Wednesday, August 28, 2013

முதல் கணினி அனுபவங்கள் (ரிலே ரேஸ் )


ஒரு குட்டி அறிமுகம்:

சில தினங்களுக்கு முன்  பதிவுலகில் "எனது கணினி அனுபங்கள் " என்கிற தலைப்பில் தங்களின் கன்னி கணினி அனுபவங்களை பத்தி பதிவெழுத சொல்லி பதிவர்கள் தங்களுக்குள் ஒரு ரிலே ரேஸ் நடத்தி வருவது யாவரும் அறிந்ததே!

இந்த ரிலே ரேஸ் 

ராஜி அக்கா -->  (துவக்கி வைத்தவர்)
தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன்  --->                                                                       
நாஞ்சில் மனோ அண்ணன்---> 
கே.ஆர்.விஜயன் அண்ணன் --->
செல்வி அக்கா --->
ஸ்கூல் பையன் சரவணன் சார் 


என்று பயணப்பட்ட இந்த ரேஸில் நம்ம ஸ்.பை சரவணன் சார் 




இவர்களுடன் என்னையும் எழுத சொல்லி அழைப்பு விடுத்திருந்தார், ஒரு மாதம் ஆகிவிட்டது அழைப்பு வந்து !!

இந்த ரிலே ரேஸில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி !! 

எனது முதல் கணினி அனுபவம்:

பள்ளிக்கால கணினி அனுபவம்

ஆரம்ப பள்ளி படிப்பு ஆங்கில வழியில் படித்த காரணத்தால் சிறு வயதிலேயே கம்ப்யூட்டரை புத்தகத்தில் பார்த்திருந்தேன் , கன்னி கணினி என் கண்ணில் பட்டபோது எனக்கு 8 வயது, எங்கள் பள்ளி ஆபிஸ் ரூமில் இருந்த அதை நான் டி.வி. பெட்டி என்றுதான் அதுவரையில் நினைத்திருந்தேன்., 
நான்காம் வகுப்பிலிருந்து  எங்கள் பள்ளியில் கம்ப்யூட்டர் பிராக்டிக்கல் என்று ஒரு பாடவேலை இருந்தது, அப்படி ஒரு வகுப்பின் போது ஒட்டு மொத்த வகுப்பையும் (எங்க க்ளாஸ்-ல மொத்தம் 10 பேரு) கூட்டமாக கூட்டிசென்று அந்த ஒற்றை கணினி முன் அமரவைத்தனர்.முதன்முதலில் எனக்கு அறிமுகமான கணினி அதுதான்.

(கருப்பு வெள்ளை மானிட்டர், MS-DOS ஆபரேட்டிங்க் சிஸ்டம்,எந்த தகவல் வேண்டுமானாலும் தட்டச்சு மூலம் தான் கேட்க வேண்டும் ,ஐகான், க்ளிக் போன்ற வின்டோ தனமான கணினி கிடையாது அது. மவுஸ் என்ற ஒரு உறுப்பே அந்த கணினியில் இல்லை  ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கட்டளைகள், )

எங்கள் ஆசிரியர் கம்ப்யூட்டர் பிராக்டிக்கல் வகுப்பில் எங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி எதுவும் சொல்லித்தர வில்லை (ரொம்ப நல்லதா போச்சுங்க !) , பிளாப்பி டிஸ்கை செருகி, விசைப்பலகையில் ஏதேதோ தட்டி "கார்-ரேஸ்", "டேஞ்சரஸ் டேவ்"  போன்ற விளையாட்டுக்களை வைத்து தருவார்., ஒவ்வொருவராக விளையாட ஆரம்பிக்க , க்ளாஸ் முடிய சரியாக இருக்கும் ! ஆனால் மவுஸ் கூட இல்லாத அந்த கணினிக்கு எங்கள் மத்தியில் மவுசு ரொம்ப அதிகம் போட்டி போட்டு கேம் விளையாடுவோம் !

