Thursday, June 20, 2013

பேஸ்புக்கும் பெண்களும் பாகம்-2

(பேஸ்புக்கில் உள்ள சேரிங்க் ஆப்சன் கள் ஒரு பார்வை)


பேஸ்புக்கில் பதிவுகளை பதியும்போது கவனிக்கவேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்:

பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ,படங்கள், லிங்குகள் என... (உங்கள் மனதில் இருக்கும் விசயத்தை) பகிரும் போது ,அந்த விசயம் யார் யாருக்கு தெரியவேண்டும், யார் யாருக்கு தெரியக்கூடாது என்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் உரிமையை பேஸ்புக் தருகிறது.




Public:

 Public என்கிற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்து உங்கள் Post ஐ பகிரும் போது இணைய உலகில் உலா வரும் யார் வேண்டுமானாலும், (அவர் உங்களுக்கு தெரியாத நபராக கூட இருக்கலாம்).அந்த ஸ்டேட்டஸையோ ,பட்த்தையோ பார்க்க முடியும்.

Friends:

இந்த ஆப்சனை செலக்ட் செய்துவிட்டு post செய்யும் போது நீங்கள் பகிர்ந்த அந்த தகவலை உங்கள் Friend list -ல் உள்ள் நன்பர்கள் மட்டும் பார்க்க முடியும்.

Only me:

இந்த ஆப்சனுடன் பகிரப்படும் விசயங்கள் உங்கள் டைம்லைனில் இருக்கும் ஆனால் உங்களுக்கு மட்டும் தெரியும் ,வேறு யாரும் இந்த விசயங்களை பார்க்க முடியாது. இதனால் என்ன பயன் என்று யோசிக்கிறீர்களா, பேஸ்புக்கில் நீங்கள் படித்த ,பிடித்த ,பயனுள்ள, ரசித்த விசயங்களை சேகரித்து வைக்க முடியும், பிற்பாடு எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.



உங்களோடு மட்டும் (Only me) பகிரப்பட்ட பதிவுகள் மேற்கண்டவாறு இருகோட்டுக்குள் இருக்கும், இந்த கோட்டை தாண்டி இது யாருக்கும் தெரியாது :)

Custom:
இந்த ஆப்சனை நீங்கள் செலக்ட் செய்யும் போது, இன்னும் சில ஆப்சன் கள் உங்களுக்கு கிடைக்கிறது.




Friends of friends செலக்ட் செய்யும் போது ,உங்கள் பதிவு, உங்கள் Friendlist - ல் உள்ள நன்பர்களுக்கும், அவர்களின் நன்பர்களுக்கும் சேர்த்து பகிரப்படும்.இதில் யார் யாருக்கு நீங்கள் பகிரும் பதிவு தெரியக்கூடாது என்கிற ஸ்பெசல் ஆப்சனும் தரப்படுகிறது. நீங்கள் இந்த பட்டியலில் கொடுக்கும் நபர்களுக்கு நீங்கள் பகிரும் தகவல் தெரியாது.



இங்குள்ள Friends ஆப்சனும் இதே சேவையை தருகிறது.அதாவது நீங்கள் உங்கள் Friend list -ல் உள்ள குறிப்பிட்ட நபர்களை தவிர மற்ற நன்பர்களுக்கு நீங்கள் ஷேர் செய்யும் விசயம் தெரியுமாறு பகிர்ந்து கொள்ள முடியும்.



Specific People or List. என்கிற ஆப்சன் மிக முக்கியமானது, இதன் மூலம் நீங்கள் உங்கள் பதிவை குறிப்பிட்ட சில பல நன்பர்களுடனோ, நன்பர்கள் பட்டியலுடனோ பகிர்ந்து கொள்ள முடியும்.




Share this with என்கிற பெட்டியில் கொடுக்கப்படும் நபர்களுக்கு மட்டும் உங்கள் பதிவு பகிரப்படும்.

குறிப்பு:
Custom ஆப்சனை பயன்படுத்த நீங்கள் கீழ்கண்டவாறு செயல்பட வேண்டும்
1.      Custom ஆப்சனை செலக்ட் செய்யவும்
2.      இதன் பின் வரும் Custom Privacy பெட்டியில் உங்களுக்கு தேவையான ஆப்சனை செலக்ட் செய்து கொள்ளவும்
3.      பிறகு "Save Changes" கொடுக்கவும்


4.   அதன்பிறகு Post என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.



