயணங்கள் முடிவதில்லை" என்ற இந்த தொடர்பதிவுப் பயணத்தை தொடர அழைத்திருக்கும் வரலாற்று நூல் ஆசிரியர் ,, பிரபல பதிவர் ,எழுத்தாளர் , இலக்கியவாதி  நன்பர் வெற்றிவேலிற்கு நன்றி .

பயணங்கள் முடிவதில்லை ...

"இலக்கு ஏதுமின்றி பயணிக்கிற  பயணிகள் பாக்கியவான்கள் ".
                                                                                 - எழுதப்படாத ஒரு புத்தகத்திலிருந்து


கானக வழியாக   பெங்களூரூ To  கலசா
 பயணித்துச் செல்கிற இடங்களைவிட,  பயணங்களை அதிகம் விரும்புகிறவன் நான்.

சென்னையில் வசித்திருந்த காலங்களில் அங்கு கிடைக்கும் 50 ரூபாய் பேருந்து பயணச்சீட்டை (எந்த இடத்திற்கும்  சென்னைக்குள் பயணிக்க ஒரு நாள் Bus pass) வாங்கிக்கொண்டு இறங்கும் இடம் பற்றிய பிரக்ஞை ஏதும் இன்றி  சுற்றியிருக்கிறேன் :) .

மறக்க முடியாத பயணம் என்றவுடன் பலரது மனங்கள் நீண்ட பயணங்களைத்தான் அசைபோடுகின்றன (இந்த தொடர்பதிவை ரிவர்ஸ் கியரில் லிங்க் லிங்க் காக பயணித்து அடியேன் அவதானித்து கண்டறிந்த உண்மை ). :)


 சப் கான்சியஸாக நம் ஒவ்வொருவரின் மனமும் இலக்கில்லாத நீண்ட பயணத்தை விரும்புகிறது என நினைக்கிறேன், தூக்கி சென்றிருக்கும் சுமைகளை மறந்து, இறங்க வேண்டிய இடத்தை மறந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டு, கதை கேட்டுக்கொண்டு, கதை சொல்லிக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, எதையாவது யோசித்துக்கொண்டு, அன்புத்துணையை ஆரத்தழுவிக்கொண்டு, மடி மீதோ, தோள் மீதோ சாய்ந்துகொண்டு, பக்கத்து சீட் குழந்தையின் குறும்புகளை ரசித்துக்கொண்டு, சைட் அடித்துக்கொண்டு ......

சரி ! ஏன் இப்போது இவையெல்லாம் இங்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன் ! வேறொன்றுமில்லை , இந்த தொடருக்கான தலைப்பு செய்த விளைவு !

இலக்கில்லாத பயணங்கள் மட்டுமே முடிவில்லாது தொடர முடியும். முடிவில்லாத பயணம் என்பது இலக்கில்லாதிருந்தால் மட்டுமே சாத்தியமாக முடியும்.

இப்போது கேள்விகள்...

1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?முதல் ரயில் பயணம் என் நினைவில் இல்லை ! இருந்தாலும் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் கைக்குழந்தையாக இருந்த காலத்தில் ரயில் கம்பார்ட்மென்டின் இரு லக்கேஜ் வைக்கும் கம்பிகளுக்கு நடுவே சேலையில் கட்டிய தூழிக்குள் என்னைத் தொங்க வைத்து ரயிலின் தாலாட்டலில் தூங்க வைத்தபடி பயணிப்பார்களாம்.
அம்மாவும் நானும் , ஒரு ரயில் பயணத்தில்
                                        
நினைவில் இருக்கும் முதல் ரயில் பயணம் (திருச்சிக்கு தாத்தாவோடு  பயணித்தது., மங்கிய மஞ்சள் விளக்கு வெளிச்சம், மரக்கட்டை சீட்,எனது அப்போதைய வயதைச் சரியாக டி.டி.ஆரிடம் சொன்னது, டி.டி.ஆர் கையில் தாத்தா 20 ரூபாய்  கொடுத்தது என ..) நினைவில் இன்னமும்  பத்திரமாகவே இருக்கிறது.  