விளையாட்டுக்கருவி

கணினி என்பது ஒருவகை விளையாட்டு சாதனம் போல என்றுதான் என் அப்போதைய அறிவு அடையாளம் காட்டியது !

ஆறாம் வகுப்பிற்கு பிறகு தமிழ் மீடிய பள்ளிக்கு தாவிய காரணத்தால் அதன்பிறகு கணினிக்கும் எனக்கும் சுத்தமாக எந்தவித தொடர்பும்  இல்லை, 

10- ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையில் எங்கள் ஊரில் இலவசமாக கணினி கற்றுக்கொடுத்த ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியில் Word, Excel,Powerpoint,Paint போன்ற வைகளை பயன்படுத்தும் வழிமுறையும், அடிப்படை கணினி அறிவும் கிடைத்தது...
இதன் பிறகு நான் தினமலரின் இலவச இணைப்பாக வந்த கம்ப்யூட்டர் மலர் வாசிக்க துவங்கினேன் ,அவ்வப்போது  தமிழ் கம்ப்யூட்டர் மற்றும்  Pc Magazine போன்ற புத்தகங்களை வாங்கி அவற்றுடன் இலவசமாக கிடைத்த சி.டி களை சேகரித்து வைத்திருந்தேன்.

உயர்நிலை படிப்பில் உயிரியல் என்பதால் கணினி சகவாசம் கிடைக்காமல் போனது., உயர்நிலை படிப்பு முடிந்தவுடன் பொறியியல் படிப்பில் சேர தீர்மானித்து பொறியியல் கலந்தாய்வுக்கு காலியிட நிலவரம் அறிய நன்பர்களுடன்  பிரவுசிங்க் சென்டர் சென்று காலியிட நிலவரம் அறிகிறேன்... அப்போது தான் இன்டர்நெட் டை  முதன்முதலில் பார்க்கிறேன் நான்.

கல்லூரிக்கால கணினி அனுபவம்

கல்லூரியில் சேர்ந்த பிறகு கல்லூரி நிர்வாகம் மடிக்கணினி கொடுத்தது(அதற்கும் சேர்த்து பணம் வாங்கிக் கொண்டது) .வாங்கிய புதிதில் அந்த மடிக்கணினியை 
எப்படி ஆன் செய்ய வேண்டும்.சார்ஜர் எங்கு செருக வேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை. லேப்டாப்- ன் Manual பார்த்து பயந்துகொண்டே சார்ஜரை செருகி ஆன் செய்து அந்த நாள் ஞாபகம் எனக்குள் இன்றும் இருக்கிறது .,அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய கற்றுக்கொண்டேன். கணினி இயக்க கற்றுக்கொடுத்த எனது முதல் முழுமையான  வாத்தியார் எனது லேப்டாப் தான்.( என் முதல் கம்ப்யூட்டர் குரு இப்போது என்னிடம் இல்லை  களவு போய் விட்டான் அவன் :( )
                                                                     கணினி குரு


எங்கள் கல்லூரியில் Wi-Fi இணைப்பு இருந்தது, கல்லூரி வளாகத்திற்குள் சென்றால் இன்டர்நெட் கனெக்ட் ஆகும், ஜிமெயில், ஆர்குட் , என்று நகர்புற மாணவர்கள் புண்ணியத்தில் நானும் அவர்கள் கணினியில் செய்யும் விசயங்களை வேடிக்கைப்பார்த்து கணினியில் இன்டர்நெட் பயன்படுத்த கற்றுக்கொண்டேன்.

கல்லூரியில் தருகிற அசைன்மென்ட் வேலைகள், படிப்பு சந்தேகங்கள் போன்றவற்றிற்கு  கம்ப்யூட்டர் ரொம்பவே உதவியது ...

சமுதாயம் வரையறுத்து வைத்திருக்கிற நல்லது கெட்டது பேதமின்றி எல்லா விசயங்களையும் என் தேடல்களின் தேவைக்கேற்ப இணையம் கொடுத்தது,  
இணையம் உதவியுடனேயே இணையம் பற்றியும் கணினி பயன்படுத்துவது பற்றியும் நிறைய கற்றுக்கொண்டேன்..

