Sunday, July 14, 2013

என் தேவதை அனிதாவுக்கு எழுதிய கடிதம்





(உன் வீட்டில் உன்னைத்தவிர யாருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லை என்பது மிகவும் வசதியாக போயிற்று, இந்த "தேவதைகளின் தேவதை" புத்தகத்திற்குள் நான் எழுதி வைத்திருக்கும் இந்த கடிதத்தை என் அனிதா வாசிக்க துவங்கியிருப்பாள் என்று நம்புகிறேன்)

ன்று காலையில் உன் பெயர் தாங்கி உன் வீட்டு முகவரியிலிருந்து ஒரு திருமண பத்திரிக்கை எனது அலுவலக விலாசத்திற்கு வந்திருந்தது,  உன் வீட்டு விலாசத்தை பார்த்தபோது மனது கொஞ்சம் பகீர் என்றது. பத்திரிக்கையை படித்து பார்த்தபோது தான் விவரம் புரிந்தது திருமணம் உன் அக்காவிற்கென்று. (அடிப்பாவி இப்படியா பதற வைப்பாய் ? )

ப்படி இருக்கிறாய் ?அத்தை,மாமா,உன் தம்பி ,அக்கா எல்லோரும் நலமா? கல்லூரி வாழ்க்கை எப்படி போகிறது ?,இங்கு நான் நலம் , சிங்கப்பூர் வாசம் நன்றாக தான் இருக்கிறது, குடும்பத்தையும், உன்னையும் பிரிந்து இருப்பதை நினைக்கும் போது மட்டும் சிறைவாசம் ஆகி கொல்கிறது ,கடந்த முறை ஊருக்கு வந்தபோது உன்னை பார்த்தது.. கிட்டத்தட்ட ஐந்து மாதம் ஆயிற்று உன்னைப் பார்த்து. வெளிநாடு கிளம்பும் செய்தியை உன் வீட்டில் சொல்ல வந்த போது உன் கையால் நீ கொடுத்த அந்த Coffee யின் இனிப்பு இன்னும் என் நாக்கிலேயே இருக்கிறது.

ன் செல்ல தேவதைக்கு செல்போன் கூட வாங்கி கொடுக்காத Strict மாமா மீது கோபம் கோபமாக வருகிறது., பேசி ரொம்ப நாள் ஆச்சே பத்திரிக்கையுடன் ஒரு கடிதம் எழுதி வைத்து அனுப்ப இவளுக்கு என்னவாம் என்று உன் மீதும் கொஞ்ச நேரத்திற்கு முன்பு வரை கோபப்பட்டு கொண்டு இருந்தேன்.

மேஜை மீதிருந்த கல்யான பத்திரிக்கையையும், கவரையும், கவரிலிருந்த உன் பெயரையும் உன் நினைவோடு வெறித்துப் பார்த்து கொண்டிருந்த போது கவருக்குள் வார்த்தைகள் எதனாலும் விவரித்து சொல்லிவிட முடியாத வெட்கமும் கோபமும் கலந்த உனது மௌனத்தை என்னால் காண முடிந்தது.

ன் 'அனி' ரொம்பவே புத்திசாலி சில நிமிடங்கள் உன்னை தவறாக எண்ணி கோபித்துவிட்டேன் !, இது ஒன்றும் எனக்கு புதிதல்ல ,மௌனம் உனக்கும் புதிதல்ல .  வார்த்தைகளின் கலப்பு சிறிது கூட இல்லாமல் நீ சிந்துகிற ஒற்றை மௌனத்திற்கே ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கிறதே ! எந்த அர்த்தத்தில் நீ மௌனித்திருக்கிறாய் என்பதை அறிய முடியாமல் ஒவ்வொரு முறையும் குழம்பிப்போகிறேன், பல முறை உன் மௌனப் புதிர்களுக்கு அர்த்தம் தெரியாமல் என் அறிவு தோற்றுப் போயிருக்கிறது !, என்ன செய்ய ? ஆண்டவன் படைப்பில் ஆணினமே இப்படித்தான் போல.

ந்த முறை உன் மௌனத்திற்குள் மௌனமாக ஒளிந்திருக்கும் உன் எண்ணங்களை என்னால் உட்கிரகிக்க முடிகிறது . நீ சொல்லாமல் சொல்லவந்த விசயத்தை சொற்கள் ஏதுமின்றியே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ன் அக்காவின் திருமணம் முடிந்து உன் திருமணப் பேச்சை எடுக்க குறைந்த பட்சம் ஒரு வருடமாவது ஆகும் என்று நம்புகிறேன்.கொஞ்ச நாள் பொறுமை காப்பதில் தவறேதும் இல்லை என்றே நினைக்கிறேன் !