2. மறக்கமுடியாத பயணம் எது?

மறக்க முடியாத பயணம்.. :) ,வேலை விசயமாக மகராஸ்டிரம் முழுக்க திரிந்துகொண்டிருந்த நேரத்தில் , முப்பது மணிநேரப்பயணமாக தீபாவளிக்கு முந்தைய நாள்  காலையில் மகராஸ்ட்ரத்தின் ஒஸ்மனாபாத்-ல் இருந்து  பயணத்தைத் தொடங்கி, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களில் இருந்த இடைவெளிகளை ஒவ்வொரு இடமாக மாறி மாறி கடந்து தீபாவளி தினத்தின் மதியத்தில் வீடு வந்து சேர்ந்தது. தீபாவளியை உறக்கத்தில் தீர்த்தது :) .

அந்த சோகக்கதை இந்த லிங்க்-ல் விரிவாக இருக்கிறது.

மகராஸ்ட்ர மலைப்பிரதேசம்:பனாலா


3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

சுமையில்லாமல் பயணிக்க .

வராஹ நதிக்கரையோரம்


4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

பயணத்தில் விரும்பி கேட்கும் இசை : இளையராஜா

5. விருப்பமான பயண நேரம்?

பொதுவாக என் பயணங்கள் பஸ், ரயில் என்று மட்டுமே இருந்ததனாலோ என்னவோ பயணத்தை துவங்குவதில் விருப்பமான நேரம் என்று  எதையும் வரையறை செய்து சொல்ல மனம் குழம்புகிறது.

பயணத்தின் போது தூங்காது தூங்கி  கடக்கும் இரவுகளும், தூக்கம் கலைந்த பின்னான  அதிகாலைகளும்  மிகப் பிடிக்கும்.

6. விருப்பமான பயணத்துணை. 

வினோத் குமார்,  பாலாஜி, வெற்றிவேல், உதேஷ்,  சீனு அண்ணா .

7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

பொதுவாக தனியாக பயணிக்கும் பயணங்களில் மட்டும் தான் புத்தகம் வாசிப்பேன். எந்த புத்தகமாயினும் வாசிப்பேன் , ஆனால் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் , சின்ன நாவல்கள் என அதிக பக்கங்களுக்கு தொடராத கையடக்க வகையறா புத்தகங்கள் மட்டும் பயண விருப்பம்.

8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்? 

Cycle Ride from Rameswaram to dhanushkodi !

ஒரு வேளை பைக் ஓட்டத்தெரிந்தால் பைக்  ரைட் என சொல்லி இருப்பேனா எனத் தெரியவில்லை, :)  ஆனால் வேகமாக ஓட்டிக் கடப்பதில்  அந்தப் பயணப் பயன் கிட்டாது போகும் என்பது என் கருத்து. இரு புறங்களிலும் கடல் , நடுவில் சாலை, களைப்பில் நிழலாற மரங்கள்.  (  கடலலைகளில் கால் நனைக்கையில் களைப்பின் உச்சம் நனைந்து கரைந்து மறைந்து போவது !! Chanceless ).

9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்? 


இல்லை , ( with conditions apply) .

பொதுவாக முணுமுணுத்தல்கள்  இருந்ததில்லை, சிற்சில நேரங்களில் சில பாடல் வரிகள் , கடக்கும் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனதிற்குள் தோன்றுவதுண்டு.

10. கனவுப் பயணம் ஏதாவது?


நிறையா இருக்கு வெற்றி ..  பெரிய்ய்ய... லிஸ்ட் இருக்கு... தமிழ்நாட்டுலயே பாக்காத இடம் இன்னும் ஏகப்பட்டது இருக்கு... , தாஜ்மகால், இமயமலை, நயாக்ரா அருவி, வெனிஸ் நகரம், சிங்கப்பூர் , பிரமிட்....

