Wednesday, October 16, 2013

புத்தகக் குறிப்புகள் -1

  புத்தகங்கள் மீது எனக்கு அதீத காதல் உண்டு.,அவை எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்துள்ளன ,கற்றுக்கொடுக்கின்றன.
 அனுபவமே கடவுள் என்கிறான் கண்ணதாசன்...அவன் அனுபவித்த அனுபவங்கள் அப்படி, அனைத்து விசயங்களையும் அனுபவித்துத் தான் கற்றுக்கொள்வேன் என்று அடம்பிடிப்பது அறியாமை.
 தன் அனுபவங்களிலிருந்து மட்டுமின்றி பிறரின் அனுபவங்களில் இருந்தும் கூட கற்றுக்கொள்ள வேண்டும். என்பது என் அனுபவம்.

 வாசிப்பை பொறுத்தவரையில் நான் ஒரு (சகலபட்சினி )ஆம்னிவோரசாக அனைத்து ரக புத்தகங்களையும் வாசிப்பேன். ப்ச்..ஆனால் சில மோசமான புத்தகங்கள் நம் நேரத்தை வீணடித்துவிடுகின்றனசர்வநிச்சயமாக மோசமான புத்தகம் என்பது மோசமான எதனைவிடவும் மிக மோசமானது என்பேன்.
 இப்போது வேலைவெட்டிகள் வெட்டியான நேரத்தை வெட்டிவிடுவதால் முன்பு போல நிறைய வாசிப்பதில்லை, வாசிக்க முடிவதில்லை...
எழுத்து என்னை இழுத்துச் சென்றால் மட்டுமே நான் வாசிப்பை தொடர்கிறேன்.

 புத்தகங்களைப் பற்றி எழுத்தாளர் கார்ல் சாகன் பின்வருமாறு சொல்லியிருக்கிறார். (நான் இவரது நாவலை மையமாக வைத்து படமாக்கப்பட்ட “contact” என்ற திரைப்படத்தை பார்த்திருக்கிறேன்,ஏலியன்கள்,டைம் ட்ரேவல், டைம் டயலேசன்...என்று Sci-Fi ரகம் )

" புத்தகம் என்பது எத்தனை அற்புதமானது,ஏகப்பட்ட வேடிக்கைகளுடன்,கரிய வளைந்த எழுத்துக்களுடன், மடிக்கும் வகையில் இருக்கும் அச்சடிக்கப்பட்டப் பக்கங்களுடன் மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தட்டையான பொருள் அது.ஆனால் அதில் நாம் கண்ணோடும் போது யாரோ ஒருவரின் மனவெளிக்குள் பிராயாணப்படுகிறோம்,அந்த யாரோ ஒருவர் பல்லாயிரம் வருடத்திற்கு முன் இறந்துபோனவராகக் கூட இருக்கலாம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட அதை எழுதிய அந்த யாரோ ஒருவர்  உங்களுக்குள்,உங்களுடன் நேரடியாக பேசுகிறார்.முன்பின் தெரியாத இருவரை சகாப்தங்கள் கடந்து சந்திக்க வைக்கும் இந்த எழுத்துக்கள் ஒருவேளை மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கக் கூடலாம்.புத்தகம் காலத்தின் கைவிலங்கை கழட்டி வீசி விடுகிறது.மனித இனம் மாயஜால வேளைகளை நிகழ்த்த வல்லது என்பதற்கு புத்தகங்களே சாட்சி "
புத்தகங்களைப் பற்றி இப்படியாக நிறைய பேருடைய பொன்மொழிகள் இருக்கின்றன...! தலைவர்கள்,புரட்சியாளர்கள்,சிந்தனையாளர்கள்,படைப்பாளிகள் என பல்வேறு பரிமாணங்களில் பலபேரை உருவாக்கிய பெருமை புத்தகங்களுக்கு உண்டு !
 புத்தகங்களைப் பற்றிய போதுமான புரிதல்கள் இல்லாத பல பேர் புத்தகப் பிரியர்களாக இருக்கும் சில பேரை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள் வானத்தில் இருந்து குதித்த ஒரு ஏலியனைப்போல...(இத்தகைய பார்வைகளை சந்திக்காத புத்தகப்பிரியர்கள் பாக்கியவான்கள் !)

தற்போதைய காலகட்டத்தில் வாசிப்புப் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது போலவே படுகிறது, சினிமா விமர்சனம் ,கிசுகிசு ,செய்தி மேய்தல் என்பதாகவோ ,சமையல்கலை,போட்டித்தேர்வு,பரிட்சை என்பதாகவோ தான் எழுத்துக்களின் பரிட்சயம் பலருக்கு வாய்க்கிறது.. எழுத்து திறந்து வைக்கும் வேறு பல கதவுக்குள் நுழைய மறுக்கிறார்கள் அவர்கள்.
 புத்தகக் கடைகளில் இருக்கும் அந்த குறைஜனக் கூட்டத்தை பார்க்கும் போதெல்லாம் சந்தோசமாக இருக்கிறது, "யப்பாடா இப்படியாக சில பேர் இருப்பதால் தான் புத்தகக் கடைகள் திறந்திருக்கின்றன,இல்லைனா என்னாவது.." என்று மனம் நினைத்துக்கொள்கிறது...