நமது மொபைல் போன் களில் SmS Group கள் அமைப்பது மாதிரி பே
ஸ்புக்கில் நமது நன்பர்களை வகைப்படுத்தி பிரித்து வைத்து, குறிப்பிட்ட நபர்களின் பட்டியலோடு மட்டும் குறிப்பிட்ட விசயத்தை பகிர்ந்து கொள்ள முடியும் , இது பற்றி விளக்கமாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வாசகர்களின் கேள்விகள்,கருத்துக்கள்,விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

லேபில்கள் :
பேஸ்புக் டிப்ஸ் தமிழில், பேஸ்புக் செக்யூரிட்டி டிப்ஸ் தமிழில், பேஸ்புக்கும் பெண்களும்,பேஸ்புக் மோசடிகள், பேஸ்புக் எச்சரிக்கை, girls and facebook,facebook safety tips in tamil, tamil moolam facebook tips, facebook security tips in tamil, பேஸ்புக் மூலம் பதிவை பாதுகாப்பாக பகிர்வது எப்படி

 

Post Comment

Sunday, June 02, 2013

பேஸ்புக்கும்... பெண்களும் ... (பாகம்-1)

   
(பெண்கள் ஸ்பெசல் தொடர்)



  
 இந்த தொடர் பேஸ்புக்கில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும்பாதுகாப்பாக இருக்க அவர்கள் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் உங்களோடு பேச இருக்கிறது... (அட ஆண்களுக்கு இந்த தொடர் யூஸ் ஆகாதாப்பா என்று கண் சிவக்க கடுப்பாகும் என் இனங்கள் உங்களுக்கு தெரிந்த தோழிகள் உறவுக்கார பெண்களுக்கு இந்த டிப்ஸ் களை கொடுக்க இதை படித்து வைத்துக்கொள்ளுங்கள்அல்லது நீங்களும் பேஸ்புக்கில் பாதுகாப்பை (Privacy ,Security and Safety) விரும்பினால் இந்த டிப்ஸ்களை பிரயோகிக்கலாம் 

பேஸ்புக் பாதுகாப்பானதா?? :

 ஆர்குட்இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் என்று நிறைய சமூக வலைத்தளங்கள் (Social Networking) இணைய உலகில் இருக்கின்றன ,ஆனால் சமூக வலைத்தளங்களில் நம்பர் ஒன் னாக இருப்பது பேஸ்புக் தான்அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கோடிகளில் இருக்கிறது,அது மட்டுமின்றி அந்த எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து கொண்டே இருக்கிறது., இத்தனை பேர் இருக்கிற காரணத்தினாலோ என்னவோ பேஸ்புக் குடன் இலவச இணைப்பாக பிரச்சனைகள் ,ஹேக்கர்கள் தொந்தரவுவைரஸ் மற்றும் மால்வேர்களும் தாராளமாக கிடைக்கின்றன...

அதெல்லாம் சரி பேஸ்புக் பாதுகாப்பானதா இல்லையா என்று ஒற்றை வரியில் சொல்லப்பா என்கிறீர்களா?? 

பேஸ்புக்கை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தினால் அது பாதுகாப்பனதே !


பேஸ்புக் பாதுகாப்பு (சில அடிப்படைகள்):


 பேஸ்புக் என்பது சைக்காலஜி மற்றும் டெக்னாலஜி இரண்டின் சேர்க்கையாக இருக்கும் சமாச்சாரம்,இந்த இரண்டு விசயங்களிலுமே சர்ச்சைகள் ஏராளம் உண்டு  சரியா தவறா என்கிற பைனரி விடைகளுக்குள் இவை பிடிபடுவதில்லை.நல்லதும் கெட்டதும் சரிவிகித்தில் கலந்திருக்கும்.ஆங்கிலத்தில் இந்த மாதிரியான சமாச்சாரங்களை கிரே ஏரியா(Grey Area) என்று சொல்கிறார்கள் .