நான் கற்றுக்கொண்டதை பிலாக் மூலம் பகிரவும் கற்றுக்கொண்டேன் !!

தமிழ் பதிவுலகம் எனக்கு எப்படி அறிமுகமானது என்று வலைச்சரத்தில் எனது முதல் தினத்தில் எழுதியிருந்தேன் !!


நேரம் கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்..

டிஸ்கி :  ரொம்ப மொக்கை போட்டுட்டேனு நினைக்கிறேன், திட்டுறதா இருந்தா நீங்க ஸ்.பை. சரவணன் சார  தான் திட்டனும் !!




 

Post Comment

20 comments:

  1. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அனுபவம் அதில் எல்லாமும் வித்தியாசம்தான்...உங்களுடையதும் தான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வித்தியாசமான அனுபவம் ..!

    ReplyDelete
  3. //ஆனால் மவுஸ் கூட இல்லாத அந்த கணினிக்கு எங்கள் மத்தியில் மவுசு ரொம்ப அதிகம் //

    haa haa ...! Superu ..!

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கு நன்றி ஜீவன் அண்ணா

      Delete
  4. முதல் கணினி அனுபவப் பதிவு சிறப்பு. ஆறாம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்ததால் தமிழை ரசித்து எழுத முடிகிறது என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் !!

      Delete
  5. //ஆனால் மவுஸ் கூட இல்லாத அந்த கணினிக்கு எங்கள் மத்தியில் மவுசு ரொம்ப அதிகம்//

    இதை ரசித்தேன்...

    //எங்கள் பள்ளி ஆபிஸ் ரூமில் இருந்த அதை நான் டி.வி. பெட்டி என்றுதான் அதுவரையில் நினைத்திருந்தேன்//

    நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்...

    ReplyDelete
  6. //எங்கள் கல்லூரியில் Wi-Fi இணைப்பு இருந்தது, கல்லூரி வளாகத்திற்குள் சென்றால் இன்டர்நெட் கனெக்ட் ஆகும்,//

    எனக்கு wi-fi இப்போதான் தெரியும்...

    ReplyDelete
  7. //ரொம்ப மொக்கை போட்டுட்டேனு நினைக்கிறேன், திட்டுறதா இருந்தா நீங்க ஸ்.பை. சரவணன் சார தான் திட்டனும் !!//

    நல்லாத்தானே இருக்கு? மொக்கையெல்லாம் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான் !! அதான் டிஸ்கி:(Disclaimer) என்று போட்டிருக்கேன் :) நன்றி சார்

      Delete
  8. லேட்டானாலும் சுவாரஸ்யம்... வலைச்சரம் போய் பாத்தேன், பெரிய ஆளுப்பா நீ...

    ReplyDelete
    Replies
    1. என்ன சார் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க !! வாசிப்பிற்கும் நேசிப்பிற்கும் நன்றி

      Delete
  9. //நல்லது கெட்டது பேதமின்றி எல்லா விசயங்களையும் என் தேடல்களின் தேவைக்கேற்ப இணையம் கொடுத்தது, // ஹா ஹா ஹா கொடுத்தது என்ற வார்த்தையில் எழுத்தப் பிழையுள்ளது என்று நினைக்கிறன் கெடுத்தது என்று தான் இருக்க வேண்டும்.. ஹா ஹா ஹா

    ReplyDelete
  10. முதல் கணினி அனுபவங்களை அழகாய் பகிர்ந்துள்ளீர்கள் நண்பரே! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தொடர் வாசிப்புக்கு மிக்க நன்றி பிரகாசம் சார்

      Delete
  11. #திட்டுறதா இருந்தா நீங்க ஸ்.பை. சரவணன் சார தான் திட்டனும் !!#
    நான் மாலை போடுறதா இருக்கேன் யாருக்குப் போடுவது ?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு..! எனக்கு..! :)

      Delete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....