ன் நான் காத்திருக்க வேண்டும் என்று கேட்கிறாயா? பண நிலையில் நல்ல நிலைக்கு வருவதற்கு முன் மணம் பற்றி பேசுவது மடத்தனம். என்பது என் கருத்து., நீயும் இதில் ஒத்துப்போவாய் என்று நம்புகிறேன், கடந்த முறை நம் ஊர் பெரிய கோவில் ஆயிரம் கால் மண்டபத்தை நாம் ஆயிரத்து நான்கு கால்களாக்கி நடந்திருந்த ஒரு தினத்தில் உன்னிடம் இதை நான் முன்பே கூறியிருந்தேன் !

ன்னோடு சேர்ந்திருக்க வேண்டும் என்ற ஆசை உன்னைப்போலவே எனக்கும் நிறையவே உண்டு.எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நீயும் நம்பிக்கை தளரவிடாதே ! மெல்ல மெல்ல நம் வீட்டில் நம் காதல் விவகாரத்தை புரிகிற மாதிரி எடுத்து சொல்ல முயற்சிக்கலாம். எதிர்ப்புகளை எதிர்ப்பதற்கு பதிலாக எதிர்கொள்ள கற்றுக் கொள்வோம்.

பிரிந்து வாழ்வது என்பது கொஞ்சம் கடினம் தான். நினைவுகளை துணைக்கழைத்துக்கொள்..உன் நினைவாக உன் நினைவுகள் என்னிடம் நிறையவே இருக்கின்றன. விவரமறியா வயதில் விளையாட்டுத்தோழியாக நீ அறிமுகமானது முதல்....

ன் கைப்பிடித்து வட்டமிட்டது, ஊஞ்சலில் உன்னை உட்காரவைத்து ஆட்டிவிட்டது, கண்ணாமூச்சி ஆடிய போது கண்ணை கட்டிக்கொண்டு உன்னைக் கட்டிப்பிடித்தது, ஒரு ஆரஞ்சு மிட்டாய் வாங்கி உன் பாவடைத்துணிக்குள் சுருட்டி எச்சில் படாமல் நீ கடித்து தந்தது., கண்கள் மூடி உன்னை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் இப்படி எத்தனையோ விசயங்களை என் கண் முன் காட்டி என்னை மீண்டும் குழந்தையாக்கி, குட்டி தேவதையாக மாறி என் இழந்துவிட்ட சொர்க்கம் நோக்கி இப்போதும் கூட என் அனிதா இழுத்து செல்கிறாள்.

னக்கு நினைவிருக்கிறதா, பாவடை சட்டைக்குள் மொட்டாக இருந்த நீ மலராக மாறி தாவனிக்கு தாவிய அந்த நாட்களில், அதன் அர்த்தம் கேட்டு விவரமறியாமல் விடலைத்தனமாக நான் கேட்ட வினாவிற்கு பதிலேதும் சொல்லாமல், என் மடியில் உன் கைகளால் தட்டிவிட்டு மாயமாய் மான் குட்டிப்போல ஓடி மறைந்து சொல்ல வந்த்தை சொல்லாமல் சொல்லிச்சென்றாயே !

ன் அனிதா புத்திசாலி எப்போது என்ன செய்ய வேண்டும் என்றும், எதை எப்போது செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு நன்றாக தெரியும்.

ன் மனதை நம்பிக்கைகளாலும்,நினைவுகளாலும் நிறைத்துக்கொள்.உன் அக்கா கல்யாணத்திற்கு வர முடியாததற்காக வருந்துகிறேன்.நிச்சயம் உன் கல்யாணத்திற்கு வருவேன் .
 - என்றும் உன் நினைவுகளோடு உன் விஜயன்   


குறிப்பு: இக்கடிதத்துடன் நான் தங்கியிருக்கும் வீட்டு விலாசத்தை இணைத்துள்ளேன்,அடுத்த முறை அந்த விலாசத்திற்கே கடிதம் எழுது, அலுவலக முகவரிக்கு வேண்டாம்.
                           

