சமீப காலமாக சமச்சீர் கல்வி பற்றி நிறைய செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்த சொல்லி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தமிழக அரசு முறையிட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு தீர்ப்பு சொல்லியிருக்கின்றன.அக:2 க்குள் சமச்சீர் கல்வி பாடத்திட்ட நூல்களை விநியோகிக்கச் சொல்லி உத்தரவும் போட்டிருக்கின்றன.
சமச்சீர் கல்விமுறை பல அறிஞர்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது.இது தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
சமச்சீர் கல்விமுறை பல அறிஞர்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது.இது தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதெல்லாம் சரி உண்மையிலேயே இந்த சமச்சீர் கல்வி முறை பயனுள்ளது தானா? மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட கல்வித் திட்டம் தானா?
இந்த பதிவில் சமச்சீர் கல்வி பற்றிய கருத்துக்களை பதியமிடுகிறேன்…
மறக்காமல் பின்னூட்டம் (Comments) கொடுங்கள்...
சமச்சீர் கல்வி?
தமிழகத்தில்,
1.அரசுப் பள்ளிகள்
2.மெட்ரிக் பள்ளிகள்
3.ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்,
4.ஓரியண்டல் பள்ளிகள் [சமஸ்கிருதம், உர்தூ இன்னபிற.]
-என்ற நான்கு விதமான கல்வி நிலையங்கள் உள்ளன.
இவை எல்லாவற்றிற்கும் பொதுவாக தமிழகத்தில் படிக்கிற அத்தனை பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்ட முறையை முன்னள் தமிழக அரசு உருவாக்கியது.இது தான் சமச்சீர் கல்வி என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் மற்றும், அவர்களின் பெற்றோர்கள் மனதில் கவலையை கிளப்பிக் கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கிறது.
சமம் இல்லை:
இந்த சமச்சீர் கல்வி ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பயின்று கொல்லலாம் தமிழில் படிக்க விரும்புபவர்கள் தமிழில் படித்து க் கொள்ளலாம் என்கிற கொள்கையை கொண்டிருக்கிறது.அனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் மொழி வழியாகவே ஆரம்ப கல்வி இருக்க வேண்டும் தாய் மொழிக் கல்வி மூலம் தான் மாணவர்களின் சிந்தனை புரிதல் போன்ற திறன்கள் மேம்படும்(ஆங்கில மீடிய மாணவர்களுக்கு தமிழ் சரியாக தெரியாது எனவே அவர்கள் ஆங்கில வழியில் கல்வி கற்பதே சரி என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறான சிந்தனை).ஆங்கிலம் மொழிப் பாடமாக மட்டும் இருப்பது சரி தான் ஆனால் வழிப்பாடமாக அதை எதிர்பார்ப்பது தவறு என்பதே என் கருத்து(பயிற்று மொழி).தமிழ் தெரியாத தமிழ் குழந்தைகளின் எண்ணிக்கையை மட்டுமே இந்த ஆங்கில வழி கல்வியால் தர முடியும்.
சமச்சீர் கல்வி சம நோக்கு கொண்டதாக இருக்க வேண்டும்.
சீர் இல்லை:
தமிழக அரசு இந்த போலி சமச்சீர் கல்வியை எதிர்த்தது அரசியல் காரண்ங்களுக்காக தான் என்று கூறப்பட்டாலும்,
பாடத்திட்டத்தின் குறைகள்,எழுத்துப்பிழைகள்,இலக்கணப்பிழைகள் இவைகளும் முக்கியக் காரணமாக உள்ளது.
மெட்ரிக் மற்றும் இதர கல்வி நிலையத்தை சார்ந்த பள்ளிகள் (Educatinal Boards).சமச்சீர் கல்வியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணமாக இதை சுட்டிக் காட்டுகின்றன.