பயன்படுத்துகிற நபரை பொறுத்து பேஸ்புக் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்த என்னவெல்லாம் செய்யலாம், பேஸ்புக்கில் உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு என்றெல்லாம் வரிசையாக பார்க்கலாம்.

லாக் இன்:


  1. உங்கள் பாஸ்வேர்டை யாரும் எளிதில் கண்டுபிடிக்க இயலாதவாறு வைக்கவும் (உங்கள் பெயர், போன் நம்பர், அம்மா பெயர்,அப்பா பெயர், காதலர் பெயர்,நாய்க்குட்டி பெயர்,12345...,ABCD...,ASDF... போன்றவைகளை பாஸ்வேர்டாக வைக்கும் முட்டாள் தனத்தை ஒரு போதும் செய்யாதீர்கள் ).முடிந்தவரை Small letter, Capital letter, Number, Symbol என சகலமும் இணைந்த சாமானியமாக கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டை கொடுக்கவும்
  2. முகப்புத்தகத்தின் முகப்பில் லாகின் ஆகும் போது இருக்கும் திரையில் யூசர் நேம் ,பாஸ்வேர்ட் கொடுக்கும் இட்த்தின் அருகில் இருக்கும் கட்டத்தில் டிக் மார்க் இருந்தால் எடுத்து விடுங்கள்



  1. நீங்கள் பயன்படுத்தும் மெயில் சேவை, பேஸ்புக் ,உங்கள் கணினி  போன்றவற்றின் பாஸ்வேர்ட்கள் முடிந்தவரை வேறு வேறாக இருக்கட்டும்.

  1. உங்கள் மொபைல் எண்,பெர்சனல் இமெயில் ஐ.டி ,உங்களின் முழு முகவரி போண்றவற்றை பேஸ்புக்கிடம் கொடுக்க வேண்டாம்,பாஸ்வேர்ட் காரணங்களுக்காக மொபைல் எண் மற்றும் மெயில் ஐ.டி கொடுத்திருந்தால் அதை உங்களுக்கு மட்டும் தெரியும் வகையில் செட் செய்து கொள்ளுங்கள்.

  1. உங்கள் பெர்சனல் விசயங்களை டைம் லைனில் அல்லது Wall -ல் அனைவருக்கும் தெரியும் வகையில் Public ஆக பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

  1. பிரவுசிங்க் சென்டர்களிலோ, அல்லது புதிய நபர்களின் கணினியிலோ      பேஸ்புக் பார்க்கும்போது Safe browsing ஆப்சனை பயன்படுத்தவும்.
க்ரோம் (Chrome) பிரவுசரில் :  Incognito Window என்று ஒரு ஆப்சன் உள்ளது, இதை பயன்படுத்த சார்ட் கட் கீ: Ctrl + Shift + N .Incognito window- ல் நீங்கள் பிரவுசிங்க் செய்யும்போது உங்கள் பாஸ்வேர்ட் பதியப்படாது..


பயர்பாக்ஸ் பிரவுசரில் (Fire Fox):

Private Browsing ஆப்சனை பயன்படுத்தவும், இதற்கான சார்ட்கட் கீ 
Ctrl +shift + P


Safe Browsing பற்றி விரிவாக பிரிதொரு பதிவில் சொல்கிறேன்.அறிமுக பதிவில் அதிக தகவல்களை திணிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

  1. பேஸ்புக் பயன்படுத்தி முடிந்ததும் மறக்காமல் லாக் அவுட் செய்து விடுங்கள்.(நீங்கள் பேஸ்புக்கை Open செய்து வைத்துவிட்டு வேறு வெப்சைட்களை பார்வை இடும் போது நீங்கள் இன்டர்நெட்-ல் மேற்கொள்ளும் பிற வேலைகளை பேஸ்புக் ட்ரேஸ் செய்யும் என்று சொல்லப்படுகிறது.).

  1. நீங்கள் Shared computer களில் (அதாவது ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்ட கணினிகள் எ-கா பிரவுசிங்க் சென்டர்). பேஸ்புக் பயன்படுத்தும்போது ஹேக் செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்கள் பிரவுசரில் பேஸ்புக் முகவரியின் முன்புறத்தில் https:// என்று உள்ளதா என சரிபார்த்த பின்னர் பேஸ்புக்கை பயன்படுத்துங்கள்.