 

Post Comment

26 comments:

  1. பதட்டத்தோடு ஆரம்பித்து இணைய நினைவுகளோடு கடிதம்...

    // உன் கல்யாணத்திற்கு...// ?!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனியதோர் காதல் கடிதம்.....

    வெற்றி பெற வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. காதல் கடித போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் துரை

    ReplyDelete
  4. வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //உன் கல்யாணத்திற்கு வருவேன் //
    இந்த குசும்புதான் வேண்டாங்கறது.மாப்பிள்ளை எல்லாம கல்யாணம் எப்படி நடக்கும்.
    என் அணி புத்திசாய் என்று சொல்வதாகதட்டும் செல்போன் வாங்கிக் கொடுக்காத மாமாமீது கோபப் படுவதாகட்டும்,பத்திரிகையை பார்த்து பதறியாதாகட்டும்,. கைப்பிடிக்கவேண்டிய பெண்ணை கலங்காமல் காக்க தேவையான பொருளீட்டிய பின்பே திருமணம் என்ற உறுதியாகட்டும். கைகொடு விஜயன், கலக்கல் கடிதம்தான் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அருமையான வித்தியாசமான காதல் கடிதம்
    வெற்றி பெற வாழ்த்துக்கள் (போட்டியிலும் )

    ReplyDelete
  7. மென்மையான உணர்வுகளை ரசிக்க வைத்த காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. //உனக்கு நினைவிருக்கிறதா, பாவடை சட்டைக்குள் மொட்டாக இருந்த நீ மலராக மாறி தாவனிக்கு தாவிய அந்த நாட்களில், அதன் அர்த்தம் கேட்டு விவரமறியாமல் விடலைத்தனமாக நான் கேட்ட வினாவிற்கு பதிலேதும் சொல்லாமல், என் மடியில் உன் கைகளால் தட்டிவிட்டு மாயமாய் மான் குட்டிப்போல ஓடி மறைந்து சொல்ல வந்த்தை சொல்லாமல் சொல்லிச்சென்றாயே !//

    ரசித்த வரிகள்...

    ReplyDelete
  9. "நிச்சயம் உன் கல்யாணத்திற்கு வருவேன்" பெரிய கைதட்டல்கள். அசத்தல்! இன்னும் எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம்!கொஞ்சல்கள் நிறைவாக கொண்ட அழகான காதல். வாசிக்கும்போதே சுகமாக இருக்கிறது! வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  10. கற்பனையில்லாத நிஜக் காதலோ? ரசனைக்குப் பலவரிகள். ' உன் கல்யாணத்துக்கு நான் வருவேன்' பொருந்தவில்லை! அந்த வரியோடு 'உன் மணாளனாக' என்று சேர்த்து விடலாமோ!

    ReplyDelete
  11. // கவருக்குள் வார்த்தைகள் எதனாலும் விவரித்து சொல்லிவிட முடியாத வெட்கமும் கோபமும் கலந்த உனது மௌனத்தை என்னால் காண முடிந்தது.//
    ரசித்த வரிகள் இவை.

    //எதிர்ப்புகளை எதிர்ப்பதற்கு பதிலாக எதிர்கொள்ள கற்றுக் கொள்வோம்.//
    சபாஷ்!

    //மௌனத்திற்குள் மௌனமாக ஒழிந்திருக்கும் உன் எண்ணங்களை //

    ஒளிந்திருக்கும் என்று வரவேண்டும், இல்லையா?
    ஒழிந்திருக்கும் என்றால் பொருளே மாறுகிறதே!

    பொருளீட்டியபின் திருமணம் - நல்ல முடிவு. நீங்களும் உங்கள் 'அனி' கேற்ற புத்திசாலிதான்!

    //உன் திருமணத்திற்கு வருவேன்// எங்கேயோ இடிக்கிறது. நம் திருமணத்திற்கு என்று மாற்றுங்கள்.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. ரெம்ப அருமையான கடிதம் விஜயன் ..!

    அனியோடு அணிசேர வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  13. மறுமொழி @ ஜீவன்சுப்பு said...
    நன்றி ஜீவன் சுப்பு, அணி என் கற்பனை காதலி!

    ReplyDelete
  14. மறுமொழி @ Ranjani Narayanan said...

    கருத்தரைக்கு நன்றிகள் அம்மா !