எழுத்தாளர் பா.ராகவன் தன் வலைத்தளத்தில் தமிழக அரசின் சமச்சீர் கல்வி திட்டத்தை சேர்ந்த சமூக அறிவியல் புத்தகத்தை ஒரு சிறந்த நகைச்சுவை புத்தகமாக கூறியுள்ளார்,மேலும் நகைப்பிற்கு காரணமாக இருந்த அந்த புத்தகத்தின் பகுதிகளையும் பட்டியளிட்டுள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளத்தில் சமச்சீர் கல்வியை இப்படி குறிப்பிடுகிறார்:
"இந்த சமச்சீர் கல்விப்பாடங்கள்,மாணவர்களின் கோணத்தில் அல்ல ஆசிரியர்களின் கோணத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய சர்வதேசப்போட்டிச்சூழலை ஒட்டி அவை அமைக்கப்படவில்லை. இன்றுள்ள ஆசிரியர்களுக்கு என்ன தெரியுமோ அதைக் கற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது மேலதிகப் பயிற்சி இல்லாமல் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தவேண்டும் என்பதே இலக்காக இருந்துள்ளது. அந்த ஆசிரியர்கள் பெருபாலும் பத்துப்பதினைந்து வருடம் முன்பு பட்டம்பெற்றவர்கள் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.
முழுக்கமுழுக்கத் தகுதியற்ற ஆசிரியர்கள் தகுதியற்ற ஆசிரியர்களுக்காக அமைத்துக்கொண்ட பாடத்திட்டம் இது. கருணாநிதி அரசை எப்போதுமே ஆசிரியர்கள் தங்கள் சொந்த அரசாக நினைப்பவர்கள். அவருக்குத் தேவை அவரது பெயர் ஆங்காங்கே வருவது. அந்த சலுகையை அவருக்கு வீசித் தங்களுக்கு வேண்டியதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்."
ஒரு பொதுக்கல்வி திட்டத்தை தயாரிக்கும் போது பொருப்புணர்வு,விழிப்புணர்வு போன்றவை ஏதுமின்றி அவசர அவசரமாக செயல்பட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த புதிய கல்விமுறை. புதியதாக வருகிற முறை பழைய முறையைவிட மேம்பட்டதாக இருக்க வேண்டும்,ஆனால் இது தமிழகத்தில் நடைமுறையில் இருந்த முந்தைய கல்வி முறையை விட பின் தங்கியது என்பது வேதனையான விசயம்.
இந்த கல்வி முறை உண்மையில் சமச்சீர் கல்வி முறையே இல்லை,இதை பொதுக்கல்வி முறை என்று கூறுவது வேண்டுமானால் பொருந்தும்.
இந்த கல்வி முறை உண்மையில் சமச்சீர் கல்வி முறையே இல்லை,இதை பொதுக்கல்வி முறை என்று கூறுவது வேண்டுமானால் பொருந்தும்.
தரமான முறையில் பயிற்சியளிக்கப்பட்ட சரியான ஆசிரியர்களும், பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய சரியான பாடத்திட்டமும்,நடைமுறை வாழ்க்கையில் மாணவர்களுக்கு பயன்படும் விசயங்களையும் கொண்ட கல்வி முறையே சமச்சீர் கல்வி .சமச்சீர் கல்விக்கு நானும் ஆதரவாளன் தான் . மாறாக, ஒரு மட்டரகமான கல்வித்திட்டத்தை "இந்த போலி சமச்சீர்கல்வி முறையை"அனைவருக்கும் பொது என்று கட்டாயப்படுத்தினால் அது ஆரோக்யமான நிலை அல்ல.இது கொடுமையான விசயம்.
இந்த கல்வி முறையால் பெரிதும் பாதிக்கப்படப் போவது வருங்கால இந்தியாவின் நம்பிக்கைத் தூண்களான நம் மாணவ சமுதாயம் தான்.
இந்த அரசு திரும்பவும் சமச்சீர் கல்வியை தகுதியான நிபுனர்கள் உதவியுடன் சீர் செய்து வேறு வடிவில் அடுத்த ஆண்டு மறுபடியும் அறிமுகப்படுத்தலாம் என்றே எனக்குப் படுகிறது.
நீங்க என்ன நினைக்கிறீங்க?...
Tweet |