Saturday, August 24, 2013

பேஸ்புக்கும் பெண்களும் (பாகம்-4)

நன்பர்கள் ஜாக்கிரதை


இந்த பதிவில் ஒரு முக்கியமான விசயம் பற்றிப் பார்க்கலாம் , இது உங்கள் நன்பர்களை (Facebook Friends) பற்றியது

 பேஸ்புக் பயன்படுத்தும் நபர்கள் எல்லோரும் பேஸ்புக்கை ஒரே மாதிரியாக பயன்படுத்துவது கிடையாது, ஒவ்வொருவரின் உளவியல் சார்ந்து அது மாறுபடுகிறது, சில நபர்கள் பேஸ்புக்கை நட்பிற்காகவும், சிலர் வர்த்தக விசயங்களுக்காகவும், சிலர் பிரபலமாவதற்காகவும் சிலர் கவிதை,கட்டுரை,ஓவியம்,தனித்திறமை போன்றவற்றை வெளிக்காட்டவும்.., 
இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டு போகிறது
அட இதெல்லாம் நமக்கு தெரிஞ்ச விசயம் தானே, என்று நீங்கள் நினைக்கலாம்.

ஒவ்வொருவரின் மனதினை பொறுத்து psychological லாக பேஸ்புக் பயன்பாடு இருக்கிறது, திருடர்கள்,அயோக்கியர்கள், கீழ்த்தர எண்ணக்கார்ர்கள் என நிஜ உலகில் நடமாடும் மனிதர்ள் பலர் தங்களின் டிஜிட்டல் அவதாரங்களை பேஸ்புக்கில் எடுத்துக்கொண்டு உலா வருகிறார்கள்

இவர்கள் அடுத்தவர்களை வேவு பார்ப்பது, தெரியாத பெண்களின் பேஸ்புக் புரோபைல்களை நோட்டம் விடுவது, உங்கள் டைம்லைனில் அல்லது பேஸ்புக் Wall- ல் கண்ட கண்ட விசயங்களை டேக் (tag) செய்வது,உங்கள் நன்பர்கள் பட்டியலை மோப்பம் பிடிப்பது, உங்கள் Friend list-ல் உள்ள பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுப்பது என்று டிஜிட்டல் உலக அயோக்கியத்தனங்கள் மூலம் உங்களுக்கு தொந்தரவுகள் தரக்கூடலாம். இவர்களிடமிருந்து தற்காப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் இவர்கள் தரும் தொந்தரவுகள் பற்றியும் ஒவொன்றாக பார்க்கலாம்.


#  பேஸ்புக் மோசடிகள் :  (டேமேஜர்கள் )

உங்களுக்குத் தெரியுமா? உங்கள் புரோபைலில் நீங்கள் பகிரும் உங்களது  புகைப்படத்தைத்  திருடி ,அதே பெயரில் (சில மாற்றங்கள் செய்து) இன்னுமொரு பேஸ்புக் புரோபைலை ஓபன் செய்து, உங்கள் நன்பர்கள் பட்டியலில் உள்ள நன்பர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் இவர்கள்,உங்கள் நன்பர்களும் நீங்கள் தான் என்று நம்பி Friend Request ஐ ஏற்றுக்கொள்வார்கள் பின் உங்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் தகவல்களை பரிமாறி  உங்கள் நன்பர்களிடமும், பிற நபர்களிடமும் உங்கள் பெயரை டேமேஜ் செய்கிறார்கள்



உங்கள் நன்பர்களை மறைப்பது எப்படி??

பேஸ்புக்கில் உங்களுக்கு இருக்கும் நன்பர்கள் பட்டியலை நோட்டம் விட்டு, உங்கள் பெண் நன்பர்களுக்கு நட்பு அழைப்போ, தொந்தரவோ தர சில நபர்கள் இருக்கிறார்கள்,உங்கள் நேசமானவர்களை இந்த நாசமா போனவர்களிடமிருந்து காக்க நீங்கள் உங்கள் Friend list ஐ உங்களுக்கு மட்டும் தெரியும் வகையில் மறைத்து வைக்க வேண்டும்.

படி 1 : உங்கள் டைலைனிற்குள் சென்று கொள்ளுங்கள் (டைம்லைனிற்கு செல்ல உங்கள் பெயரினை க்ளிக் செய்க





படி2 : Friends என்பதை க்ளிக் செய்க ( நீங்கள் இப்போது உங்கள் நன்பர்கள் பட்டியலுக்கு இழுத்து செல்லப்படுவீர்கள்)





படி 3 : இங்கு வலது புறம் (Right side) Find friends ஆப்சன் அருகே உள்ள பென்சில் பட்த்தை க்ளிக்கவும்


படி 4 :இரண்டு ஆப்சன் கள் கொடுக்கப்படும் அதில் edit privacy என்பதை க்ளிக் செய்யவும்



படி 5: கீழே உள்ள மாதிரி ஒரு பெட்டி ஓபன் ஆகும். இங்கு நீங்கள் உங்கள் நன்பர்கள், நீங்கள் Follow செய்யும் நபர்கள், உங்களை Follow செய்யும் நபர்கள் போன்ற முத்தரப்பு நபர்களை உங்கள் தேவைக்கேற்ப மறைத்து வைக்கும் ஆப்சன் கள் உள்ளன , அதில் Only me செலக்ட் செய்து கொள்வதன் மூலம் முத்தரப்பு மக்களை அனைவரிடமிருந்தும் மறைத்து வைக்க முடியும்.


 



எச்சரிக்கைகள்  தொடரும்......

வாசகர்களின் கேள்விகள், சந்தேகங்கள்,கருத்துக்கள்,தகவல்கள் வரவேற்க படுகின்றன ., vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ கேளுங்கள்                                                            


 

Post Comment

10 comments:

  1. பயனுள்ள பகிர்வு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி. செய்துவிட்டேன்.

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு நன்றி. தாங்கள் கூறியவற்றை இப்பொழுதே செய்கின்றேன்

    ReplyDelete
  4. நிறைய தெரியாத தகவல்கள்... மாற்றிவிடுகிறேன்...

    ReplyDelete
  5. எச்சரிக்கைகளை அறிந்து கொள்ள தொடர்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  6. நீங்கள் செய்யும் ஒவ்வொரு எச்சரிக்கையும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    எனது முக நூல் புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்.

    நன்றி விஜயன்.

    ReplyDelete
  7. good
    Thank you.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  8. I did this . Again Thank you and Ranjany.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  9. நிறைய நண்பர்கலுக்கு இவை பயன்படும் அண்ணா.
    எனது வலைப்பூ http://www.itjayaprakash.blogspot.com

    நன்றி தெரிந்து கொண்டேன்

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....