  1. உங்கள் மெயில்களுக்கு வந்திருக்கும் ,அல்லது பிற வெப்சைட்களில் உள்ள் பேஸ்புக் சம்பந்தமான லின்குகளை (Links) கிளிக் செய்வதற்கு முன்பு அது www.facebook.com என்று "ஸ்பெல்லிங்க்-சுத்தமாக" சரியாக உள்ளதா என சரிபார்த்து க்ளிக் செய்யுங்கள். சில வலை விரித்து காத்திருக்கும் பிஷிங்க் (Pishing) பேர்வழிகள் உங்கள் அக்கவுன்டை ஹேக் செய்யக்கூடும்.


பேஸ்புக்கில் உங்கள் பகிர்வுகளை பதியும்போது கவனிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் ,இன்னும் சில முக்கியமான எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம் !!


வாசகர்களின் கேள்விகள், சந்தேகங்கள்,கருத்துக்கள்,தகவல்கள் வரவேற்க படுகின்றன ., vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ கேளுங்கள்                                                             
லேபில்கள்:
facebook paathukaappu,facebook safety in tamil, facebook and girls, photo sharing tips for facebook, facebookkum penkalum,vijayan durai, பேஸ்புக்,பேஸ்புக்கும் பெண்களும்,பேஸ்புக் பாதுகாப்பு,பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருப்பது எப்படி, பெண்கள் பேஸ்புக்கில் படங்களை பகிரும் முன் கவனிக்க வேண்டியவை,விஜயன் துரை, பேஸ்புக் சேப்டி டிப்ஸ் தமிழில், தமிழில் பேஸ்புக், பேஸ்புக் புகைப்பட பகிர்வு  டிப்ஸ், பெண்கள் பாதுகாப்பு,கடற்கரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரை, விஜயன் துரை


 

Post Comment

Saturday, June 01, 2013

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் (பாகம் -18)


(கணிப்பொறி வரலாறு-8)
இந்த பதிவில் பாதியில் நின்று கொண்டிருக்கும்
ஹாலரித்-ன் கதையை தொடர்வோம்...




சென்செக்ஸ் கணக்கெடுப்பை எளிதாக்க பஞ்சட் கார்ட் களை பயன்படுத்த முடியும் என்கிற தீர்க்க தரிசனத்தை அரசு தரப்பிடம் அறிவித்தார் ஹாலரித், அமெரிக்க அரசாங்கம் 1890 ஆம் வருட சென்செக்ஸ் கணக்கெடுப்பில் ஹாலரித் சொன்ன யோசனையை பிரயோகிப்பதற்கு முன்பாக சோதனை முயற்சியாக நியூயார்க்கில் இருந்த அரசு நல மையத்தில் (New York City Board of Health ) கணக்கெடுப்பிற்கு பயன்படுத்தப்பட்ட்து, இந்த சோதனை ஓட்டத்திற்கு பிறகே 1890 ஆம் வருடத்திய சென்செக்ஸில் ஹாலரித்-ன் துளை இடப்பட்ட அட்டைகள் பயன்படுத்தப்பட்டன.

துளை இடப்பட்ட அட்டைகள் மூலம் தகவல் சேகரிப்பும் அட்டவனைப்படுத்துதலும் எப்படி சாத்தியமாயின ??

கணக்கெடுப்பு...

1890 ஆம் வருட சென்செக்ஸ் கணக்கெடுப்பின் போது கணக்கெடுக்கும் நபர் வீடு வீடாக சென்று கேள்விகள் கேட்டு விபரங்களை பேனா மூலம் பேப்பரில் எழுதிக்கொள்ளவில்லை
பேப்பருக்கு மாற்றாக துளையிடப்படாத பஞ்சட் கார்டும் ,பேனாவுக்கு மாற்றாக பேண்டோகிராப் கருவியும் அவர் கையில் இருந்தன


பேண்டோகிராப்:




                               பேனாவிற்கு பதிலாக பேன்டோகிராப்


பேண்டோகிராப் என்பது துளையிடப்படாத அட்டையில் துளையிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவி


பஞ்சட் கார்ட்:

1890 சென்செக்ஸ் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட பஞ்சட் கார்டுகள் 22 நெடு வரிசைகள்(Columns) கொண்டவைகளாகவும் ஒவ்வொரு நெடுவரிசையிலும் 8 துளையிடப்படக்கூடிய இடங்களையும்  கொண்டவைகளாக இருந்தன,

1890 அமெரிக்க சென்செக்ஸில் பயன்படுத்தப்பட்ட அட்டை


அவைகள் 3.25 மற்றும் 3.75 இன்ச் நீள, அகலங்களில் தயாரிக்கப்பட்டன,அக்காலத்திய அமெரிக்க டாலரின் அளவில், இந்த அளவில் பஞ்சட் கார்டுகள் தயாரிக்கப்பட காரணம் ஹாலரித் பஞ்சட் கார்டுகளை பராமரிக்க அமெரிக்க கருவூல பணப்பெட்டிகளை பயன்படுத்தியது தான்.

1880 கால டாலர்

 (இதன் பின்பு வந்த அட்டைகளில் வரிசைகளின் எண்ணிக்கைகள் பயன்பாட்டை பொறுத்து மாறுபட்டன) துளையிடப்பட்ட இடத்தை பொறுத்து அவைகள் குறிக்கும் விபரங்கள் மாறுபட்டன. பஞ்சட் கார்டில் போடப்பட்ட துளைகள் கணக்கில் வரும் நபர் ஆணா, பெண்ணா அவர் வயதென்ன போண்ற தகவல்களை குறித்தன.

            பேன்டோகிராப் உதவியுடன் அட்டையில் துளைடும் அம்மணி


இம்மாதிரி ஒரு நாளைக்கு 500 அட்டைகள் வரை கணக்கெடுப்பார்களாம்,
சரி வீடு வீடாக போய் பஞ்சட் கார்ட்-ல் தகவல்களை துளைகளாக குறித்துவிட்டாயிற்று , கணக்கெடுத்த தகவல்களை எப்படி எண்ணினார்கள்,இந்த பஞ்சட் கார்ட் எனப்படும் துளையிடப்பட்ட அட்டைகளின் தனித்துவமே எண்ணும் முறையை எளிதாகவும்,விரைவாகவும் மாற்றியது தான்.

எண்ணும் எந்திரம் (Tabulating Machine)

அட்டைகளில் துளையிடும் வேலையையும், அதை தரவாரியாக பிரித்து அடுக்கி வைக்கும் வேலையையும் தான் மனிதர்கள், செய்தார்கள்,எண்ணும் வேலையை எந்திரங்கள் செய்தன.

துளையிடப்பட்ட பஞ்சட் கார்ட்கள் கார்ட் ரீடர் கருவியில் ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கப்பட்டன.

எண்ணும் எந்திரத்தின் கீழ்பகுதியில் பஞ்சட் கார்டிற்கு ஏற்றமாதிரி டிரம்கள் (Drums) அமைக்கப்பட்டிருந்தன,இந்த டிரம்கள் பாதரசத்தால் (Mercury) நிறப்ப பட்டிருந்தன, எந்திரத்தின் மேல்புறத்தில் ஊசிகள் இருந்தன, துளையிடப்பட்ட அட்டைகள் (தகவல்கள் குறிக்கப்பட்ட அட்டைகள்) எண்ணும் சமயத்தில் எந்திரத்தின் நடுவில் வைக்கப்பட்டன.



துளையிடப்பட்ட அட்டைகளில் உள்ள துளைகள் ஊசிகள் மூலம் உணரப்பட்டன , துளை இருக்கும் இடங்களில் ஊசிகள் அட்டைகளை ஊடுருவி கீழ்புறம் இருந்த டிரம்களின் மீது படும், துளைகள் இல்லாத இடங்களில் ஊசிகள் டிரம்களின் மீது படாது,

ஊசிகளுக்கும் ,டிரம்களுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது,

             இப்படித்தான் இயங்கியது "எண்ணும் எந்திரம்")

துளை உள்ள இடங்களில் ஊசிகள் டிரம்கள் மீது படுகிறபோது மின்சுற்று ஒன்று பூர்த்தியாகும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது,

டிரம்களின் மீது ஊசி பட்டு மின் சுற்று முழுமை அடையும் போது  டிரம்களின் இடங்களை பொறுத்து கடிகார வடிவில் இருந்த " எந்திர எண்ணியில் " (Mechanical counter Dial)  ஒரு எண் கூடியது.(டயல்களுக்குள் ஒரு மின்காந்த சுழலி (Electromagnet motor )மின்சாரம் கிடைக்கும்போது ,(சென்செக்ஸ் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்ட டேபுலேடிங்க் மசினில் 40 Counter டயல்கள் இருந்தன.