உலகத்தையே சுத்தனும்னு  கனவு இருக்கு... (பொதுவாக  மலை, அலை , மற்றும்  கலை பிரதேசங்களை நோக்கிய பயணம் மிக மிக மிக ... பிடிக்கும் ).

கனவுப்பயணம் !! இன்னதென்று ... ஒற்றை பதிலில் சொல்ல வேண்டுமென்றால் ,

பயண இடம் சார்ந்து என் பதில் செர்பியாவில் இருக்கும் நிக்கோலா டெஸ்லா மியூசியத்தை சாவதற்குள் பார்த்துவிட வேண்டும் என்பது .

பயணம் சார்ந்து என் பதில் கப்பலில்  ரொம்ப தூரம் பயணிக்கனும்னு  :)


தொடர் அழைப்பு

புது அழைப்பு

1. வினோத் குமார்
2.பிரசாந்த்

மறு அழைப்பு:

3. சீனு அண்ணா
4.அரசன் அண்ணா
5.முரளி சார் (மூங்கில் காற்று)
4.பிரியா அக்கா

இந்த தொடர் பதிவை முதன் முதலில் துவங்கி தமிழ் வலையுலகில் வலம் வர வைத்த திருமதி.மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு நன்றிகள்.
 

Post Comment

12 comments:

 1. என் அழைப்பினை ஏற்று தொடர் பதிவு எழுதியமைக்கு நன்றி விஜயன் துரைராஜ்.

  நீ கூறுவது சரிதான் பயணம் என்றாலே நெடுந்தொலைவு பயணம் தான் முதலில் வந்து போகிறது. குறுகிய பயணங்களை மறந்து போகிறோம். தனுஷ்கோடி வரை நடந்துசென்று பயணித்ததை எளிதில் மறக்க முடியுமா??? அதிலும் அந்த வில்லூண்டி தீர்த்தக் கடற்கரையில் நாள் முழுவதும் அமர்ந்து பேசிய கதையைத்தான் எளிதில் மறக்க முடியுமா???

  மீண்டும் ஒருமுறை நாம் அதே போன்றதொரு பயணத்தைத் தொடரவேண்டும் கடல்...

  ReplyDelete
 2. with conditions apply - அது என்னாப்பா...?

  ReplyDelete
 3. இயல்பான நடையில் சுவையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 4. சோகக் கதையைப் படிக்க முடியலையே ,கலாமகனே :)

  ReplyDelete
  Replies
  1. அட ஆமா !! , இப்போ லிங்க் அப்டேட் செஞ்சுட்டேன்

   Delete
 5. பயணத்தின் தொடக்கம் போலவே பதிவின் தொடக்கமும் சுவாரசியம்.
  கனவுப் பயணம் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்

   Delete
 6. ஒவ்வொரு பதிலும் செம. படங்கள் அழகு!
  8. chanceless! :)
  10. WOW WOW

  ReplyDelete
 7. விஜயன் சகோ பதில்கள் ஒவ்வொன்றும் அத்தனை ரசனை!!! ஒரு விஷயம் தெரியுமா, எனக்கு ஸ்கூட்டி ஓட்ட தெரியும் ஆனா சைக்கில் ஓட்டத் தெரியாது. என் students சில சமயம் டீச்சர் என் சைக்கிளில் ஒரு round போறீங்களா என கேட்பார்கள். நான் மையமாய் தலையாட்டி எஸ்கேப் ஆகிடுவேன்:)) இப்போ அடுத்த வேலை wiki அண்ணாகிட்ட அந்த செர்பிய ம்யூசியம் பார்க்கிறது தான். இந்த பயணம் பல புதிய நட்புகளை தேடித்தந்திருக்கிறது. பயணத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி சகோ:)

  ReplyDelete
  Replies
  1. :) செர்பிய மியூசியம் நிக்கோலா டெஸ்லாவினுடையது, அவர் என் ஆதர்ஷ விஞ்ஞானி! அவர் கைப்பட வடிவமைத்த பொருட்கள் அந்த மியூசியத்தில் உள்ளன. Nikola tesla museum னு தேடுங்க விக்கில :)

   Delete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....