    //ஒளிந்திருக்கும் என்று வரவேண்டும், இல்லையா?
    ஒழிந்திருக்கும் என்றால் பொருளே மாறுகிறதே!//

    எழுத்துப்பிழை சரி செய்து விட்டேன் சுட்டியமைக்கு நன்றி !

    //உன் திருமணத்திற்கு வருவேன்// எங்கேயோ இடிக்கிறது. நம் திருமணத்திற்கு என்று மாற்றுங்கள்.

    இல்லை அம்மா ! இது கிண்டல் கலந்த ஆறுதல் வார்த்தை !.... நானும் முதலில் நம் கல்யாணம் என்று மாற்றலாமா? என்று யோசித்தேன் ஆனால் இவ்வரிகள் கடைசியில் புன்னகை தரும் வகையில் இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன் ! :)

    ReplyDelete
  15. மறுமொழி @ ஸ்ரீராம் said...

    //கற்பனையில்லாத நிஜக் காதலோ? ரசனைக்குப் பலவரிகள். '//

    நிஜக்காதல் தான் ஆனால் கற்பனைகள் இதில் இருக்கிறது...

    //உன் கல்யாணத்துக்கு நான் வருவேன்' பொருந்தவில்லை! அந்த வரியோடு 'உன் மணாளனாக' என்று சேர்த்து விடலாமோ!//

    இலக்கணப்படி இவ்வரிகள் பொறுத்தமில்லாமல் இருக்கலாம்,நிச்சயம் இவ்வரிகள் இதை வாசிக்கும் காதலியின் இதழில் புன்னகையையும், சின்னக்கோபத்தையும் வரவைக்கும் ! :)

    ReplyDelete
  16. மறுமொழி @ ஸ்ரீராம் said...

    ஸ்ரீராம் அண்ணா சுப்ரமணி அவர்களின் மறுமொழியை கவனியுங்கள் நீங்கள் பொருந்தவில்லை இல்லை என்று சொன்ன அதே வரிகளுக்கு கைத்தட்டல் தந்துள்ளார்!!! :)

    ReplyDelete
  17. ஸ்கூல் பையன் said...

    நன்றி ஸ்கூல் வாத்தியாரே ! :)

    ReplyDelete
  18. மறுமொழி @ Ramani S said...

    நன்றி ரமணி அண்ணா !, வாழ்த்துக்களுக்கும் த.ம 4 க்கும்

    ReplyDelete
  19. மறுமொழி @ T.N.MURALIDHARAN said...
    //உன் கல்யாணத்திற்கு வருவேன் //
    இந்த குசும்புதான் வேண்டாங்கறது.மாப்பிள்ளை எல்லாம கல்யாணம் எப்படி நடக்கும்.
    என் அணி புத்திசாய் என்று சொல்வதாகதட்டும் செல்போன் வாங்கிக் கொடுக்காத மாமாமீது கோபப் படுவதாகட்டும்,பத்திரிகையை பார்த்து பதறியாதாகட்டும்,. கைப்பிடிக்கவேண்டிய பெண்ணை கலங்காமல் காக்க தேவையான பொருளீட்டிய பின்பே திருமணம் என்ற உறுதியாகட்டும். கைகொடு விஜயன், கலக்கல் கடிதம்தான் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  20. மறுமொழி @ கரந்தை ஜெயக்குமார் ,வெங்கட் நாகராஜ் said...,திண்டுக்கல் தனபாலன் said...


    நன்றி! நன்றி! நன்றி! கருத்துரைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் அண்ணான்மார்களே!

    ReplyDelete
  21. அருமையான காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. //பாவடை சட்டைக்குள் மொட்டாக இருந்த நீ மலராக மாறி தாவனிக்கு தாவிய// மிகவும் ரசித்த வரிகள் விஜயன்... இதே போன்ற நடையில் இன்னும் பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. மறுமொழி @ Tamizhmuhil Prakasam said...

    நன்றி !:)

    ReplyDelete
  24. மறுமொழி @ சீனு said...
    //பாவடை சட்டைக்குள் மொட்டாக இருந்த நீ மலராக மாறி தாவனிக்கு தாவிய// மிகவும் ரசித்த வரிகள் விஜயன்... இதே போன்ற நடையில் இன்னும் பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்//

    கண்டிப்பாக.... :)

    ReplyDelete
  25. உங்களின் அடுத்த பகிர்வு : http://schoolpaiyan2012.blogspot.com/2013/07/blog-post_24.html

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....