எண்ணும் எந்திரம்


ஒரு பயிற்சியுள்ள பணியாளரால் ஒரு நிமிடத்தில் 50 -லிருந்து 80 அட்டைகள் வரை கார்ட் ரீடர் கருவியில் பொருத்த முடிந்தது. இந்த கருவிகளில் நினைவகம் எனப்படும் மெமரியோ, ரிசல்ட்டை அச்செடுக்க பிரின்டரோ கிடையாது , Counter டயல்களில் காட்டப்படும் ரீடிங்கை காகிதத்தில் குறித்து கொள்ளும் வகையிலேயே இருந்தது. ஒரு நாளின் முடிவில் இந்த டயல்கள் மீண்டும் ஜீரோவிற்கு செட் செய்யப்படும்,

கருவியிலிருந்து காகிதத்திற்கு 


எழுதப்பட்ட ரீடிங்க் டேலி செய்யப்படும் மீண்டும் மறு நாளில் ரீடிங்க் எடுக்கும் நபர் விட்ட இடத்தில் இருந்து கணக்கை தொடர்வார், முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹாலரித்-ன் டேபுலேடிங்க் மெசின் எண்ணிக்கை எந்திரமாக மட்டுமே இருந்தது,

அதற்கு பின்பு அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்கள் கூட்டல், கழித்தல் போன்ற விசயங்களை செய்யும் வகையிலும் , தானாக பஞ்சட் கார்டுகளை ரீடருக்குள் எடுத்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டன .

IBM நிறுவனம் அறிமுகப்படுத்திய டேபுலேசன் மெஷிங்களின் பட்டியல்:

 வருடம்         கருவி                                                     பணி


1890
சென்செக்ஸ்-டேபுலேடர்
எண்ணுதல் மட்டும், கார்டுகள் Manual Feeding முறையில் கருவிக்குள் செலுத்தப்பட்டன
1896
ஹாலரித் இன்டகிரேடிங்க் டேபுலேட்டர்
Manual feed, கூட்டல் மற்றும் எண்ணுதல்
1900
ஹாலரித் ஆடோமேடிக் Feed டேபுலேட்டர்
முதல் automatic-feed card reader, 1900 ஆம் வருட சென்செக்ஸில் பயன்படுத்தப்பட்டது
1906
ஹாலரித்Type I Tabulator
(Type 090) Automatic feed; உலோக cabinet; first wiring panel.
1921
ஹாலரித்Type III Tabulator  
(Type 091) பிரின்டருடன் வந்த முதல் மாடல்
192x
ஹாலரித்Type 3-S Tabulator
கழித்தல் கணக்கீடுகளை செய்த முதல் மாடல்
1928
ஹாலரித்Type IV Tabulator.
(Type 301 கார்ட் வகை ) First 80-column-card model.
1931
Columbia Difference Tabulator
Unique machine for CU Statistical Bureau (கொலம்பியா யூனிவர்சிட்டி காக தயாரிக்கப்பட்ட முதல் மாடல்
1933
IBM Type 285 Tabulator
Numeric only
1933
IBM 401 Tabulator.
Alphanumeric.
1934
IBM 405 Accounting Machine
Alphanumeric.
1948
IBM 402 Accounting Machine
Alphanumeric,
1949
IBM 407 Accounting Machine
High-speed alphanumeric.


 அடுத்த பதிவில் சந்திக்கிறேன்....


கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்க்கப்படுகின்றன,தொடரில் மாற்றங்கள் செய்யவும், தவறுகளை திருத்திக்கொள்ளவும் அவை எனக்கு உதவும்

 

Post Comment