Friday, December 21, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-14

  கூட்டல் ,கழித்தல் ,பெருக்கல் ,வகுத்தல் என கணிதத்தின் முக்கியமான மற்றும் அடிப்படையான விசயங்கள் அனைத்தையும் செய்த உலகின் முதல் கருவி பற்றி இந்த வாரம் பார்க்கலாம் .

(என் மடிக்கணினி களவு போன காரணத்தால் என்னால் கடந்த இரு வாரங்களாக எழுத இயலவில்லை ).வாசக நன்பர்களின் தொடர் ஆதரவிற்கு என் நன்றிகள்.

முதல் கால்குலேட்டரை வடிவமைத்தவர் :

"கணக்கீடுகள் செய்யும்  கருவிகள் மூலம் கணக்கீடுகளில் திறமை  இல்லாத நபர்களே குறைந்த நேரத்தில் கணக்கீடுகள் செய்ய முடியும் போது ,திறமையான நபர்கள் தங்கள் பொன்னான நேரத்தை கணக்கீடுகளில் வீணடிப்பது வீண்"
                                                                                                                                        -லெப்னீஸ்
                                                                      இவரே அவர்
  கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் ஆகிய நான்கு செயல்களையும் செய்யும் கால்குலேட்டர் ஜெர்மானிய விஞ்ஞானியான லெப்னீஸ் (Gottfried Wilhelm Leibniz )என்பவரால் 1672 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சிறு விசயங்களின் கணிதம் கணிதவியலில் இதை வகை நுண் கணிதம் ( infinitesimal calculus ) என அழைக்கிறார்கள் ,நியூட்டனுக்கு முன்பே இக்கணித முறையை கண்டறிந்தவர் இவரே .
   லேப்னீஸ் கணக்கில் மட்டும் புலி இல்லை யற்பியல்,தொழில்நுட்பம்,தத்துவம்,உயிரியல் ,மருத்துவம் ,மனோதத்துவம் ,மொழியியல் அரசியல் என பல விசயங்களில் தன் பங்கை அளித்துள்ளார் அரசியல் ,தத்துவம் ,சட்டம் ,வரலாறு ,சமூக நீதி,கடவுளை பற்றிய கருத்துக்கள் ,மொழியியல் போன்ற துறைகளில் இவர் எழுத்து மூலம் தன் கருத்துக்களை தந்திருக்கிறார்.

முதல் நான்காம்ச கால்குலேட்டர் : 
  இந்த கால்குலேட்டரில் லெப்னீஸ் இதற்கு முன்பு வந்த கணக்கிடும் கருவிகளை போல் அல்லாமல் வித்தியாசமான கியர் மேக்கானிசத்தை பயன்படுத்தியிருந்தார் .இதற்கு லேப்நீஸ் சக்கரம் அல்லது லெப்னீஸ் உருளை என பெயர் வைத்துள்ளனர்
                                                               லெப்னீஸ் சக்கரம்
எப்படி வந்தது இந்த கால்குலேட்டர் ஐடியா ?
   லெப்னீஸ் , பாரீஸில் இருக்கும் போது மனிதர்களின் நடையை(நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கணக்கிடும் ,1700 களிலேயே இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... இதை இடுப்பில் கட்டிக்கொண்டு நடைபோட்டால்,இது நடையை எண்ணி கணக்குப்போடும் ) கணக்கிடும் கருவியான பேடா மீட்டர் (pedometer )எனும் கருவியில் இருந்து இந்த கால்குலேட்ட்டர்-கான ஐடியாவை பெற்றார். 
                                                        பேடா மீட்டர் (pedometer )
இதன் பிறகு இவர் பாஸ்கலின் கருவி பற்றி பென்ஸீஸ் (pensees )எனும் புத்தகம் மூலம் படித்து அறிகிறார்,பாஸ்கலின் கூட்டல் கணக்கு மட்டும் போடுவது கண்டு திருப்தி கொள்ளாத லெப்னீஸ் ,கூட்டல்,கழித்தல்,பெருக்கல்வகுத்தல் என சகலத்தையும் செய்யும் கருவியை வடிவமைக்க திட்டமிட்டார் .
                                                              லேப்நீசின் குறிப்புகள்
  பிபரவரி 1,1673 -ல் லண்டன் ராயல் சொசைட்டியில் (Royal Society of London ) இந்த கணக்கிடும் கருவியின் மரக்கட்டை மாடலை சமர்பித்து ,அதைப்பற்றி விளக்க உரை நிகழ்த்தினார் ,சுலபமாக ,துல்லியமாக ,வேகமாக கணக்கிடும் கருவி என்று லெப்னீஸ் இதனை குறிப்பிடுகிறார்
பின் வந்த பல கருவிகள் :
  லேப்நீசின் கணக்கிடும் கருவிக்கு பின் பல கருவிகள் அதே தத்துவத்தில் அதாவது லெப்னீஸ் சக்கரத்தை அதன் இதயமாக கொண்டு பல கருவிகள் வர ஆரம்பித்தன.
இவற்றுள் 1970 கள் வரையில் பயன்பாட்டில் இருந்த கார்டா (curta)எனும் கையடக்க கணக்கிடும் கருவி குறிப்பிடத்தக்கது .
                                                                              கர்டா
கடைசியாக ...
  லெப்னீஸின் இந்த கணக்கிடும் கருவி கருவி இப்போது ஜெர்மனியில் உள்ள National Library of Lower Saxony எனும் இடத்தில் மியூஸிய பொருளாக வைக்கப்பட்டுள்ளது ,பல கருவிகளுக்கு முன்னோடியாக இருந்த இந்த கருவி எலக்ட்ரானிக் கால்குலேட்டர் களின் படையெடுப்பால்  தோற்கடிக்கப்பட்டு  அமைதியாக துயில் கொள்கிறது ...

 

Post Comment

1 comment:


  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....