 .புதிது புதிதான விசயங்களை சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமின்றி என்னையும் புதுப்பிக்கின்றன சில புத்தகங்கள்.என்னில் தோன்றிய எண்ணிலாக்கேள்விகளை எண்ணிக்கைக் குறைத்து என்னை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன சில புத்தகங்கள்.சிலிர்க்க,சிந்திக்க,சிரிக்க என வகை வகையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றன என்னோடு சில புத்தகங்கள்..

 வாசிப்பு பற்றியும் நான் வாசித்தவைகள் பற்றியும், நான் நேசித்த புத்தகங்கள் பற்றியும் "புத்தகக் குறிப்புகள்" என்ற பெயரில் "கடற்கரை" வலைப்பூவில் பகிரலாம் என்று எண்ணமிட்டுள்ளேன் :)

                                                   

 

Post Comment

16 comments:

  1. சிந்திக்கும்படியாக அழகா சொல்லிடீங்க...!

    நீங்கள் படித்த புத்தகங்களை அறிமுகம் படுத்துங்கள்..

    பலரும் அறிய முற்படலாமே...
    நன்றி!

    ReplyDelete
  2. வணக்கம்

    அருமையான விளக்கம் பதிவு நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நல்லதொரு எண்ணம்... பலரும் அறிந்து கொள்வார்கள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தாங்கள் வாசித்த நூல்களை பகிருங்கள் ஐயா . காத்திருக்கிறேன்

    ReplyDelete
  5. புத்தகங்களில் இருந்து நீங்கள் வடிகட்டித் தரும் பில்ட்டர் காபியை குடிக்க நான் தயாராக இருக்கிறேன் !
    த.ம 3

    ReplyDelete
  6. ஆச்சரியம், நான் நேற்று ஒரு பதிவு எழுதி இருந்தால் அது புத்தகங்ககளைப் பற்றியதாகத் தான் இருக்கும், என் மனதிலும் அப்படி ஒரு பதிவு தான் ஓடிக்கொண்டுள்ளது, அதே போன்ற ஒரு பதிவை விஜயன் பதிவில் படித்தது நிறைவாக உள்ளது,

    பல பெரிய பெரிய அறிஞர்களின் குறிப்புகளை மேற்கோள் காட்டியது, பல பெரிய பெரிய விசயங்களைப் பற்றி பேசியது அருமை. ஆழமான கருத்துகள் நிச்சயம் ஆழமான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கும்... தொடர்ந்து உற்சாகமாக எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. புத்தகக் கடைகளைக் குறித்த கருத்தும், புத்த்கம் வாசிப்போர் பெரும் அனுபவம் குறித்ததும் உண்மையிலும் உண்மை... நல்லதொரு முயற்ச்சி ... தொடர்ந்திட வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  8. புத்தகங்கள் இருந்துவிட்டால் எந்த வயதிலும் 'bore' அடிக்காது. யாரும் பேச்சுத் துணைக்கும் வேண்டாம். என் அம்மாவிற்கு வயது 86. இன்னும் கையில் புத்தகத்துடன் தான் இருப்பார்.
    நல்ல முன்னுரை. நீங்கள் ரசித்த புத்தகங்களை பற்றி அறிய ஆவலுடன் இருக்கிறேன்.

    ReplyDelete
  9. நிறைய எழுதுங்கள் புத்தகம் பற்றி...

    அழகான பதிவு...

    ReplyDelete
  10. நல்ல முயற்சி விஜயன. நீ பெற்ற வாசிப்பின்பத்தை நாங்களும் பெறத் தயாராய் இருக்கிறோம்.

    ReplyDelete
  11. நானும் நான்காம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து புத்தகங்கள் படித்து வருகிறேன். படிக்க விரும்பும் கருத்துக்கள் மாறி இருக்கின்றனவே தவிர படிக்கும் எண்ணம் மாறவில்லை

    ReplyDelete
  12. ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

    ReplyDelete
  13. இணையம் வந்தபின் புத்தகங்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டது..அதை மீட்டெடுக்கும் தங்கள் முயற்சிக்கு நன்றி..

    ReplyDelete
  14. அயம் வெயிட்டிங் ...!

    ReplyDelete
  15. புத்தகங்கள் பற்றி தானே.. எழுதுங்கள்.. வாசிக்க காத்திருக்கிறோம்.. :)

    ReplyDelete
  16. arumaiyana karuthukkal nanbare

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....